நவராத்திரி பாடல் வரிகள் | Navratri Song Lyrics in Tamil..!

Advertisement

நவராத்திரி பாடல் வரிகள் | Navratri Song Lyrics in Tamil..!

பொதுவாக பெண்கள் இருக்கும் ஒவ்வொரு வீடுகளிலும் ஆன்மீக வழிபாடு ஆனது இருக்கும் என்று கூறுவார்கள். அதிலும் குறிப்பாக செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிறு என இத்தகைய தினங்களில் தங்களுக்கு பிடித்த தெய்வங்களை நினைத்து இறை வழிபாடு செய்வார்கள். அந்த வகையில் ஒவ்வொரு வருடமும் நவராத்திரி பண்டிகை ஆனது சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இவ்வாறு இருக்கையில் சீதை இருக்கும் இடத்தினை இத்தகைய நவராத்திரி விரதத்தினை மேற்கொண்ட பிறகு தான் கண்டறியப்பட்டதாக இதிகாசம் கூறுகிறது.

மூன்று சக்திகளும் ஒன்றிய வடிவம் கொண்டவளே சண்டி ஆகும். இவ்வாறு முப்பெரும் தேவியரையும் ஒன்றாக இணைத்து வழிபடுவதே இந்த ஹோமத்தின் சிறப்பு. மேலும் இப்படிப்பட்ட சிறப்பினை கொண்ட நவராத்திரி விரதத்தை விஜயதசமி நாளில் கொண்டாடி வருகிறார்கள். மேலும் இத்தகைய நவராத்திரி தொடங்கும் நாள் மற்றும் முடிவடையும் நாள் என்றும் பூஜை செய்யப்பட்ட வருகிறது. ஆகவே இவ்வாறு கொண்டாடப்படும் நவராத்திரி பூஜையில் பாட வேண்டிய பாடல் வரிகள் என்ன என்பதை பார்க்கலாம் வாங்க..!

காமாட்சி அம்மன் விருத்தம் பாடல் வரிகள்

நவராத்திரி பாடல்கள்:

மங்கள ரூபிணி மதியொளி சூலினி மன்மத பாணியளே

சங்கடம் நீங்கிட சடுதியில் வந்திடும் சங்கரி சவுந்தரியே

கங்கண பாணியன் கனிமுகம் கண்டநல் கற்பகக் காமினியே

ஜெய ஜெய சங்கரி கவுரி கிருபாகரி துக்கநிவாரணி காமாட்சி

கான் உறுமலர் எனக் கதிர் ஒளி காட்டிக் காத்திட வந்திடுவாள்

தான்உறு தவஒளி தார்ஒளிமதி ஒளி தாங்கியே வீசிடுவாள்

மான்உறு விழியாள் மாதவர் மொழியாள் மாலைகள் சூடிடுவாள்

ஜெய ஜெய சங்கரி கவுரி கிருபாகரி துக்க நிவாரணி காமாட்சி

சங்கரி சவுந்தரி சதுர்முகன் போற்றிட சபையினில் வந்தவளே

பொங்கரி மாவினில் பொன்னடி வைத்துப் பொருந்திட வந்தவளே

எம்குலம் தழைத்திட எழில் வடிவுடனே எழுந்த நல் துர்க்கையளே

ஜெய ஜெய சங்கரி கவுரி கிருபாகரி துக்க நிவாரணி காமாட்சி

தணதண தந்தண நவில்ஒளி முழங்கிட தண்மதி நீ வருவாய்

கணகண கங்கண கதிர்ஒளி வீசிட கண்மணி நீ வருவாய்

பணபண பம்பண பறைஒலி கூவிட பண்மணி நீ வருவாய்

ஜெய ஜெய சங்கரி கவுரி கிருபாகரி துக்க நிவாரணி காமாட்சி

பஞ்சமி பைரவி பர்வத புத்திரி பஞ்சநல் பாணியளே

கொஞ்சிடும் குமரனைக் குணமிகு வேழனைக் கொடுத்த நல் குமரியளே

சங்கடம் தீர்த்திட சமர் அது செய்த நல் சக்தி எனும் மாயே

ஜெய ஜெய சங்கரி கவுரி கிருபாகரி துக்க நிவாரணி காமாட்சி

எண்ணியபடி நீ அருளிட வருவாய் எம் குலதேவியளே

பண்ணிய செயலின் பலனது நலமாய்ப் பல்கிட அருளிடுவாய்

கண்ணொளி அதனால் கருணையே காட்டி கவலைகள் தீர்ப்பவளே

ஜெய ஜெய சங்கரி கவுரி கிருபாகரி துக்க நிவாரணி காமாட்சி

இடர் தருதொல்லை இனிமேல் இல்லை என்று நீ சொல்லிடுவாய்

சுடர்தரு அமுதே சுருதிகள் கூறிச் சுகமது தந்திடுவாய்

படர்தரு இருளில் பரிதியாய் வந்து பழவினை ஓட்டிடுவாய்

ஜெய ஜெய சங்கரி கவுரி கிருபாகரி துக்க நிவாரணி காமாட்சி

ஜெய ஜெய பாலா சாமுண்டேஸ்வரி ஜெய ஜெய ஸ்ரீதேவி

ஜெய ஜெய துர்க்கா ஸ்ரீபரமேஸ்வரி ஜெய ஜெய ஸ்ரீதேவி

ஜெய ஜெய ஜெயந்தி மங்கள காளி ஜெய ஜெய ஸ்ரீதேவி

ஜெய ஜெய சங்கரி கவுரி கிருபாகரி துக்க நிவாரணி காமாட்சி

ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அஷ்டகம் பாடல் வரிகள்

Karpagavalli Nin Lyrics in Tamil:

