Nellikai Maram Kanavil Vanthal
கனவு என்பது ஒருவர் தூங்கும் போது தோன்றும் நிகழ்வு, உருவம், ஒளி மற்றும் உணர்ச்சி பூர்வமான ஒரு செயல் இந்த அனைத்தும் தான் கனவு எனப்படுகிறது. இத்தகைய கனவு ஆனது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக வருகிறது. சிலருக்கு நிஜத்தில் என்ன நடக்கிறதோ அது அப்படியே கூட கனவாக வரும். ஏனென்றால் கனவில் நிறைய வகைகள் உள்ளது. அந்த கனவுகள் அனைத்திற்கும் ஒவ்வொரு பலன் இருப்பதாக ஆன்மீகத்தில் கூறப்படுகிறது. ஒருசிலருக்கு கனவில் வரும் நிகழ்விற்கான பலன் என்னவென்று தெரியும்.
ஆனால் மற்ற சிலருக்கு அத்தகைய பலன்கள் என்னவென்று தெரியாமலும் இருக்கும். அந்த வகையில் இன்றைய பதிவில் கனவில் நெல்லைக்காய் மரம் வந்தால் என்ன பலன் என்று தான் தெரிந்துக்கொள்ள போகிறோம்.
நெல்லிக்காய் மரம் கனவில் வந்தால் என்ன பலன்:
- நெல்லிக்காய் மரத்தை நீங்கள் கனவில் கண்டால் தெய்வ கடாக்சம் உங்களுக்கு பரிபூரணமாக கிடைத்துள்ளது என்று அர்த்தம்.
- நெல்லிக்காய் மரத்தில் பூக்கள் பூத்திருப்பது போல் கனவு கண்டால், குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும் என்பதை குறிக்கிறது. அத்திமட்டுமில்லாமல், சுப செய்திகளும் வரும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் கைகூடி வரும்.
- திருமணம் ஆன பெண்கள், நெல்லிக்காயை கனவில் கண்டால், அவர்கள் மனதில் உள்ள நீண்ட நாட்கள் விருப்பம், கனவு,ஆசை நிறைவேறும் என்பது அர்த்தம் ஆகும்.
- மாணவர்களுக்கு நெல்லிக்காய் மரம் கனவில் வந்தால், தேர்வில் வெற்றியும் பாராட்டையும் பெறுவார்கள் என்று அர்த்தம் ஆகும்.
- நெல்லிக்காய் மரத்தில் அதிக நெல்லிக்காய் காய்ந்து தொங்குவதை போல் கனவு கண்டால், அல்லது நெல்லிக்காயை நீங்கள் பறிப்பது போல் கனவு கண்டால், குடும்பத்தில் பொன், பொருள் சேர்க்கை உண்டாகும் என்று அர்த்தம். மேலும், வீட்டில் உள்ள வறுமை நிலை நீங்கும். பணியில் இருப்பவர்கள் அல்லது தொழில் செய்பவர்கள் இந்த கனவை கண்டால், அவர்களின் வேலை மற்றும் தொழிலில் மிகப்பெரிய வளர்ச்சியை காண்பார்கள்.
- ஏழ்மையான நிலையில் இருப்பவர்கள் இந்த கனவை கண்டால், அவர்கள் பொருளாதாரத்தில் முன்னேற்றமடைவார்கள் என்று அர்த்தம்.
- நெல்லிக்காயை நீங்கள் சாப்பிடுவதுபோல் கனவு கண்டால், உங்களுக்கு சுப செலவுகள் ஏற்படும் என்று அர்த்தம். மேலும், உங்களுக்கு விருப்பமான பொருளை வாங்கி மகிழ போகிறர்கள் என்பதையும் குறிக்கிறது.
- நெல்லிக்காயை நீங்கள், பிறருக்கு கொடுப்பதுபோல் அல்லது பிறர் உங்களிடம் நெல்லிக்காயை கேட்டு வாங்குவதுபோல் கனவு கண்டால் திடீர் செலவுகள் ஏற்படும் என்று அர்த்தம்.
- நெல்லி மரத்தை நீங்கள் வெட்டுவது போல் அல்லது பிறர் விடுவதுபோல் கனவு கண்டால் செய்யும் வேலையில் மிகப்பெரிய தடங்கல் ஏற்படும் என்று அர்த்தம்.
- நெல்லி மரம் பட்டு போவதுபோல் கனவு கண்டால் மன சங்கடங்கள் ஏற்படும் என்று அர்த்தம்.
நெல்லிக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள்..! யாரெல்லாம் சாப்பிட கூடாது தெரியுமா.?
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மீக தகவல்கள் |