வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

பண பிரச்சனை நீங்க பச்சை கற்பூரம்…

Updated On: June 8, 2024 6:57 PM
Follow Us:
pachai karpooram in aanmeegam pariharam in tamil
---Advertisement---
Advertisement

பச்சை கற்பூர பரிகாரம் 

அனைவருக்கும் பண தேவை ஆனது அன்றாட வாழ்க்கையில் இருந்து கொண்டு தான் இருக்கிறது. இத்தகைய தேவை ஆனது சிலருக்கு அளவுக்கு அதிகமாக ஏற்படும் போது கடன் வாங்க வேண்டிய சூழல் உண்டாகுகிறது. அந்த கடனால் மனம் உடல் இரண்டுமே பாதிக்கப்படுகிறது. அதிலும் சிலருக்கு கடின உழைப்பால் எவ்வளவு கஷ்டப்பட்டு உழைத்தாலும் கூட பணம் என்பதே வீட்டில் தங்கவில்லை என்பதும் சிலருக்கு பிரச்சனையாக இருக்கிறது. இப்படிப்பட்ட பிரச்சனையினை தீர்ப்பதற்கு என்ன செய்வது என்று நாமும் யோசித்து இருப்போம். ஆனால் இதனை யாரிடம் சென்று கேட்பது என்று தெரியாமல் இருந்து இருக்கும். அப்படி குழப்பத்தில் உள்ளவர்களுக்காகத்தான் இந்த பதிவு உங்களுக்கான பரிகாரத்தை தெரிந்துகொள்ளலாம் வாருங்கள்.

செல்வநிலை அதிகரிக்க என்ன செய்யவேண்டும்?

பச்சைக் கற்பூரத்திற்கு செல்வத்தை ஈர்க்கும் தன்மை அதிகம் உண்டு என நம்பப்படுகிறது.

பச்சை கற்பூரம் இயல்பாகவே அதிகவாசனை கொண்டது இதனை நீங்கள் வீட்டில் பயன்படுத்தினால் எதிர்மறையான எண்ணங்கள் அகன்று எப்போதும் நிம்மதி பிறக்கும்.

பண கஷ்டம் தீர பரிகாரம்:

pachai karpooram in aanmeegam

எனவே பூஜை அறையின் குபேர முலையில் மஞ்சள் துணியில் பச்சை கற்பூரத்தை முடிச்சாக கட்டி வைத்து விட்டு, தினமும் பூஜை அறையில் பூஜை செய்யும் போதும் மூலையில் உள்ள பச்சை கற்பூரத்திற்கும் கற்பூரம் காட்டி வழிபட வேண்டும்.

இவ்வாறு செய்வதால் உங்கள் வீட்டில் எப்போதும் பண பிரச்சனைகள் வராது.

உங்கள் வீட்டில் நீங்கள் பணத்தை எங்கு வைப்பீர்களோ அங்கு சிறிதளவு பச்சை கற்பூரத்தை வைக்க வேண்டும். இப்படி செய்வதால் அந்த இடத்தில் எப்போதும் பணம் இருந்துகொண்டே இருக்கும் என்பது நம்பிக்கை.

உங்களின் கஷ்டங்கள் தீர வேண்டும் என்று உங்களில் குலதெய்வம் மற்றும் உங்கள் இஷ்ட தெய்வங்களை வேண்டிக்கொண்டு பச்சைக்கற்பூரத்தை முக்கியமாக பணம் இருக்கும் இடத்தில் வைத்தால் உங்கள் கஷ்டங்கள் நீங்கி நிம்மதி பிறக்கும்.

வீட்டில் எண்ணிப்பார்க்க முடியாத அளவு பணம் சேர வேண்டுமா ? ஒரு கைப்பிடி உப்பு இருந்தால் மட்டும் போதும் .

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 

 

Advertisement

Sureka

நான் சுரேகா pothunalam.com தளத்தில் