Odi Vaa Ayyappa Song Lyrics in Tamil
ஆன்மீக அன்பர்களுக்கு வணக்கம். நம் பொதுநலம் ஆன்மீக பதிவில் ஐயப்பன் சுவாமியின் ஓடிவா ஐயப்பா ஓடிவா ஐயா பாடல் வரிகள் பற்றி பார்க்கலாம் வாங்க. இந்து கடவுள்களில் முக்கியமானவர் ஐயப்பன் சுவாமி. ஐயப்பன் சுவாமிக்கு கார்த்திகை மாதத்தில் லட்சக்கணக்கில் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து ஐயப்பனுக்கு விரதம் இருந்து சபரி மலைக்கு சென்று வழிபட்டு வருவார்கள். அவ்வளவு சக்தி வாய்ந்தவர் ஐயப்பன் சுவாமி.
இக்காலத்தில் ஐயப்பனின் பக்தி பாடல்களை தினமும் உச்சரித்து வழிபட்டு வருவார்கள். எனவே, அந்த வகையில் ஐயப்ப பக்தர்களுக்கு பயனுள்ள வகையில் இப்பதிவில் ஐயப்பனை போற்றி பாடக்கூடிய பாடல்களில் ஒன்றான ஓடிவா ஐயப்பா ஓடிவா ஐயா பாடல் வரிகளை இப்பதிவில் கொடுத்துள்ளோம்.
ஓடிவா ஐயப்பா ஓடிவா ஐயா பாடல் வரிகள்:
ஓடிவா ஐயப்பா ஓடிவா ஐயா
உன் பாதம் நான் தொழுதேன் ஓடிவா ஐயா. (ஓடி).
மானே மரகதமே ஓடிவா ஐயா
மல்லிகைப்பூ செண்பகமே ஓடிவா ஐயா. (ஓடி).
தேனே கற்கண்டே ஓடிவா ஐயா
தெவிட்டாத தெள்ளமுதே ஓடிவா ஐயா. (ஓடி).
ஹே அச்சங்கோயில் அரசனே ஓடிவா ஐயா
ஆரியங்காவு ஐயாவே ஓடிவா ஐயா. (ஓடி).
குளத்துப்புழை பாலகனே ஓடிவா ஐயா
குழந்தை மணிகண்டனே ஓடிவா ஐயா. (ஓடி).
எரிமேலி சாஸ்தாவே ஓடிவா ஐயா
எங்கள் குல தெய்வமே ஓடிவா ஐயா. (ஓடி).
ஹே வன்புலிவாகனனே ஓடிவா ஐயா
கானகத்தில் இருப்பவனே ஓடிவா ஐயா. (ஓடி).
வில்லாளி வீரனே ஓடிவா ஐயா
ஹே வீரமணிகண்டனே ஓடிவா ஐயா. (ஓடி).
ராஜாதி ராஜனே ஓடிவா ஐயா
ஹே பந்தள ராஜகுமாரனே ஓடிவா ஐயா. (ஓடி).
பம்பையின் பாலகனே ஓடிவா ஐயா
பன்னிருகை வேலன் தம்பியே ஓடிவா ஐயா. (ஓடி).
நீலிமலை வாசனே ஓடிவா ஐயா
ஹே நித்ய பிரம்மச்சாரியே ஓடிவா ஐயா. (ஓடி).
கருப்பண்ண சாமியே ஓடிவா ஐயா
காத்து ரட்சிக்கும் சாமியே ஓடிவா ஐயா. (ஓடி).
கடுத்த சாமியே ஓடிவா ஐயா
கண்கண்ட தெய்வமே ஓடிவா ஐயா. (ஓடி).
கற்பூரப் பிரியனே ஓடிவா ஐயா
காந்தமலை தெய்வமே ஓடிவா ஐயா. (ஓடி).
ஐயப்பனின் நல் முத்து மணியோடு பாடல் வரிகள்
odi vaa ayyappa song lyrics in tamil pdf download |
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் – Aanmeega Thagavalgal |