Paal Kanavu Palangal in Tamil
ஒரு மனிதனுக்கு உணவு, உடை என்பது மிகவும் அத்தியாவசியமான ஒன்றாக உள்ளது. உணவு என்று சொல்லும் போது நாம் அனைத்து வகையான உணவுகளையும் உண்ண முடியாது. ஏனென்றால் நம்முடைய உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய காய்கறிகள், பழங்கள், முட்டை மற்றும் பால் இதுபோன்றவற்றை தான் அதிகாமாக எடுத்துகொள்ள வேண்டும். இவ்வாறு இருக்கையில் சிலருக்கு தூக்கத்தில் கூட உணவு சம்மந்தமான கனவுகள் தான் வரும். ஆனால் இதுபோன்ற கனவுகளை நாம் கேட்கும் போது அவர்களை கேலி செய்து பேசுவோம்.
ஆனால் ஆன்மீகத்தை பொறுத்தவரை தண்ணீர் முதல் அம்மா, அப்பா வரை என எந்த மாதிரியான கனவு வந்தாலும் அதற்கான தனித்தனி அர்த்தங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் சிலருக்கு பால், தண்ணீர், புடவை, குடம் மற்றும் விலங்குகள் இதுபோன்ற கனவுகள் அடிக்கடி வரும். ஆனால் அதற்கான பலன்கள் தெரியாமல் இருக்கும். ஆகையால் இன்று பால் கனவில் வந்தால் என்ன பலன் என்று தெரிந்துக்கொள்ள போகிறோம்.
வீடு இடிந்து விழுவது போல் கனவு வந்தால் என்ன பலன் |
கனவில் பால் வந்தால் என்ன பலன்:
உங்களுடைய ஆழ்ந்த தூக்கத்தில் பால் கனவில் வந்தால் உங்களின் உடல் ஆரோக்கியம் ஆனது சிறப்பாக இருக்கும் என்பதை உணர்த்திக்கிறது. மேலும் இனி எந்த விதமான உடல் உபாதைகளும் இல்லாமல் சிறப்பான வாழ்க்கையினை வாழலாம் என்பதும் இதற்கான அர்த்தமாக ஆன்மீகத்தில் சொல்லப்படுகிறது.
கனவில் பால் கொட்டுவது போல் கனவு வந்தால் என்ன பலன்:
கனவில் பால் கொட்டுவது போல் கனவு கண்டால் ஏதேனும் விசயங்களில் உங்களுக்கு எதிர்பாராத ஏமாற்றம் ஏற்படப் போகிறது என்பதனை உணர்த்துகிறது. ஆகையால் எச்சரிக்கையுடன் இருத்தல் வேண்டும்.
பால் பொங்குவது போல் கனவு கண்டால்:
பால் என்பது சுத்தமான ஒன்றாக இருந்தாலும் கூட கனவில் பொங்குவது போல் கனவு வந்தால் அது நல்லதல்ல. ஏனென்றால் உங்களுடைய வாழ்க்கையில் எதிர்பாரத விதமாக புதிய பிரச்சனைகள் வரலாம் என்பதை முன்கூட்டியே உணர்த்துகிறது.
பால் வாங்குவது போல் கனவு கண்டால் என்ன பலன்:
கனவில் பால் வாங்குவது போல் கனவு கண்டால் அது நல்ல விதமான பலன்களை குறிக்கிறது. இதுநாள் வரையிலும் உடல் நலத்தில் குறைபாடுகள் இருந்தால் அது விரைவில் நீங்கி ஆரோக்கியமாக இருக்க போகிறீர்கள் என்பதை இத்தகைய கனவு ஆனது குறிக்கிறது.
பால் குடிப்பது போல் கனவு கண்டால்:
உங்களுடைய கனவில் பால் குடிப்பது போல கனவு வந்தால் இனி உங்கள் வாழ்க்கையில் வெற்றி தான் என்பதையும், அதற்கான வெற்றி பாதைகள் திறந்து இருக்கிறது என்பதையும் குறிக்கும் அர்த்தமாக சொல்லப்படுகிறது.
பால் திரிவது போல் கனவு:
பால் திரிவது போல் கனவு வந்தால் உங்களுடைய முயற்சிக்கான பலன்கள் உடனே கிடைக்கவில்லை என்றாலும் கூட சில மாதங்கள் கழித்து கிடைக்கும் என்பதை உணர்த்துகிறது.
நாய் கடிப்பது போல கனவு வந்தால் என்ன பலன் தெரியுமா
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |