கார்த்திகை அன்று இதை செய்யாதீர்கள்
பொதுவாக வீட்டில் விளக்கு ஏற்றுவது வழக்கம் ஆனால் சிலர் வீட்டில் ஏதாவது ஒரு நாட்களின் மட்டும் விளக்கு ஏற்றுவார்கள். அதேபோல் சிலர் விரதம் என்பது ஒரு நாட்கள் மட்டும் இருப்பார்கள். அது அவர் அவர் உடல் நிலையை பொறுத்தது. வீட்டில் தீபம் ஏற்றுவது என்பது லட்சுமி கடாட்சம் கிடைக்கும் ஒன்றாகவும் அதை நாம் செய்ய அதிகம் முன் வருவதில்லை. அதேபோல் விளக்கு ஏற்றத்தை ஒரு மாதம் வரை விழாவாக கொண்டவார்கள்.
அந்த மாதம் கார்த்திகை மாதம் ஆகும், அந்த மாதத்தில் வரக்கூடிய கார்த்திகை தீபம் அன்று ஊரே ஜொலிக்கும். அதற்கு மட்டும் ஏன் அந்த அளவிற்க்கு முக்கியதுவம் தருகிறார்கள். அதேபோல் அந்த நாட்களில் விரதம் இருந்தால் அவ்வளவு நன்மைகளா? அதை பற்றி தெரிந்துகொள்ள 👉👉கார்த்திகை விரதம் இருப்பது எப்படி அப்படி செய்யக்கூடிய பெரிய விழாக்களில் இந்த தவறுகளை செய்துவிடாதீர்கள் அது என்ன என்பது தொடர்ந்து படித்து தெரிந்துகொள்ளுங்கள்.
கார்த்திகை தீபம் ஏற்றும் முறை:
பொதுவாக கார்த்திகை அன்று நாம் திருவண்ணாமலையில் தீபம் ஏற்றிய பிறகு தான் வீட்டில் தீபம் ஏற்றுவோம் ஆனால் அப்படி செய்யக்கூடாது முதலில் வீட்டில் பரணி தீபம் ஏற்றவேண்டும், அதன் பின்பு கார்த்திகை தீபம் ஏற்றவேண்டும் மேலும் ஒரு நாட்கள் மட்டும் தீபம் ஏற்றவேண்டும்.
நாம் கார்த்திகை அன்றும், பரணி நட்சத்திரம் அன்றும் அதன் பின் ஒரு நாள் மட்டும் தீபம் ஏற்றவேண்டும்.
அப்படி இல்லையென்றால் பரணி நட்சத்திரம் அன்று தீபம் ஏற்றிவிட்டு தொடர்ந்து 10 நாட்கள் கூட தீபம் ஏற்றலாம் அதில் ஒரு தவறும் இல்லை.
கார்த்திகை அன்று இதை செய்யாதீர்கள்:
வீட்டில் அகல் விளக்கு ஏற்றுவது வழக்கம் ஆனால் அங்கு நாம் செய்யும் தவறு என்னவென்றால் நீங்கள் தீபம் ஏற்றும் போது நேரடியாக தரையில் வைக்கக்கூடாது, எப்படி ஏற்றவேண்டுமென்றால் ஒரு வாழையிலையை வாங்கிக்கொண்டு அதனை சிறிய அளவில் நறுக்கி கொண்டு அதன் மீது வைக்கலாம். அப்படி இல்லையென்றால் அரச இலையை எடுத்துவந்து அதன் மீது வைக்கலாம்.
பெண்கள் விளக்கு ஏற்றும் போது தலையை விரித்துபோட்டுக்கொண்டு விளக்கு ஏற்றக்கூடாது, அதேபோல் நெற்றியில் திலகம் இல்லாமலும் விளக்கு ஏற்றக்கூடாது.
அதேபோல் கையில் வளையல் இல்லாமலும் விளக்கு ஏற்றக்கூடாது ஏனென்றால் நாம் முதலில் நீங்கள் மங்களகரமாக இருந்தால் மட்டுமே வீட்டில் லட்சுமி கடாட்சம் கிடைக்கும்.
கார்த்திகை அன்று மாலை 6 மணிக்கு விளக்கு ஏற்றி இருக்கவேண்டும் திருவண்ணாமலையில் அப்போது விளக்கு ஏற்றிருப்பார்கள் ஆகையால் 6 மணிக்குள் வீட்டில் மகா தீபத்தை ஏற்றியிருக்கவேண்டும்.
கார்த்திகை அன்று பித்தளை விளக்கு வெள்ளி விளக்கு போன்ற விளக்குகளை விட அகல் விளக்கை ஏற்றுவது நல்லது. ஆகையால் கார்த்திகை தீபம் அன்று அகல் விளக்கை முதலில் ஏற்றுங்கள்.
அதேபோல் விளக்கை ஏற்றும் போது நல்லெண்ணெய் தீபம் அல்லது நெய் தீபம் ஏற்றுங்கள்.
சிலர் கலந்த எண்ணெய் ஏற்றலாம் என்று சொல்லவிட்டு அதனை வாங்கி ஏற்றுவீர்கள் அப்படி ஏற்றும் போது கலந்த எண்ணெய் 5 ரகம் வாங்கி அதனை ஒன்றாக சேர்த்து அதன் மூலம் ஏற்றுங்கள்.
வீட்டில் எல்லா இடங்களிலும் ஒரு விளக்கை ஏற்றுங்கள் தூங்கும் அறையிலும் விளக்கை ஏற்றலாம். ஏற்றுவது அகல் விளக்காக இருக்கவேண்டும்.
இதையும் ஷார் செய்யுங்கள் 👉👉 இனிய கார்த்திகை தீபம் வாழ்த்துக்கள்
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |