ராஜ யோகம் அடையப்போகும் ராசிக்காரர்கள்
நம்மில் பெருபாலானோர் ராசி நட்சத்திரத்தை அதிக அளவில் நம்பக்கூடியவர்கள். ஒவொருவரின் கிரக நிலை அவர்களின் வாழ்க்கையை தீர்மானிக்கிறது. கிரகங்களின் இடமாற்றத்தால், ஒரு ராசியில், இரண்டு அல்லது மூன்று கிரகங்களின் கூட்டணி உருவாகும் சூழ்நிலை ஏற்படும். அது பலருக்கு நம்மையகவும், சிலருக்கு தீமையாகவும் முடியும்.
அந்த வகையில் இந்த அக்டோபர் மாதம் இரண்டு ராஜயோகங்கள் உருவாகப் போகின்றன. அந்த இரண்டு ராஜயோகங்களை அடையப்போகும் ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் முழுவதும் சிறந்தமாதமாக இருக்கும். இனி உங்களுக்கு அனைத்தும் ஏறுமுகம் தான். நீங்கள் நினைத்த அனைத்தும் நல்ல முறையில் நடைபெறும். வாருங்கள் அந்த யோகத்தை அடையும் ராசிக்காரர்கள் யார் என்று இந்த பதிவில் முழுமையாக பார்ப்போம்.
அக்டோபர் மாதத்தில் ராஜ யோகத்தை அடையும் ராசிக்காரர்கள்:
துலாம்:
துலாம் ராசிக்காரர்களுக்கு நீச்சபங்க ராஜயோகம் இனிமையாக இருக்கும். இவர்கள் புரட்டாசி மற்றும் ஐப்பசி மாதம் முழுவதும் பெரிய சாதனைகளை படைக்க முடியும். தொழிலில் வெற்றி உண்டாகும். புதிய வேலை தேடுபவர்களுக்கு அவர்களுக்கு ஏற்ற வேலை அமையும். அதே சமயம் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு பற்றிய நல்ல செய்திகள் கிடைக்கும். குடும்பத்தில் சகல லாபமும் இருக்கும்.
மேஷம்:
அக்டோபர் மாதத்தில் உருவாகும் ராஜயோகங்கள், மேஷ ராசிக்காரர்களுக்கு சுப பலன்களைக் கொடுக்கும். இந்த ராசிக்காரர்கள் எங்கு வேலை செய்தாலும் வெற்றி கிடைக்கும். ராஜயோக பலன்களால் வருமானம் பெருகும், எல்லாவிதமான சுகபோகங்களையும் இந்த மாதத்தில் நீங்கள் பெறுவீர்கள். முதலீடு செய்வதற்கு இது சிறந்த நேரமாக இருக்கும். ஆரோக்கிய தொல்லைகள் நீங்கும்.
கடகம்:
கடக ராசிக்காரர்களுக்கு நீச்சபங்க ராஜயோகம் மங்களகரமாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சம்பள உயர்வும், பதவி உயர்வுக்கான பலனும் கிடைக்கும். ராஜயோகத்தின் பலன் காரணமாக சமூகத்தில் மரியாதையும் அந்தஸ்த்தும் உயரும்.
சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்களுக்கு புத்தாதித்ய ராஜயோகம் வரப்பிரசாதமாக அமையும். இந்த நேரம் மிகவும் சாதகமான பலனைத் தரும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். இந்த சமயத்தில் பல சாதனைகள் படைக்கப்படும் வாய்ப்புகள் ஏற்படும். திருமண வரன்கள் அமையும்.
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |