செவ்வாய் பெயர்ச்சி 2023
பொதுவாக ஒரு கிரகம் மற்றொரு கிரகத்திற்கு பெயர்ச்சி அடைந்தால் அதன் தாக்கமானது எல்லா ராசிகளிலும் காணப்படும். அதே போல் தான் ஒரு கிரகம் மற்றோர் கிரகத்தில் சேரும் போது யோகங்கள் உருவாகிறது. இந்த யோகத்தால் நல்லவை இருக்கலாம், தீமையும் இருக்கலாம். கிரகங்களில் அனைத்திற்கும் தலைவனாக இருப்பது செவ்வாயானது கடக ராசிக்கு நுழைந்துள்ளார். கடக ராசியில் செவ்வாய் நுழைவதால் நீசபங்க ராஜயோகம் உருவாகிறது. இந்த யோகத்தால் சில ராசிக்காரர்களுக்கு செல்வத்தையும், மதிப்பையும் அள்ளி தர போகிறது. அவை எந்தெந்த ராசிக்காரர்கள் என்று தெரிந்து கொள்வோம் வாங்க..
நீசபங்க ராஜ யோகத்தால் எந்த ராசிகளுக்கு செல்வத்தை அள்ளி தர போகிறது:
கன்னி ராசி:
நீசபங்க ராஜ யோகம் கன்னி ராசிக்காரர்களுக்கு சாதகமான நாளாக இருக்கும். நீங்கள் செய்யும் செயல்கள் அனைத்தும் வெற்றியை தேடி வரும். இதுவரையில் ஏதும் சொத்தில் பிரச்சனை இருந்தால் அவை தீர்வு வருவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. வெளிவட்டாரத்தில் உங்களின் மதிப்பு அதிகரிக்கும். நீங்கள் ஏதும் முதலீடு செய்திருந்தால் அதிலிருந்து லாபம் எதிர்பார்க்காத அளவிற்கு லாபம் கிடைக்கும். குடும்பத்தில் பணவரவு அதிகரிக்கும்.
மீன ராசியின் திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் தெரியுமா.?
மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களுக்கு நீசபங்க ராஜயோகம் நல்ல பலன்களை அள்ளி தர போகிறது. மிதுன ராசியில் இரண்டாம் வீட்டில் செவ்வாய் பெயராய்ச்சி அடைவதால் பணியிடத்தில் உங்களின் மதிப்பு அதிகரிக்கும். பணியிடத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். மேலும் பதவி உயர்வும், சம்பள உயர்வும் கிடைக்கும். உங்களின் பணிக்கான அங்கீகாரம் கிடைக்கும். நீங்கள் மற்றவர்களுக்கு கடனாக கொடுத்த பணம் நீண்ட நாட்களாக வராமல் இருந்தால் அவை உங்களுக்கு வந்து சேரும்.
மேஷம்:
மேஷ ராசிக்காரர்களுக்கு நீசபங்க ராஜ யோகத்தால் நிதி அடிப்படையில் இருந்தால் பிரச்சனைகள் முடிவுக்கு வரும். மேஷ ராசியில் நான்காவது வீட்டில் செவ்வாய் பெயர்ச்சி அடைவதால் பணவரவில் இருந்தால் பிரச்சனைகள் நீங்கும். புதிதாக வாகனம் அல்லது சொத்து, வாங்குவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. பணியில் பொறுப்புகள் அதிகரிக்கும், மேலும் பணியில் புதிய வாய்ப்புகள் தேடி வரும். உங்களின் உழைப்பிற்கான அங்கீகாரமும், ஊதியமும் கிடைக்கும். நீங்கள் செய்கின்ற செயல்கள் அனைத்திற்கும் குடும்பத்தில் உள்ளவர்கள் பக்க பலமாக இருப்பார்கள்.
வீட்டில் உள்ள எல்லா கஷ்டங்களும் நீங்குவதற்கு தேங்காய் மட்டும் போதும்..
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |