Nellikai Maram Veetil Valarkalama | நெல்லிக்காய் மரம் வீட்டில் வளர்க்கலாமா
பொதுவாக வீட்டில் பணவரவு அதிகரிப்பது குறைவதும் சாதாரணமான ஒன்று. ஆனால் போக போக வீட்டில் பணப்புழக்கம் குறைந்து கொண்டே நாம் வீடுகளில் பணத்தை இழக்கக்கூடிய சில விஷயங்களை செய்து வருகிறோம் என்றே கூறலாம். ஆமாங்க தினமும் நாம் தவறாமல் செய்யும் செயல்களால் அதிர்ஷ்டம் குறையும் வாய்ப்புள்ளது. இதற்காக நாம் வீட்டில் அதிர்ஷ்டகரமான சில செயல்களை அறிந்து அதனை வீட்டில் செய்ய வேண்டும். அந்த வகையில் வீட்டில் செல்வ செழிப்பை உண்டாக்கும் மரங்களையும் செடிகளையும் வளர்க்க வேண்டும். எனவே வீட்டில் செல்வ செழிப்பு அதிகரிக்க எந்த மரத்தை வளர்க்க வேண்டும் என்பதை பின்வருமாறு தெரிந்து கொள்ளலாம் வாங்க.
Is Amla Tree Good for Vastu in Tamil:
வீட்டில் பணக்கஷ்டம் இல்லாமல் இருப்பதற்கும் நிம்மதியான வாழ்க்கை வாழ்வதற்கும் முக்கியமானது வாஸ்து. வாஸ்து நன்றாக இருந்துவிட்டால் அந்த குடும்பம் செல்வ செழிப்புடன் இருக்கும் என்பது ஐதீகம்.
வாஸ்து சாஸ்திரத்தை நாம் முறையாக பின்பற்றினால் அதிர்ஷ்டம் நம்மை தேடி வரும். எனவே வீட்டில் அதிர்ஷ்டத்தை உண்டாக்க நாம் என்ன செய்ய வேண்டும் தெரியுமா..?
வீட்டில் நெல்லிக்காய் மரம் வைக்க வேண்டும்:
வீட்டில் நெல்லிக்காய் மரம் வைத்து தினமும் தண்ணீர் ஊற்றி வளர்த்து வர வீட்டில் செல்வ செழிப்பு உண்டாகும் என்பது நம்பிக்கை. ஏனென்றால் சாஸ்திரத்தின்படி, மகாவிஷ்ணு நெல்லிக்காய் மரத்தில் தான் வீற்றிருக்கிறார்.
மகாவிஷ்ணுவை வழிபடும்போது நெல்லிக்காய் மரத்தையும் சேர்த்து வழிபட்டால் வீட்டில் மகிழ்ச்சியும், செழிப்பும் உண்டாகும் என்பது ஐதீகம்.
வீட்டில் செல்வ செழிப்பு உண்டாக இந்த செடியை வளர்த்து வாருங்கள் போதும்..!
இருந்தாலும் வீட்டில் நெல்லிக்காய் மரத்தை நடுவதற்கு முன்பு நாம் சில வாஸ்து சாஸ்திரங்களை கடைபிடிக்க வேண்டும்.
இந்த நெல்லி மரத்தை நீங்கள் வியாழன், வெள்ளி, அட்சய நவமி மற்றும் அமிர்த ஏகாதசி ஆகிய நாள்களில் நட வேண்டும்.
அடுத்து முக்கியமாக இந்த நெல்லி மரத்தை நீங்கள் வடக்கு, கிழக்கு அல்லது வடகிழக்கு திசையில் வைக்க வேண்டும்.
நெல்லி மரத்தால் கிடைக்கும் நன்மைகள்:
வாஸ்து சாஸ்திரத்தின்படி, நெல்லிக்காய் மரம் புனிதமானது. மங்களகரமான இந்த மரத்தை நம் வீட்டில் நடுவதன் மூலம் வீட்டில் இருக்கும் எதிர்மறை ஆற்றல் நீங்கி நேர்மறை ஆற்றல் உண்டாகும்.
நேர்மறை ஆற்றல் இருந்தால் வீட்டில் செல்வ செழிப்பு அதிகரிக்கும்.
நெல்லிக்காய் மரத்தை நடும் நபர்களுக்கு உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
உங்க வீட்டில ஒரு பையன் இருந்தா இந்த மரத்தை வளர்க்காதீங்க..
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |