நினைத்த வேலை கிடைக்க மந்திரம்
மனிதனாக பிறந்த அனைவருக்கும் படித்து முடித்து விட்டு ஒரு நல்ல வேலைக்கு செல்ல வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் அதற்கான வாய்ப்புகள் என்பது மிகவும் நடக்காமலே சிலருக்கு தள்ளிபோகி கொண்டே இருக்கும். ஒரு சிலர் வேலை கிடைத்தும் கூட படிப்பிற்கு ஏற்ற மாதிரியாக இல்லை என்று யோசித்து விட்டு வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து விடுவார்கள். அதிலும் சிலர் நினைத்த வேலை கிடைத்தால் தான் வேலைக்கு செல்ல வேண்டும் என்ற நம்பிக்கையுடன் இருந்து கொண்டு ஆன்மீக வழிபாட்டில் ஈடுபட்டு கொண்டிருப்பார்கள். அதனால் இன்று நீங்கள் நினைத்த வேலை கிடைத்து கைநிறைய சம்பாதிக்கக்கூடிய ஒரு மந்திரத்தை பற்றி தான் தெரிந்துக்கொள்ள போகிறோம்.
வீட்டில் செல்வம் சேர கல் உப்பை பயன்படுத்துங்க..
வேலை கிடைக்க முருகன் மந்திரம்:
பொதுவாக ஆண்களாக இருந்தாலும், பெண்களாக இருந்தாலும் வேலையினை பொறுத்தவரை ஒரே மாதிரியான மனப்பான்மை தான் காணப்படுகிறது. அந்த வகையில் பார்க்கும் போது வேலை என்ற விஷயத்தில் அனைவரும் ஒத்து போகின்றார்கள்.
ஆனால் ஒரு சிலருக்கு நினைத்த வேலை கிடைக்க வேண்டும் என்ற கவலை இருக்கும். மற்ற சிலருக்கு ஏதோ ஒரு வேலை கிடைத்தால் போதும் என்ற எண்ணம் இருக்கும்.
மேலே சொல்லப்பட்டுள்ள இரண்டும் எப்படியாவது நிறைவேற வேண்டும் என்று ஒவ்வொருவரும் அவர் அவர்களுக்கு பிடித்தமான கடவுள்களை நினைத்து வழிபடுவார்கள்.
அந்த வகையில் நினைத்த வேலை மற்றும் வேலை கிடைக்காமல் இருபவர்களுக்கு வேலை கிடைக்க என இரண்டிற்கும் ஏற்ற மாதிரியான முருகன் மந்திரத்தை கூறினால் போதும் வேலை கிடைத்து விடும்.
பணக்கஷ்டம் வராது துளசி வேரை இப்படி பண்ணுங்க
மந்திரம்:
வேலை கிடைக்க முருகன் மந்திரம் | ||
ராஜராஜஸகோத் பூதம்! ராஜீவாயத லோசனம்! ரதீசகோடி ஸௌந்தர்யம்! தேஹிமே விபுலாம் ச்ரியம்!! |
தினமும் காலையில் குளித்து விட்டு பின்பு முருக பெருமான் படத்திற்கு விளக்கேற்றி வழிபட வேண்டும். அதன் பிறகு மேலே சொல்லப்பட்டுள்ள மந்திரத்தை நாள் ஒன்றுக்கு 108 முறை என 48 நாட்கள் தொடர்ச்சியாக சொல்ல வேண்டும்.
இவ்வாறு செய்வதோடு மட்டும் இல்லாமல் வேலை கிடைப்பதற்கான முயற்சியினையும் தொடச்சியாக செய்வதன் மூலம் விரைவில் நினைத்த வேலை கிடைத்து விடும்.
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |