நிலை வாசலில் பதிக்க வேண்டிய பொருள்கள்

Advertisement

நிலை வாசலில் பதிக்க வேண்டிய பொருள்கள் | Nilai Vasal Vaikka Vendiya Porutkal

பொதுவாக வீட்டில் வந்து உங்களை பார்ப்பதற்கு முன் வாசலை பார்த்து தான் வருவார்கள். இந்த வாசலில் பல பேர் பலவற்றை தொங்க விட்டிருப்பார்கள். ஒரு தேங்காய் மஞ்சள் நிறத் துணியில் மறைத்து கட்டி தொங்க விடுவார்கள். கற்றாழை முழுவதுமாக தொங்க விட்டும் இருக்கும் வேரினை கட்டியும் மாந்திரீக மக்களால் கொடுக்கப்பட்ட தகடு போன்ற பொருட்களை உன்னால் தொங்க விடுவதும் நிறைய இடங்களில் பார்த்திருப்பீர்கள்.

ஆனால் இது போல வைப்பதினால் திருஷ்டி நீங்குகிறது, பணவரவு அதிகரிக்கிறது என்று நம்புகிறார்கள். ஆனால் இவற்றை எல்லாம் ஆன்மிகத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் நம்புவார்கள். அதனால் தான் இந்த பதிவில் நிலைவாசலில் வைக்க வேண்டிய பொருட்கள் பற்றி அறிந்து கொள்வோம் வாங்க..

நிலை வாசலில் வைக்க வேண்டிய பொருட்கள்:

கோலம்:

நிலை வாசலில் பதிக்க வேண்டிய பொருள்கள்

நம் முன்னோர்களின் காலத்தில் மண் தரை இருந்தது, அதனால் அதனை சாணத்தால்  மொழுவி விட்டு கோலம் போடுவார்கள். ஆனால் இன்றைய காலத்தில் டைல்ஸ் தரையாக மாறிவிட்டது. இதில் கோலம் கூட யாரும்போடுவதில்லை. கோல ஸ்டிக்கரை வாங்கி வந்து ஒட்டி விடுகிறார்கள்.

குபேர மூலையில் பூஜை அறை வைக்கலாமா..

நிலைவாசலில் மாவு கோலமிட வேண்டும். அப்படி உங்களால் மா கோலம் போட முடியவில்லை என்றால் கோலமாவில் ஆவது கோலம் போட வேண்டும்.

விளக்கு:

நிலைவாசலில் தேவதை குடியிருப்பார்கள். அதனால் அதனை மங்களகரமானதாக இருக்க வேண்டும். அதனால் தான் நம் முன்னோர்கள் காலத்தில் அகல் விளக்கில் ஏற்றி வைப்பார்கள். இல்லையென்றால் மாடத்தில் வைப்பார்கள். இது போல வைப்பதினால் தேவதைகள் குடியிருப்பாள்.

பதிக்க வேண்டியது:

கோமதி சக்கரம், நவரத்தினங்கள், மகாலட்சுமி சோலி போன்றவை பதிக்க வேண்டும். இப்படி வைப்பதினால் என்ன பயன் என்றால் உங்கள் வீடு தேடி வந்து உங்களை திட்ட வேண்டும் என்று வருவார்கள். அவர்களை கூட கோபம் குறையுமாம்.

இதனை நிலைவாசலில் மேலே பதிய வேண்டும்.  ஒருவேளை வீடு கட்டி விட்டீர்கள் என்றால் இந்த மூன்று பொருட்களையும் ஒரு மூட்டையாக கட்டி வாசலில் தொங்க விட வேண்டும்.

மஞ்சள் குங்குமம்:

நிலை வாசலில் பதிக்க வேண்டிய பொருள்கள்

நிலைவாசலில் மஞ்சள் குங்குமம் வைப்பது அவசியமானது. ஏனென்றால் இப்படி வைப்பதினால் மங்களமான ஒன்றாக இருக்கிறது.

அடுத்து நிலைவாசலில் விநாயகர் படத்தை வைக்க வேண்டும்.

அதிர்ஷ்டத்தை அள்ளித்தரும் குபேரன் 108 போற்றி
குபேர விளக்கு ஏற்றும் முறை..

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் – Aanmeega Thagavalgal 

 

Advertisement