வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

ஓம் சக்தி 108 போற்றி மந்திரம் | Om Sakthi 108 Potri Lyrics in Tamil

Updated On: February 21, 2025 5:31 PM
Follow Us:
---Advertisement---
Advertisement

Om Sakthi 108 Potri in Tamil | ஓம் சக்தி 108 போற்றி வரிகள் 

ஆன்மீக வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். ஒவ்வொரு தெய்வத்திற்கும் 108 போற்றி என்பது இருக்கும். அதனை நாம் தினமும் பாராயணம் செய்து வந்தால் அந்த கடவுளின் அருளால் எல்லாம் நன்மையையும் நம்மை வந்து சேரும். ஓம் சக்தி 108 போற்றி என்பது துர்கா, காளி மற்றும் பார்வதி என்றும் அழைக்கப்படும் சக்தி தெய்வத்திற்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு சக்திவாய்ந்த இந்து மந்திரமாகும். இந்த மந்திரத்தை பக்தியுடனும் நம்பிக்கையுடனும் சொல்லி வந்தால் முப்பெரும் தேவிகளின் ஆசீர்வாதங்களை பெற்று உங்கள் விருப்பங்களையும் நிறைவேற்றும் சக்தி இருப்பதாக நம்பப்படுகிறது. இந்துக்களில் பெரும்பாலான நபர்கள் சக்தி தெய்வங்களில் ஒன்றான பராசக்தியை வழிப்படுகின்றன. இந்த பராசக்தி அம்மனுக்கு பல்வேறு வகையான பெயர்கள் உள்ளது.

அத்தகைய பெயர்களில் ஒன்று தான் ஓம் சக்தி. இந்த வார்த்தையை தினமும் உச்சரிக்கும் போது நமக்கு பலவகையில் நன்மைகள் நிகழும். இந்த சக்தி வாய்ந்த அம்மனை போற்றும் விதமாக இயற்றப்பட்டது தான் 108 ஓம் சக்தி போற்றி. இந்த ஓம் சக்தி போற்றி மந்திரத்தை வெள்ளிக்கிழமை அன்று முழு நம்பிக்கையுடன் அன்னையை மனதில் நினைத்து ஜெபித்தால் நன்மைகள் உண்டாகும். சரி வாங்க அந்த ஓம் சக்தி 108 போற்றி மந்திரத்தை இப்பொழுது பார்க்கலாம்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
உள்ளத்திலே நீ இருக்க பாடல் வரிகள்

