Noi Theerkum Manthiram in Tamil
மனிதர்களாக பிறந்த அனைவருக்கும் ஒவ்வொரு பிரச்சனை இருக்கிறது. அதாவது சில பேருக்கு பண பிரச்சனை, ஆரோக்கிய பிரச்சனை என்று நம் வாழ்வில் பல முறைகளில் பிரச்சனைகளில் வந்து கொண்டு தான் இருக்கின்றது.
பண பிரச்சனையாக இருந்தால் கஷ்டப்பட்டு சம்பாதித்து விடலாம் என்ற நம்பிக்கை இருக்கும். கடன் பிரச்சனையாக இருந்தால் எப்பாடுபட்டாவது கடனை அடைத்து விட வேண்டும் என்று நினைப்போம். ஆனால் ஆரோக்கியத்தில் ஏதும் பிரச்சனை ஏற்பட்டால் எப்படி சரி செய்வது என்று மருத்துவமனை சென்று அலைவோம். இதற்கு ஆன்மிகத்தில் வழி இருக்கிறது அதை செய்யாமல் இருப்பீர்கள். ஆமாங்க தீராத நோய் தீர்ப்பதற்கு மந்திரத்தை சொன்னால் போதும். அதனை பற்றி அறிந்து கொள்வோம்.
முருக பெருமான் மந்திரம்:
ஓம் பாலசுப்ரமணிய
மஹா தேவி புத்ரா
சுவாமி வரவர சுவாஹா!
இந்த மந்திரத்தை தினமும் சொல்லி கொண்டே இருங்கள், அதன் பிறகு முருகனுக்கு செவ்வரளி மாலை அணியுங்கள். மேலும் இந்த மந்திரத்தை செவ்வாய்க்கிழமை, வெள்ளிக்கிழமை, சஷ்டி, கார்த்திகை நட்சத்திரம் போன்ற நாட்களில் சொல்வது சிறப்பானதாக இருக்கிறது. ஏனென்றால் இந்த நாட்கள் எல்லாம் முருகனுக்கு உகந்த நாட்களாக இருக்கிறது. இதனை நீங்கள் தொடர்ந்து சொல்லி வருவதால் தீராத நோய்கள் தீரும், உங்களுக்கு ஏதும் தோஷங்கள் ஏதும் இருந்தால் அவை நீங்கும்.
தன்வந்திரி மந்திரம்:
ஓம் நமோ பகவதே!
வாஸுதேவாய! தன்வந்தரயே!
அம்ருத கலச ஹஸ்தாய !
ஸர்வ ஆமய விநாசநாய த்ரைலோக்ய!
நாதாய் ஸ்ரீமகாவிஷ்ணவே நம!
இந்த மந்திரத்தை நீங்கள் 108 முறை உச்சரிக்க வேண்டும். இதனை தொடர்ந்து கோரி கொண்டே இருப்பதால் உங்களை எந்த நோயும் தாக்காது.
கணபதி மந்திரம்:
ஸ்ரீ வைத்யநாதம் கணநாத நாதம்!
பாலாம்பிகை நாதம் அலம் குஜர்த்த!
ஸதா ப்ரபத்தயே சரணம் ப்ரபத்தயே!
முதே ப்ரபத்தயே சிவலிங்க ரூபம்!
நோய் தீர்க்கும் கணபதி மந்திரத்தை தினமும் 21 முறை கூறி வாருங்கள், இப்படி கூறுவதால் உங்களுடைய எல்லா நோய்களும் தீரும்.
மஹா மிருத்யுஞ்ஜய மந்திரம்:
ஓம் த்ரயம்பகம் யஜாமஹே ஸுகந்திம் புஷ்டிவர்த்தனம்!
உர்வாருகமிவ பந்தனான் ம்ருத்யோர் முக்ஷீய மாம்ரிதாத்!
இந்த மந்திரத்தை தினமும் 108 முறை கூற வேண்டும், இப்படி கூறுவதால் நோய்களில் தாக்கமானது எந்த நிலையில் இருந்தாலும் அதனை தீர்க்க கூடிய சக்தி இருக்கிறது.
ஒரு வரி மந்திரம்:
ஓம் ஹிரண்ய கர்ப்பாய நமஹ
மஹா மிருத்யுஞ்சய மந்திரம் வரிகள்..!
பிரம்மா காயத்ரி மந்திரம்:
ஓம் வேதாத்மகாய வித்மஹே!
ஹரண்ய கர்ப்பாய தீமஹி!
தன்னோ பிரஹ்மஹ் ப்ரசோதயாத்!
சிரஞ்சீவி மந்திரம்:
ஓம் ஸ்ரீ ஆஞ்சநேயாய நமஹ!
ஓம் ஸ்ரீ பரசுராமாய நமஹ!
ஓம் ஸ்ரீ மார்க்கண்டேயர் நமஹ!
ஓம் ஸ்ரீ மகாபலி சக்கரவர்த்தி நமஹ!
ஓம் ஸ்ரீ வேதவியாசாய நமஹ!
ஓம் ஸ்ரீ அஸ்வத்தாமா நமஹ!
ஓம் ஸ்ரீ விபீஷணாய நமஹ!
இந்த மந்திரத்தை 108 முறை கூறி வந்தால் உங்களுடைய நோய்கள் அனைத்தும் தீர்ந்து ஆரோக்கியமாக வாழலாம்.
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் – Aanmeega Thagavalgal |