நினைத்தது நடக்க சொல்ல வேண்டிய மந்திரம்..!

Advertisement

நினைத்தது நடக்க சிவ மந்திரம் | Ninaithathu Nadakka Sivan Manthiram

ஆன்மீக நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்..! மனிதனாக பிறந்த அனைவருக்கும் கனவுகள், ஆசைகள், நம்பிக்கை மற்றும் தன்னம்பிக்கை, லட்சியம் என இவை அனைத்துமே இல்லாமல் இருக்காது. அப்படி பார்த்தால் இவை அனைத்தினையும் நாம் ஒரே நேரத்தில் செய்ய முடியாது. ஆகையால் ஒவ்வொன்றாக தான் நினைவேற்ற வேண்டும். அந்த வகையில் எந்த ஒரு வெற்றியை நாம் அடைய வேண்டும் என்றாலும் அதற்கு கண்டிப்பாக முயற்சி என்ற ஒன்றை கடைபிடிக்க வேண்டியது மிகவும் அவசியம். ஏனென்றால் முயற்சி என்றை ஒன்றை நாம் ஓரளவாவது செய்தால் மட்டுமே நினைத்து நிறைவருவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது.

இவ்வாறு பார்க்கையில் தான் நினைத்த காரியம் விரைவில் நிறைவேற வேண்டும் என்ற ஆசை இருப்பது போலவே சிலருக்கு ஆன்மீக நம்பிக்கையும் காணப்படும். அதாவது தான் நினைத்த காரியம் நினைவேற வேண்டும் என்பதற்காக ஏதேனும் மந்திரம் அல்லது பரிகாரங்களை கூறுவார்கள். ஆகவே இன்று நினைத்தது நடக்க சொல்ல வேண்டிய சிவ மந்திரம் பற்றி தான் இன்று பார்க்கப்போகிறோம்.

கனவில் கடவுள் வந்தால் என்ன பலன் 

நினைத்தது நடக்க சொல்ல வேண்டிய மந்திரம்:

எல்லாம் அல்ல சிவபெருமானுக்கு என்று பல பக்தர்கள் இருந்து கொண்டு தான் உள்ளார்கள். அதிலும் குறிப்பாக பிரதோஷம் மற்றும் சிவராத்திரி என இத்தகைய தினங்களில் தான் சிவனை அதிகப்படியாக வணங்குவார்கள்.

ஏனென்றால் பிரதோஷம் விரதம் இருப்பதன் மூலம் நாம் செய்த பாவங்கள் அனைத்தும் நம்மை விட்டு விலகும் என்பது ஒரு ஐதீகமாக இருக்கிறது. எனவே சிவன் பாதியாகவும், பார்வதி தேவி பாதியாகவும் விளங்கக்கூடிய அழித்தல் தொழிலை செய்யக்கூடிய சிவன் மந்திரத்தை நாம் நினைத்த காரியங்கள் நிறைவேற எப்படி சொல்ல வேண்டும் என்று விரிவாக பார்க்கலாம்.

நினைத்தது நடக்க சிவ மந்திரம்

முதலில் நீங்கள் சுத்தமாக குளித்து விட வேண்டும். அதன் பிறகு உங்களது வீட்டிற்கு அருகில் உள்ள சிவன் கோவிலுக்கு சென்று விடுங்கள். இப்போது ஓம் ஸ்ரீம் கிரீம் கிலீம் ஹம் வசிய சிவ ஓம் என்ற மந்திரத்தை 108 முறை செய்ய வேண்டும்.

மேலும் முதல் தவிர மற்ற நாட்கள் இந்த மந்திரத்தை உங்களது வீட்டில் தினமும் 3 முறை செய்தாலே போதும். அதேபோல் வீட்டில் செய்யும் போது காலையில் கையில் ஒரு செம்பில் தண்ணீர் வைத்து கொண்டு சூரியனை நோக்கி இந்த மந்திரத்தை சொல்ல வேண்டும். அதன் பின்பு சிறிது அந்த தண்ணீரையும் குடியுங்கள்.

அதேபோல் மந்திரத்தை கூறும் போது மூச்சியினை பொறுமையாக உள்ளே இழுத்து வெளியே பொறுமையாக விட்டு கொண்டு மனதிற்குள்ளே சொல்ல வேண்டும்.

குறிப்பாக இந்த மந்திரத்தை சொல்லிவிட்டு அப்படியே விட்டு விடாமல் உங்களுக்கு என்ன நடக்க வேண்டுமோ அதற்கான முயற்சியினையும் தொடர்ச்சியாக செய்ய வேண்டியது அவசியம்.

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 

 

Advertisement