ஓம் ஓம் ஐயப்பா பாடல் வரிகள் | Om Om Ayyappa Song Lyrics in Tamil..!
பொதுவாக ஆன்மீகத்தை பொறுத்தவரை பக்தி பரவசம் என்று தான் கூறுவார்கள். ஏனென்றால் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கடவுகளின் மீது பக்தி அதிகமாக இருக்கும். ஆகையால் நமக்கு எந்த கடவுளை அதிகமாக பிடிக்குமோ அவர்களுக்கு பூஜை செய்வது, அவர்களை மனதில் நினைத்து வழிபாடு செய்வது என இதுபோன்ற செயல்களை அதிகமாக செய்து வருவோம். அப்படி பார்த்தால் கடவுள் என்பது ஓரே ஒரு வார்த்தையாக இருந்தாலும் கூட அதில் பல வகையான கடவுள்கள் இருக்கிறார்கள். அதேபோல் அவர்களை வழிபடும் முறை என்பதும் வேறுபட்டு கொண்டு தான் உள்ளது. எனவே இன்றைய பதிவில் கார்த்திகை மாதத்தில் அனைவரும் வழிபடும் ஐயப்பனுக்கு உரிய பாடல் ஓம் ஓம் ஐயப்பா பாடல் வரிகளை தான் பார்க்கப்போகிறோம்.
பகவான் சரணம் பகவதி சரணம் பாடல் வரிகள்
Om Om Ayyappa Song Lyrics in Tamil:
ஓம் குரு நாதா அய்யப்பா
அரனார் பாலா அய்யப்பா
அம்பிகை பாலா அய்யப்பா (ஓம் ஓம் )
ஆபத் பாந்தவா அய்யப்பா
ஆதி பராபரா அய்யப்பா (ஓம் ஓம் )
இருமுடிப் பிரியா அய்யப்பா
இரக்கம் மிகுந்தவா அய்யப்பா (ஓம் ஓம் )
ஈசன் மகனே அய்யப்பா
ஈஸ்வர மைந்தா அய்யப்பா (ஓம் ஓம் )
உமையாள் பாலா ஐயப்பா
உறுதுணை நீயே ஐயப்பா (ஓம் ஓம் )
ஊக்கம் தருபவா அய்யப்பா
ஊழ்வினை அறுப்பவா அய்யப்பா (ஓம் ஓம் )
எங்கும் நிறைந்தவா அய்யப்பா
எங்கள் நாயகா அய்யப்பா (ஓம் ஓம் )
பம்பையின் பாலா அய்யப்பா
பந்தள வேந்தே அய்யப்பா (ஓம் ஓம் )
வன்புலி வாஹனா அய்யப்பா
வனத்திலிருப்பவா அய்யப்பா
சபரி கிரீஸா அய்யப்பா
சாந்த சொரூபே அய்யப்பா (ஓம் ஓம் )
சபரி கிரீஸா அய்யப்பா
சாஸ்வத ரூபே அய்யப்பா (ஓம் ஓம்)
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |