ஆண்டாள் கடைபிடித்த பாவை நோன்பு | Paavai Nonbu Sirappugal in Tamil
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் ஆண்டாள் கடைபிடித்த நோன்பின் சிறப்புகள் பற்றி பின்வருமாறு கொடுத்துள்ளோம். மார்கழி மாதம் என்றாலே அனைவருக்கும் நினைவில் வருவது வண்ண வண்ண கோலங்கள், அதில் பிள்ளையார் பிடித்து வைத்து பூசணி பூ வைத்தல், அதிகாலை பனிபொழுது, குளிர், திருப்பாவை, திருவெம்பாவை திருப்பள்ளியெழுதச்சி இவை அனைத்தும் நம் நினைவிற்கு வரும்.
முக்கியமாக கன்னி பெண்கள் இம்மாதம் பாவை நோன்பு மேற்கொள்வார்கள். பாவை நோன்பு என்பது, விடியற்காலை செலுத்து குளித்து விட்டு, ஆண்டாளை வேண்டி விரதம் இருந்து வழிபட்டால் திருமணம் ஆகாத பெண்களுக்கு திருமணம் கைகூடி வரும். ஆண்டாள், பாவை நோன்பு மேற்கொன்டு தான் திருமாலை திருமணம் செய்து கொண்டாள். எனவே, இப்படி மகத்துவம் வாய்ந்த்ட்ட பாவை நோன்பின் சிறப்புக்கள் பற்றி நாம் அனைவரும் அறிந்துகொள்ளாமல் இருக்கலாமா.? வாருங்கள் ஆண்டாள் கடைபிடித்த பாவை நோன்பின் (Paavai Nonbu Sirappugal in Tamil) சிறப்புகள் பற்றி பின்வருமாறு படித்து தெரிந்துகொள்ளலாம்.
பாவை நோன்பு என்றால் என்ன.? பாவை நோன்பு எப்படி இருப்பது.?
பாவை நோன்பு சிறப்புகள்:
- பொதுவாக, மார்கழி மாதம் என்றாலே பீடை மாதம் என்று கூறுவார்கள். ஆனால், மகாவிஷ்ணு மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன் என்று கூறுகிறார். கடவுளுக்கு உகந்த மாதம் எப்படி பீடை மாதமாக இருக்க முடியும். மார்கழி மாதத்தினை பீடு மாதம் என்று கூறுவார்கள். பீடு என்றால் , வெற்றி என்று பொருள். காலப்போக்கில் பீடு என்பதை பீடை என்று மாற்றி சொல்லிக்கொண்டிருக்கிறோம்.
- மார்கழி மாதத்தில் ஆண்டாளின் பாவை நோன்பு பிரபலமானது. அந்த காலத்தில் மார்கழி மாதத்தில் காலையில் எழுந்து குளித்துவிட்டு ஆற்றங்கரை குளத்தங்கரைக்கு சென்று, மனதில் அம்பாள் துர்க்கை அம்மனின் உருவம் செய்து பூ சூட்டி வழிபடுவார்கள்.
- கன்னி பெண்களுக்கு திருமணம் ஆக வேண்டும் என்றும், நல்ல கணவன் கிடைக்க வேண்டும் என்றும், திருமணம் ஆன பெண்கள் குழந்தை பிறக்க வேண்டும் என்றும், அம்மனை வழிபாடுவார்கள்.
- மார்கழி மாதம் முழுவதும் ஆண்டாளை வேண்டி விரதம் இருந்து வழிபாடு செய்து வந்தால் திருமணம் ஆகாத கன்னி பெண்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும், நல்ல கணவரும் அமைவார்.
- திருமாலை மனதில் நினைத்துகொண்டு அவரே எனக்கு கணவராக வர வேண்டும் என்று உருகியவர் ஆண்டாள் . ஸ்ரீவில்லிபுத்தூர் பெருமாள் கோவிலில் சூடிக்கொண்டிருக்கும் பெருமாளுக்காக, தொடுத்த மலர் மாலைகளை எல்லாம், தானும் அணிந்து அழகு பார்த்து, சூடிக்கொடுத்த சுடர்கொடியாக மாறியவர் ஆண்டாள்.
- உலகத்தை ஆளும் கண்ணனே எனக்கு கணவனாக வரவேண்டும் என்பதற்காக, ஆண்டாள் மேற்கொண்ட நோன்பு தான் பாவை நோன்பு.
- இந்த நோன்பினை கடைபிடிப்பதற்காக விடியற்காலையே எழுந்து, தன் தோழிகளையும் எழுப்பி, தோழியருடன் சென்று நீராடி வருவாள். அதன் பிறகு, தன்னை கோபிகையாகவும் ஸ்ரீவில்லிபுத்தூரை ஆயர்பாடியாகவும், பெருமாள் அமைந்த கோவிலை கண்ணனின் வீடாகவும் நினைத்து தினமும் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்து வருவாள்.
- திருமாலை தவிர வேறு எந்த மானிடரையும் கணவனாக ஏற்க மாட்டேன் என்று சபதம் மேற்கொண்ட ஆண்டாள், கிருஷ்ணன் அவதாரத்தின்போது கிருஷ்ணரை மணக்க கோபியர்கள் மேற்கொண்ட பாவை நோன்பை, மார்கழி மாதத்தில் ஆண்டாளும் மேற்கொண்டார்.
- மேலும், இந்த மாதத்தில் பிள்ளையாரை வழிப்படலாம். சாணத்தில் பிள்ளையார் பிடித்து அதில் மஞ்சள் குங்குமம் பிடித்து அதன் மேல் பூசணி பூ வைத்து விளக்கேற்றி வழிபடுவார்கள். மார்கழி மாதம் முழுவதும் இவ்வாறு செய்வார்கள். பிள்ளையார் பிடித்த சாண உருண்டைகளை சேமித்து வைத்து கடைசி நாள் ஆற்றில் அல்லது குளத்தில் கரைத்து விடுவார்கள். அதனால், மார்கழி மாதத்தில் அம்பாள் துர்க்கை அம்மன், பிள்ளையார் ஆகிய தெய்வங்களை வழிபடலாம்.
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மீக தகவல்கள் |