அட்சய திருதியை அன்று மறந்தும் இதை மட்டும் செய்துவிடாதீர்கள்..!

Advertisement

Never do these Things on Akshaya Tritiya in Tamil

பொதுவாக இந்தியாவில் கொண்டாடப்படும் முக்கியமான பண்டிகைகளில் அட்சய திருதியும் ஒன்று ஆகும். ஒவ்வொரு வருடமும் சித்திரை மாதம், அமாவாசையை அடுத்து வரும் வளர்பிறை திரிதியை நாளை, ‘அட்சய திரிதியை’ திருநாளாகக் கொண்டாடுகின்றோம்.

அன்றைய நாளில் நீங்கள் எதை செய்தாலும் அது பல மடங்காக உங்களுக்கு கிடைக்கும். அதனால் அன்று என்ன செய்தாலும் கொஞ்சம் யோசித்து செய்ய வேண்டும். அதனால் தான் இன்றைய பதிவில் அட்சய திரிதியை அன்று என்னவெல்லாம் செய்யக்கூடாது என்று அறிந்துக் கொள்ள இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன்பெறுங்கள்.

இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்=> அட்சய திருதியை பூஜை

அட்சய திருதியை அன்று செய்யக்கூடாதவை..?

Nothing Should be done on Akshaya Tritiya in Tamil

அட்சய என்றால் அழியாது பெருகக் கூடியது என்று பொருள். அதிர்ஷ்டத்தையும், செழிப்பையும் கொண்டு வரும் இந்த பண்டிகை இந்த வருடம் ஏப்ரல் 22 ஆம் தேதி வருகிறது.

பொதுவாக அட்சய திருதியை எதை செய்தாலும் அல்லது வாங்கினாலும் அது நமக்கு பல மடங்காக திரும்ப கிடைக்கும். அதனால் தான் அன்று தங்கம், வெள்ளி போன்ற பொன் பொருள் ஆபரணங்கள் வாங்கினால் செல்வம் பெருகும் என்று மக்கள் கருதுகின்றனர்.

அட்சய திரிதியை அன்று நாம் செய்யும் நன்மைகள் பன்மடங்காக பெருகி, அழியாத பலன்களைப் பெற்றுத் தரும் என்று கூறப்படுவது போல் நாம் செய்யும் சிறிய தீய செயல் கூட நமக்கு பன்மடங்காக வந்து சேரும்.

அதனால் அட்சய திருதியை அன்று என்னவெல்லாம் கண்டிப்பாக செய்யக்கூடாது என்று தெரிந்துக் கொள்வோம் வாங்க.

இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்=> அட்சய திருதியை என்றால் என்ன

அட்சய திருதியை அன்று நீங்கள் செய்யக்கூடாதவை:

ஆத்திரம் கொள்ளக்கூடாது:

அட்சய திருதியை அன்று நீங்கள் கண்டிப்பாக ஆத்திரம் கொள்வதை தவிர்க்க வேண்டும் ஏனென்றால் ஆத்திரம் கொள்வது செல்வத்தின் கடவுளான லட்சுமி தேவியை வருத்தப்படுத்தும். அதனால் அன்று ஆத்திரம் கொள்வதை தவிர்த்துக் கொள்ளுங்கள்.

வீட்டை இருட்டாக வைத்திருக்கக்கூடாது:

ஆன்மிகத்தின் படி அட்சய திருதியை அன்று வீட்டின் எந்த பகுதியையும் இருட்டாக வைக்கக்கூடாது. வீட்டின் ஏதாவது ஒரு பகுதி இருளாக இருந்தாலும் உடனடியாக அங்கு விளக்கு ஏற்றவும். இதன் மூலம் லட்சுமி தேவியின் அருள் உங்களின் வீட்டிற்கு முழுமையாக கிடைக்கும்.

வெறும் கையுடன் வீட்டிற்கு திரும்பக்கூடாது:

நீங்கள் அட்சய திருதியை அன்று வெளியில் சென்று வீட்டிற்கு திரும்பி வரும் பொழுது கண்டிப்பாக வெறும் கையுடன் மட்டும் செல்லக்கூடாது. அதற்காக நீங்கள் தங்கம் மற்றும் வெள்ளி ஆபரணங்களை தான் வாங்கி கொண்டு செல்ல வேண்டும் என்று அர்த்தம் இல்லை.

அதாவது அட்சய திருதியை அன்று வெளியில் சென்று வீட்டிற்கு திரும்பி வரும் பொழுது ஏதாவது ஒரு தானியங்கள் அல்லது வேறு ஏதேனும் பொருட்களைக்கூட வாங்கி கொண்டு செல்லலாம்.

இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்=> இந்த ஆண்டு அட்சய திருதியை எப்போது வருகிறது தெரியுமா

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 
Advertisement