Paavai Nonbu Endral Enna | Paavai Nonbu Procedure in Tamil
ஆன்மீக வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் பாவை நோன்பு என்றால் என்ன.? என்பதையும் பாவை நோன்பு இருக்கும் முறை பற்றியும் பின்வருமாறு கொடுத்துள்ளோம். தமிழ் மாதங்களில் மார்கழி மாதம் தான் மிகவும் சிறப்பான மாதம் என்று சொல்லப்படுகிறது. மற்ற மாதங்களில் ஏதேனும் ஒரு நாள் அல்லது ஒரு திதி அல்லது ஒரு நட்சத்திரம் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும். ஆனால், இந்த மார்கழி மாதத்தில் உள்ள அனைத்து நாட்களும் இறை வழிப்பாட்டிற்கு உரிய காலம் ஆகும்.
இதனால், தான் மார்கழி மாதத்தை முழுவதுமாக இறை வழிப்பாட்டிற்காக மட்டுமே ஒதுக்கி வைத்து, இந்த மாதத்தில் வேறு எந்த சுப நிகழ்ச்சிகளும் செய்ய கூடாது என்று சொல்லி இருக்கிறார்கள். இதனை சிறப்பு வாய்ந்த மார்கழி மாதத்தில் கன்னி பெண்கள் நோன்பு மேற்கொள்வார்கள். மார்கழியில் மேற்கொள்வதால் மார்கழி நோன்பு என்றும், கன்னிப்பெண்களால் மேற்கொள்ளப்படுவதால் பாவை நோன்பு என்றும் கூறப்படுகின்றது. மார்கழி மாதத்தில் பெண்கள் கடைபிடிக்கும் நோன்பின் பெயர் பாவை நோன்பு ஆகும். இந்த நோன்பு பற்றிய விவரங்களை பின்வருமாறு படித்து தெரிந்துக்கொள்ளலாம் வாங்க.
பாவை நோன்பு என்றால் என்ன.?
பாவை நோன்பு என்பது, மார்கழி திங்களில் கன்னி பெண்கள் கடைபிடிக்கும் நோன்பு ஆகும். கன்னி பெண்களால் மேற்கொள்ளப்படும் நோன்பு என்பதால் இதற்க்கு பாவை நோன்பு என்று பெயர். ஆயர்ப்பாடியில் உள்ள கன்னியர்கள், நாட்டு முன்னேற்றத்திற்காகவும், பால் வளம் பெருகவும், நல்ல கணவரை அடையவும் இந்த நோன்பை கடைப்பிடித்ததாக கூறப்படுகிறது.
மார்கழி மாதத்தில் செய்ய வேண்டியதும் செய்ய கூடாததும்.!
பாவை நோன்பு முறை:
பாவை நோன்பின்போது, கன்னி பெண்கள் விடியும் முன்பே எழுந்து, நீராடி அருகில் உள்ள பெருமாள் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்ய வேண்டும். பாவை நோன்பு இருக்கும் காலத்தில் ஆண்டாள் இயற்றிய திருப்பாவை, நாச்சியார் திருமொழி மற்றும் ஆழ்வார்கள் பாசுரங்களைப் பாட வேண்டும்.
திருப்பாவை பாசுரத்தில் இரண்டாம் பாடலில் கூறியுள்ளதுபோல, கன்னி பெண்கள் நெய் மற்றும் பால் போன்ற உணவு பொருட்களையும், கண்ணிற்கு மையிடுதல் போன்ற அழகூட்டும் செயல்களை செய்யாமல் இருக்க வேண்டும். பாவை நோன்பு காலத்தில் முழுவதும் எந்நேரமும் இறை சிந்தையுடன் நோன்பைக் கடைபிடிக்க வேண்டும்.
மார்கழி மாதத்தில் கன்னி பெண்கள் மேற்கொள்ளும் முக்கியமான விரதம் மார்கழி நோன்பு ஆகும். ஆயர்ப்பாடியில் உள்ள கன்னியர்கள், நாட்டு முன்னேற்றத்திற்காகவும், பால் வளம் பெருகவும், நல்ல கணவரை அடையவும் இந்த நோன்பை கடைப்பிடித்ததாக கூறப்படுகிறது.
கன்னி பெண்கள், அதிகாலையில் எழுந்து, மற்ற பெண்களையும் எழுப்பி, ஆற்றங்கரை பகுதிக்கு சென்று அங்குல மணலில் பாவை போன்ற உருவம் செய்து, மலர்கள் சூட்டி பார்வதி தேவியை பாடி துதித்து வழிபட்டனர் என்று கூறப்படுகிறது.
மார்கழி மாதம் தேவர்களின் இரவுக் காலம் முடியும் காலம் ஆகும். இதை உஷத் காலம் என்றும் வைகறைப் பொழுது என்றும் கூறுவது உண்டு. இந்த மாதத்தில் யார் விடியற்காலத்தில் எழுந்து பக்தியுடன் பகவானைத் தொழுகிறார்களோ அவர்கள் சகல சவுபாக்கியங்களையும் பெறுவதுடன் ஆண்டவனின் அருளுக்கும் பாத்திரமாவார்கள்.
மார்கழி மாத நோன்பினால், உள்ளத்தையும் உடலையும் தூய்மையாக்கி கொள்ள முடியும். மார்கழி மாத நோன்பு நமது பிறவிப்பயனே ஆண்டவனை அடைவது தான் என்பதை உணர்த்துகிறது. முக்கியமாக, தெய்வமே எங்களுக்கு நல்ல கணவனைக் கொடு என்பது தான் கன்னிப்பெண்களின் பிரார்த்தனையாக இருக்கும். பாவை நோன்பு இருக்கும் பெண்களுக்கு அந்த பாக்கியம் கிட்டும்.
திருப்பாவையில் பாவை நோன்பு கடைபிடிக்கும் முறைகள்:
- பாற்கடலில் துயிலும் பரமனைப் பாடுதல்
- மார்கழி அதிகாலையில் எழுந்து நீராடுதல்
- நெய், பால் உண்ணாமலிருத்தல்
- மையிட்டு எழுதாமலிருத்தல்
- மலர் சூடாமலிருத்தல்
- தீய செயல்கள் செய்யாமல் இருத்தல்
மார்கழி மாதம் சிறப்புகள் பற்றி உங்களுக்கு தெரியுமா .?
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மீக தகவல்கள் |