2024-ல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய 4 ராசிக்காரர்கள் நீங்களா..?

Advertisement

2024 ராசிபலம் 

2023 ஆம் ஆண்டு முடிந்து 2024 ஆம் ஆண்டு பிறக்கப்போகிறது. பொதுவாக அனைவரும் புதுவருட ராசி பலன்களை தெரிந்துகொள்ள மிகவும் ஆவலாக இருப்போம். ஆண்டின் தொடக்கத்தில் புதன், கேது மற்றும் சுக்கிரனின் பெயர்ச்சியால் பெரும்பாலான ரசிகர்களுக்கும் அதிஷ்டமான பலன்களும் குறிப்பிட்ட சில ராசிகாரர்களுக்கு கஷ்டங்களும் நிறைந்ததாக இந்த ஆண்டின் தொடக்கம் காணப்படுகிறது.

புதன், கேது, சுக்கிரனின் பெயர்ச்சியால், 2024-ன் தொடக்கத்தில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய அந்த ராசிக்காரர்கள் யார், அவர்களின் பலன்கள் எப்படி இருக்கின்றது என்பதனை இந்த 2024 ராசிபலன்களின் அடிப்படையில் தெரிந்துகொள்ளவோம் வாருங்கள்.

புத்தாண்டு ராசிபலன் 2024:

சிம்மம்:

சிம்மம்

2024-ம் ஆண்டின் தொடக்கத்தில் சிம்ம ராசிக்கு 9-ல் குரு, 2-ல் கேது, 4-ல் புதன் சுக்ரன் இணைவதால், 5-ல் சூரியன் செவ்வாய்,7-ல் சனி, 8-ல் ராகு என்ற கிரகணங்கள் காணப்படுவதால், இந்த ஆண்டு சிம்ம ராசிக்காரர்களுக்கு தன்னம்பிக்கை அளிக்க கூடிய ஆண்டாக இருக்கும்.

தொழிலும் மற்றும் வியாபாரத்தில் ஏற்பட கூடிய தடைகளை எதிர்ப்பு போராடவேண்டிய சூழல் உருவாகும். பணியிடத்தில் உங்களின் திறமைக்கு ஏற்ப பலன் கிடைக்க பொறுமையுடன் காத்திருக்க வேண்டும். பணியிடத்தில் கவனமுடன் செயல்படுவது நல்லது. நிதிநிலைமை சீராக காணப்பட்டாலும் தேவைகள் அதிகரிக்கும்.

ரிஷபம்:

new year 2024 rasi palan in tamil

2024-ம் ஆண்டின் தொடக்கத்தில் ரிஷிப ராசிக்கு 12-ம் இடத்தில் குரு, 5-ம் கேது, 7-ல் புதன் சுக்ரன்ஆகியோரின் சேர்க்கையும், 8-ல் சூரியன் செவ்வாய், 10-ல் சனி, 11-ல் ராகு என்ற கிரஹ நிலை காணப்படுவதால் இந்த வருடம் உங்கள் முயற்சிக்கான பலன்கள் கிடைக்கும்.

தொழில் வியாபாரம் மற்றும் பணியிடத்தில் உங்களின் திறமைக்கு ஏற்ற உயர்வு கிடைக்கும். புதிய வாய்ப்புகள் ஏற்றுக்கொள்வது நல்லது. பணவிஷயத்தில் அதிக எச்சரிக்கையுடனும் கவனத்துடனும் செயல்பட வேண்டும்.

விருச்சிகம்:

விருச்சிகம்

2024-ம் ஆண்டின் தொடக்கத்தில் விருச்ச ராசிக்கு 6-ல் குரு, 11-ல் கேது, 2-ல் சூரியன் செவ்வாய், 4-ல் சனி, 5-ல் ராகு குடியிருப்பதால் உங்களுக்கு இந்த வருடம் உயர்வும் மதிப்பும் அதிகரிக்கும்.

ஆனாலும் பொறுப்புகள் கூடும்போது மிகவும் கவனத்துடன் செயல்படுவது நல்லது. பணியிடம் மற்றும் தொழிலில் சக பணியாளர்களுடன் நட்பு பாராட்டுவது சிறந்தது.  பணியிடத்தில் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். பொருளாதார ரீதியில் வரும் பிரச்சனைகளை நம்பிக்கையுடன் எதிர்கொள்ளுங்கள்.

கும்பம்:  

கும்பம்

2024-ம் ஆண்டின் தொடக்கத்தில் கும்ப ராசிக்கு3-ல் குரு, 8-ல் கேது, 10-ல் புதன் சுக்ரன் சேர்க்கை, 11-ல் சூரியன் செவ்வாய், உங்கள் ராசியான கும்பத்தில் சனி, 2-ல் ராகு அமைந்துள்ளது. இந்த ஆண்டு உங்களுக்கு சிறந்த ஆண்டாக இருக்கும். உங்களின் உயர்வுக்கு தன்னம்பிக்கை செயல்பட வேண்டும். பணியிடத்தில் இந்த வருடம் உங்களுக்கு ஏறுமுகமாக காணப்படும். பொருளாதார பிரச்சனைகள் சீராகும்.

உங்களை எதிர்காலம் பற்றிய முடிவினை யோசித்து எடுங்கள். பிறர் பிரச்சனைகளில் தலையிடாமல் இருப்பது நல்லது. ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் தேவை.

டிசம்பர் 16 முதல் உருவாகும் புதாதித்ய ராஜயோகத்தால் 2024 இந்த 3 ராசிக்காரர்களுக்கு அதிஷ்ட கதவு திறக்கவுள்ளது..

 

2024 சனி பெயர்ச்சியில் 3 ராசிக்காரர்கள் லாபம் பெற போகிறார்கள். இந்த ராசிக்காரர்கள் நீங்கள் தானா!

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மீக தகவல்கள்
Advertisement