கற்பக வல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன்
நற்கதி அருள்வாய் அம்மா! (கற்பக வல்லி)

பற்பலரும் போற்றும் பதி மயிலாபுரியில்
சிற்பம் நிறைந்த உயர் சிங்காரக் கோயில் கொண்ட
(கற்பக வல்லி)

நீ இந்த வேளைதன்னில் சேயன் எனை மறந்தால்
நான் இந்த நாநிலத்தில் நாடுதல் யாரிடமோ
ஏன் இந்த மௌனம் அம்மா ஏழை எனக்கருள
ஆனந்த பைரவியே ஆதரித்தாளும் அம்மா!
(கற்பக வல்லி)

எல்லோர்க்கும் இன்பங்கள் எழிலாய் இரங்கி என்றும்
நல்லாசி வைத்திடும் நாயகியே நித்ய
கல்யாணியே கபாலி காதல் புரியும் அந்த
உல்லாசியே உமாஉனை நம்பினேன் அம்மா!
(கற்பக வல்லி)

நாகேஸ்வரி நீயே நம்பிடும் எனைக் காப்பாய்
வாகீஸ்வரி மாயே வாராய் இது தருணம்
பாகேஸ்ரீ தாயே பார்வதியே இந்த
லோகேஸ்வரி நீயே உலகினில் துணையம்மா!
(கற்பக வல்லி)

அஞ்சன மை இடும் அம்பிகை எம்பிரான்
கொஞ்சிக் குலாவிடும் வஞ்சியே உன்னிடம் – அருள்
தஞ்சம் என அடைந்தேன் தாயே உன் சேய் நான்
ரஞ்சனியே ரட்சிப்பாய் கெஞ்சுகிறேன் அம்மா!
(கற்பக வல்லி)

நவராத்திரி நாமாவளி:

துர்க்கா தேவி

ஓம் துர்க்காயை நம
ஓம் மகா காள்யை நம
ஓம் மங்களாயை நம
ஓம் அம்பிகாயை நம
ஓம் ஈஸ்வர்யை நம
ஓம் சிவாயை நம
ஓம் க்ஷமாயை நம
ஓம் கௌமார்யை நம
ஓம் உமாயை நம
ஓம் மகாகௌர்யை நம
ஓம் வைஷ்ணவ்யை நம
ஓம் தயாயை நம
ஓம் ஸ்கந்த மாத்ரே நம
ஓம் ஜகன் மாத்ரே நம
ஓம் மகிஷ மர்தின்யை நம
ஓம் சிம்ஹ வாஹின்யை நம
ஓம் மாகேஸ்வர்யை நம
ஓம் திரிபுவனேஸ்வர்யை நம

லெட்சுமி ஸ்ரீதேவி

ஓம் மகாலக்ஷம்யை நம
ஓம் வரலெக்ஷம்யை நம
ஓம் இந்த்ராயை நம
ஓம் சந்த்ரவதனாயை நம
ஓம் சுந்தர்யை நம
ஓம் சுபாயை நம
ஓம் ரமாயை நம
ஓம் ப்ரபாயை நம
ஓம் பத்மாயை நம
ஓம் பத்மப்ரியாயை நம
ஓம் பத்மநாபப் ப்ரியாயை நம
ஓம் சர்வ மங்களாயை நம
ஓம் பீதாம்பரதாரிண்யை நம
ஓம் அம்ருதாயை நம
ஓம் ஹரிண்யை நம
ஓம் ஹேமமாலின்யை நம
ஓம் சுபப்ரதாயை நம
ஓம் நாராயணப் பிரியாயை நம

சரஸ்வதி தேவி

ஓம் சரஸ்வத்யை நம
ஓம் சாவித்ர்யை நம
ஓம் சாஸ்த்ர ரூபிண்யை நம
ஓம் ஸ்வேதா நநாயை நம
ஓம் ஸுரவந்திதாயை நம
ஓம் வரப்ரதாயை நம
ஓம் வாக்தேவ்யை நம
ஓம் விமலாயை நம
ஓம் வித்யாயை நம
ஓம் ஹம்ஸ வாகனாயை நம
ஓம் மகா பலாயை நம
ஓம் புஸ்தகப்ருதே நம
ஓம் பாஷா ரூபிண்யை நம
ஓம் அக்ஷர ரூபிண்யை நம
ஓம் கலாதராயை நம
ஓம் சித்ரகந்தாயை நம
ஓம் பாரத்யை நம
ஓம் ஞானமுத்ராயை நம

நவராத்திரி ஸ்லோகம்:

கிராஹுர் தேவீம் த்ருஹிண க்ருஹிணீ மாகமவிதோ
ஹரே: பத்நீம் பத்மாம் ஹரஸ ஹசரீ மத்ரித நயாம்..!
துரீயா காபி த்வம் துரதிகம் நிஸ்ஸீம மஹிமா
மஹாமாயா விச்வம் ப்ரமயஸி பரப்ரஹ்ம மஹிஷி..!

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மீக தகவல்கள்
Advertisement