Lucky Zodiac Signs
பொதுவாக ஜோதிடத்தின்படி, ஒவ்வொரு ராசிக்கான ராசி பலன்களும் நவகிரங்களின் பெயர்ச்சி நிலையை பொறுத்தே கூறப்படுகிறது. அதாவது ஒவ்வொரு மாதத்தில் ஏற்படும் கிரகத்தின் பெயர்ச்சி நிலையை வைத்தே 12 ராசிகளில் எந்த ராசிகளுக்கு நற்பலன்கள் கிடைக்கும்..? எந்த ராசிகளுக்கு மோசமான பலன்கள் கிடைக்கும் என்பதை கணிக்க முடிகிறது. அதேபோல், நவம்பர் மாதத்தில் கிரகங்களின் பெயர்ச்சியால் எந்த ராசிகளுக்கு அதிஷ்டம் என்பதை இப்பதிவில் பின்வருமாறு படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க.
November Month Lucky Zodiac Sign in Tamil:
கன்னி ராசி:
நவம்பர் மாதத்தில் கன்னி ராசிக்காரர்கள் அதிர்ஷ்டமான பலன்களை பெறுவார்கள். இக்காலத்தில் உங்களுக்கு விருப்பமான பலன்கள் கிடைக்கும். வாழ்க்கை துணையுடன் நல்ல அன்பும் புரிந்துணர்வும் ஏற்படும். முக்கியமாக இக்காலத்தில் உங்களுக்கு இருந்த பண நெருக்கடிகள் நீங்கும். மேலும், இந்த மாதத்தில் நீங்கள் உங்கள் வேலை தொடர்பான பயணங்களை மேற்கொள்வேர்கள்.
மீன ராசி :
இம்மாதம் உங்களுக்கு அதிக வாய்ப்புகள் தேடி வரும். இக்காலத்தில் நீங்கள் சிறப்பாக முடிவெடுத்து வேலை, புகழ் என அனைத்திலும் சிறந்து விளங்குவீர்கள்.அதுமட்டுமில்லாமல், நவம்பர் மாதத்தின் இறுதியில் உங்களுக்கான நிலம் மற்றும் சொத்து சம்மந்தப்பட்ட விசயங்கள் உங்களுக்கு சாதகமாக முடிவுக்கு வரவும் வாய்ப்புள்ளது.
மேஷ ராசி:
மேஷ ராசிக்காரர்கள் இக்காலத்தில் அதிர்ஷ்டமான பலன்களை பெறுவார்கள். இந்த மாதம் மேஷ ராசிக்காரர்களுக்கு உற்சாகமான வாய்ப்புகள் தேடி வரும். மேலும், இம்மாதத்தில் புதிய அனுபவங்கள் உங்களுக்கு உண்டாகும். இக்காலம் உங்களுக்கு ஒரு புதிய மாற்றத்தை ஏற்ப்படுத்தும் காலமாக இருக்கும்.
துலாம் ராசி:
துலாம் ராசிக்காரர்களுக்கு நவம்பர் மாதம் அதிர்ஷ்டம் வலுவானதாக இருக்கும். இக்காலத்தில் நீங்கள் செய்யக்கூடிய சிறிய முயற்சி கூட உங்களுக்கு பெரிய அளவில் வெற்றியை தேடி தரலாம். அதுமட்டுமில்லாமல், வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும், வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். முக்கியமாக உங்கள் பணவரவு இக்காலத்தில் அதிகரித்து காணப்படும்.
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |