Ninaithathu Niraivera Anjaneyar Pariharam
ஆன்மீக வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். நினைத்தது நடக்க ஆஞ்சநேயரை எப்படி வழிபட வேண்டும் என்பதை இப்பதிவின் வாயிலாக அறிந்து கொள்ளலாம் வாங்க. பொதுவாக, நாம் அனைவருக்குமே நாம் மனதில் நினைக்கும் விஷயம் நிஜத்திலும் நடக்கக்கூடாதா என்ற ஏக்கம் இருக்கும். பலரும் மனதில் பலவிதமான ஆடைகளை வைத்துக்கொண்டு இது நம் வாழ்க்கையில் நடக்காதா என்று ஏங்கி கொண்டிருப்பார்கள்.
ஒவ்வொருவருக்கும் மனதில் ஒவ்வொரு விதமான ஆசை, விருப்பம் இருக்கும். அந்த ஆசைகள் என்றாவது நடந்து விடாதா என்று தினம் தினம் புலம்பி கொண்டிருப்போம். நினைத்த காரியம் நடப்பதற்கு ஆன்மீக ரீதியாக பல பரிகாரங்கள் உள்ளது. அந்த வகையில் நினைத்த காரியம் கைகூடி வர ஆஞ்சநேயர் பரிகாரம் எப்படி செய்ய வேண்டும் என்பதை பின்வருமாறு கொடுத்துள்ளோம். வாருங்கள், படித்து தெரிந்துகொள்ளலாம்.
நினைத்தது நடக்க ஆஞ்சநேயரை எப்படி வழிபட வேண்டும்.?
- நினைத்த காரியம் நடக்க ஸ்ரீ ராமஜெயம் எழுதி ஆஞ்சநேயருக்கு மாலையாக அணிவித்து வழிபடலாம். இது அனைவர்க்கும் தெரிந்த ஒன்றே. இதோடு மட்டுமில்லாமல், இதோடு சேர்த்து மிக முக்கியமான ஒன்றினையும் செய்ய வேண்டும். அதுதான், ஆஞ்சநேயரின் வால் வழிப்பாடு.
- ஆஞ்சநேயரின் வால் வழிப்பாடு செய்தால், நினைத்த காரியம் விரைவில் கைகூடி வரும். இந்த வழிபாட்டை, ஆஞ்சநேயருக்கு உகந்த நட்சத்திரமான மூலம் நட்சத்திரம் வரும் நாளிலும் அல்லது வியாழக்கிழமை அல்லது சனிக்கிழமை போன்ற நாட்களில் செய்ய தொடங்கலாம்.
- முதலில், ஆஞ்சநேயரின் படம் ஒன்றினை எடுத்து பூஜை அறையில் வைத்து கொள்ளுங்கள். அந்த படத்தில் ஆஞ்சநேயரின் வால் நன்றாக தெரியும் படி இருக்க வேண்டும்.
- காலையில் எழுந்து, குளித்து முடித்துவிட்டு, பூஜை அறையில் உள்ள ஆஞ்சநேயர் படத்திற்கு சந்தனம், குங்குமம் வைத்து அலங்கரித்து கொள்ளுங்கள்.
- அடுத்து, ஆஞ்சேநேயர் படத்திற்கு முன்பாக ஒரு நெய் தீபத்தை ஏற்றி, இரண்டு வாழைப்பழம் வைக்க வைக்க வேண்டும்.
- பிறகு, ஒரு புதிய நோட்டை எடுத்து, அந்த நோட்டில் ஸ்ரீ ராமஜெயம் என்று கூறியவாறு 108 முறை எழுத வேண்டும். பிறகு, இதனை மாலையாக கட்டி ஆஞ்சநேயருக்கு சாற்ற வேண்டும்.
- அடுத்து, ஆஞ்சநேயரின் வாலின் அடிபகுதியில் சந்தனம் குங்குமம் வைத்து ஒரு பொட்டு ஒன்று வைக்க வேண்டும்.
- இந்த வழிபாட்டை மறுநாளும் செய்ய வேண்டும். இதேபோல் வழிபாடு செய்து, முதல் நாள் ஆஞ்சநேயர் வாலில் பொட்டு வைத்திருப்போம் அல்லவா.! அதற்கு அருகில் மற்றொரு பொட்டை வைக்க வேண்டும்.
- இதேபோல், இந்த வழிபாட்டை தொடர்ந்து 48 நாட்கள் செய்து வர வேண்டும். 48 நாட்கள் நிறைவடைந்த பிறகு, 49 ஆவது நாள், அருகில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்று, ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சாற்றி வழிபாட்டை நிறைவு செய்ய வேண்டும்.
- தகுதிக்குட்பட்ட நல்ல விஷயத்தை நினைத்து, கடவுளிடம் மனமுருகி வேண்டுகிறோமோ அந்த காரியம் கண்டிப்பாக நிறைவேறும். நீங்கள் மனதில் நினைத்தது நல்லதாக இருந்தால் அந்த கடவுள் அதனை நிறைவேறுவார். அதுவே, பேராசையுடமோ, பிறருக்கு தீங்கு விளைவிக்கும் எண்ணத்துடனோ ஏதேனும் எண்ணம் இருந்தால் எப்போதுமே நடக்காது என்பதை நினைவில் வைத்து கொள்ளுங்கள்.
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மீக தகவல்கள் |