ஓம் சக்தி 108 மந்திரம் – Om Sakthi 108 Potri LyricsOm Sakthi 108 Potri Lyrics

  1. ஓம் ஓம்சக்தியே போற்றி
  2. ஓம் ஓங்கார ஆனந்தியே போற்றி
  3. ஓம் உலக நாயகியே போற்றி
  4. ஓம் உறவுக்கும் உறவானவளே போற்றி
  5. ஓம் உள்ளமலர் உவந்தவளே போற்றி
  6. ஓம் ஓதரிய பெரும் பொருளே போற்றி
  7. ஓம் உண்மைப் பரம் பொருளே போற்றி
  8. ஓம் உயிராய் நின்றவளே போற்றி
  9. ஓம் மருவத்தூர் அமர்ந்தாய் போற்றி
  10. ஓம் மனமாசைத் துடைப்பாய் போற்றி
  11. ஓம் கவலை தவிர்ப்பாய் போற்றி
  12. ஓம் ககனவெளி ஆனாய் போற்றி
  13. ஓம் புற்றாகி வந்தவளே போற்றி
  14. ஓம் பாலாகி வடிந்தவளே போற்றி
  15. ஓம் பாமரர் துயர் துடைப்பாய் போற்றி
  16. ஓம் பண்ணாக இசைந்தாய் போற்றி
  17. ஓம் பாமலர் உவந்தாய் போற்றி
  18. ஓம் பாம்புரு ஆனாய் போற்றி
  19. ஓம் சித்துரு அமைந்தாய் போற்றி
  20. ஓம் செம்பொருள் நீயே போற்றி
  21. ஓம் சக்தியே தாயே போற்றி
  22. ஓம் சன்மார்க்க நெறியே போற்றி
  23. ஓம் சமதர்ம விருந்தே போற்றி
  24. ஓம் ஓங்கார உருவே போற்றி
  25. ஓம் ஒருதவத்துக் குடையாய் போற்றி
  26. ஓம் நீள்பசி தவிர்ப்பாய் போற்றி
  27. ஓம் நின்மதி தருவாய் போற்றி
  28. ஓம் அகிலமே ஆனாய் போற்றி
  29. ஓம் அண்டமே விரிந்தாய் போற்றி
  30. ஓம் ஆன்மீகச் செல்வமே போற்றி
  31. ஓம் அனலாக ஆனாய் போற்றி
  32. ஓம் நீராக நிறைந்தாய் போற்றி
  33. ஓம் நிலனாகத் திணிந்தாய் போற்றி
  34. ஓம் தூறாக வளர்ந்தாய் போற்றி
  35. ஓம் துணிபொருள் நீயே போற்றி
  36. ஓம் காராக வருவாய் போற்றி
  37. ஓம் கனியான மனமே போற்றி
  38. ஓம் மூலமே முதலே போற்றி
  39. ஓம் முனைச்சுழி விழியே போற்றி
  40. ஓம் வீணையே இசையே போற்றி
  41. ஓம் விரைமலர் அணிந்தாய் போற்றி
  42. ஓம் தத்துவங் கடந்தாய் போற்றி
  43. ஓம் சகலமறைப் பொருளே போற்றி
  44. ஓம் உத்தமி ஆனாய் போற்றி
  45. ஓம் உயிர்மொழிக் குருவே போற்றி
  46. ஓம் நெங்சம் நீ மலர்ந்தாய் போற்றி
  47. ஓம் நீள் நிலத் தெய்வமே போற்றி
  48. ஓம் துரிய நிலையே போற்றி
  49. ஓம் துரிய தீத வைப்பே போற்றி
  50. ஓம் ஆயிர இதழ் உறைவாய் போற்றி
  51. ஓம் அகிலமெல்லாம் ஆட்டுவிப்பாய் போற்றி
  52. ஓம் கருவான மூலம் போற்றி
  53. ஓம் உருவான கோலம் போற்றி
  54. ஓம் சாந்தமே உருவாய் போற்றி
  55. ஓம் சரித்திரம் மறைத்தாய் போற்றி
  56. ஓம் சின்முத்திரை தெரிப்பாய் போற்றி
  57. ஓம் சினத்தை வேரறுப்பாய் போற்றி
  58. ஓம் கையிரண்டு உடையாய் போற்றி
  59. ஓம் கரைபுரண்ட கருணை போற்றி
  60. ஓம் மொட்டுடைக் கரத்தாய் போற்றி
  61. ஓம் மோனநல் தவத்தாய் போற்றி
  62. ஓம் யோகநல் உருவே போற்றி
  63. ஓம் ஒளியன ஆனாய் போற்றி
  64. ஓம் எந்திரத் திருவே போற்றி
  65. ஓம் மந்திரத் தாயே போற்றி
  66. ஓம் பிணி தவிர்த்திடுவாய் போற்றி
  67. ஓம் பிறவிநோய் அறுப்பாய் போற்றி
  68. ஓம் மாயவன் தங்கையே போற்றி
  69. ஓம் சேயவன் தாயே போற்றி
  70. ஓம் திரிபுரத்தாளே போற்றி
  71. ஓம் ஒருதவம் தெரிப்பாய் போற்றி
  72. ஓம் வேம்பினை ஆள்வாய் போற்றி
  73. ஓம் வினையெலாம் தீர்ப்பாய் போற்றி
  74. ஓம் அஞ்சனம் அருள்வாய் போற்றி
  75. ஓம் ஆருயிர் மருந்தே போற்றி
  76. ஓம் கண்ணொளி காப்பாய் போற்றி
  77. ஓம் கருத்தொளி தருவாய் போற்றி
  78. ஓம் அருளொளி செய்வாய் போற்றி
  79. ஓம் அன்பொளி கொடுப்பாய் போற்றி
  80. ஓம் கனவிலே வருவாய் போற்றி
  81. ஓம் கருத்திலே நுழைவாய் போற்றி
  82. ஓம் மக்கலைக் காப்பாய் போற்றி
  83. ஓம் மனநோயைத் தவிர்ப்பாய் போற்றி
  84. ஓம் எத்திசையும் ஆனாய் போற்றி
  85. ஓம் இதயமாம் வீணை போற்றி
  86. ஓம் உருக்கமே ஒளியே போற்றி
  87. ஓம் உள்ளுறை விருந்தே போற்றி
  88. ஓம் மலப்பிணி தவிர்ப்பாய் போற்றி
  89. ஓம் மனங்கனிந்து அருள்வாய் போற்றி
  90. ஓம் நாதமே நலமே போற்றி
  91. ஓம் நளின மலர் அமர்வாய் போற்றி
  92. ஓம் ஒற்றுமை சொல்வாய் போற்றி
  93. ஓம் உயர்நெறி தருவாய் போற்றி
  94. ஓம் நித்தமும் காப்பாய் போற்றி
  95. ஓம் நேரமும் ஆள்வாய் போற்றி
  96. ஓம் பத்தினி பணிந்தோம் போற்றி
  97. ஓம் பாரமே உனகே போற்றி
  98. ஓம் வித்தையே விளக்கே போற்றி
  99. ஓம் விந்தையே தாயே போற்றி
  100. ஓம் ஏழையர் அன்னை போற்றி
  101. ஓம் ஏங்குவோர் துணையே போற்றி
  102. ஓம் காலனைப் பகைத்தாய் போற்றி
  103. ஓம் கண்மணி ஆனாய் போற்றி
  104. ஓம் சத்தியப் பொருளே போற்றி
  105. ஓம் சங்கடந் தவிர்ப்பாய் போற்றி
  106. ஓம் தத்துவச் சுரங்கமே போற்றி
  107. ஓம் தாய்மையின் விளக்கமே போற்றி
  108. ஓம் ஆறாதார நிலையே போற்றி

ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்
ஓம் ஓம் ஓம்

இந்த ஓம் சக்தி 108 போற்றி மந்திரத்தை தினமும் அன்றாடம் ஜெபிப்பதன் மூலம் வாழ்வில் எல்லா வளமும் கிடைக்கும். குறிப்பாக அம்பாளுக்கு மாலை அணிந்தவர்கள், காலையிலும் மாலையிலும் தவறாமல் இந்த ஓம் சக்தி 108 போற்றியை சொல்லி வர வேண்டும்.

Om Shakti Mantra Benefits:

  • எந்த இடத்திலும் நீக்க முடியாத சக்தியை ஓம் சக்தி இருக்கிறாள். ஓம் சக்திக்கு உகந்த பாடல்கள் மற்றும் போற்றிகள் போன்றவற்றை கூறுவதன் மூலம் அவளின் முழுமையான அருளை பெற முடியும். அந்த இந்த போற்றியை கூறுவதற்கும் சில விதிமுறைகள் உள்ளது. அதனை பற்றி அறிந்து கொள்வோம்.
  • இந்த மந்திரத்தை காலையில் எழுந்து குளித்து முடித்து விட்டு, பூஜை அறையில் தீபம் ஏற்றி விட்டு, அம்பாளை பூக்களால் அலங்கரித்து கொள்ள வேண்டும். இந்த மந்திரத்தை அம்பாளிடம் 108 முறை சொல்ல வேண்டும். இதனை சொல்வதானால் என்ன நன்மைகள் கிடைக்கும்.
  • நீங்கள் வியாபாரம் செய்பவர்களாக இருந்தால் உங்களின் வியாபாரத்தில் வளர்ச்சி அடைவீர்கள்.
  • உடல் ஆனது சோர்வு நிலை இல்லாமல் சுறுப்சுறுப்பாக இருக்கும்.
  • மனதில் உள்ள கெட்ட எண்ணங்கள் நீங்கும்.
  • நீங்கள் செய்யும் அனைத்தும் காரியங்களிலும் வெற்றியை அடைவீர்கள். உங்களின் வாழ்க்கையில் எல்லா வளத்தையும், செல்வத்தையும் பெறுவீர்கள்.

Om Sakthi 108 Manthiram in Pamil pdf

மேலும் இது போன்று நிறைய ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை தயவு கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 
Advertisement

Sathya Priya

வணக்கம்.. நான் சத்திய பிரியா.. நமது பொதுநலம்.காம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பல்வேறு பயனுள்ள பதிவுகளை எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி.. நன்றி..

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now