பண கஷ்டம் ஒழிய
நாம் என்னதான் கஷ்டப்பட்டு வீட்டிற்காக உழைத்தாலும் வீட்டில் பணம் சேரவே சேராது, வீட்டில் கடன் பிரச்சனை மட்டும் அதிகரித்துக்கொண்டே இருக்கும். பலருக்கும் தீராத கடன் சுமை பணக்கஷ்டம் இருந்துகொண்டே இருக்கும். என்னதான் உழைத்தாலும் மகாலட்சுமியை வீட்டில் தங்க வைக்கவே முடியவில்லை என புலம்புவார்கள். இதற்கு ஆன்மிக ரீதியாக நிறைய காரணங்கள் உள்ளன. அப்படி உள்ளவர்கள் இந்த பரிகாரத்தை மட்டும் செய்தால் போதும் வீட்டில் இனி செல்வம் அதிகரிக்குமாம். கடன் பிரச்சனையை தீர்வதற்கு சாதத்தை வைத்து பரிகாரம் செய்தால் பண பிரச்சனை தீர்ந்து விடும் என்று ஆன்மிகத்தில் கூறப்படுகிறது. அந்த வகையில் இன்றைய பதிவில் சாதம் எப்படி பூஜையில் பயன்படுத்த வேண்டும், அந்த பரிகாரத்தை எப்போது செய்ய வேண்டும் என்று இந்த பதிவின் மூலம் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க..
சாதம் பண வரவு அதிகரிக்க:
இந்த பரிகாரத்தை செய்ய காசு பணம் தேவையில்லை.. சாதம் இருந்தால் போதும் பெருமாளுக்கு நிவேதனமாக வைத்து தினந்தோறும் வழிப்பட்டால் போதுமானது.
அது என்ன சாதம் என்றால் பெருமாளுக்கு உகந்த துளசி சாதம் தான். இதற்க்கு, வீட்டில் இருக்கும் பெண்கள் காலையில் எழுந்து குளித்து விட்டு சமைக்க வேண்டும்.
துளசி சாதம்:
சிறிதளவு வெள்ளை சாதம் மட்டும் தனியாக ஒரு தட்டில் போட்டு, அந்த சாதம் லேசாக சூடு ஆறிய பின்பு அதில் சுத்தமான பசு நெய் விட்டு, 2 அல்லது 3 துளசி இலைகளை அந்த சாதத்தின் மேலே தூவி அதை அப்படியே பெருமாளுக்கு நிவேதனமாக வைத்து விடுங்கள்.
பூஜை செய்யும் முறை:
பின்னர், ஒரு சிறிய மண் அகல் விளக்கில் தீபம் ஏற்றிவிட்டு, பெருமாளை மனதார பிரார்த்தனை செய்துகொள்ளவேண்டும். இறுதியாக கற்பூர ஆராதனை காட்டி பெருமாளை வணங்க வேண்டும்.
இந்த நைவேத்தியத்தை வீட்டில் இருப்பவர்கள் பிரசாதமாக சாப்பிட்டு விடலாம். தினந்தோறும், இந்த துளசி சாதத்தை பிரசாதமாக வைத்து வேண்டி வழிபடுபவர்கள் வீட்டில் பணக்கஷ்டம் என்பதே இருக்காது.
வீட்டில் பெருமாள் படம் வைத்திருப்பவர்கள் கூட வைத்து வணங்கலாம். பெருமாளும் லட்சுமியும் ஆடை ஆபரண அலங்காரத்தோடு ஜொலிக்கும் திருவுருவப் படத்தை வீட்டில் வாங்கி வைப்பது மேலும் சிறப்பைத் தரும்.
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |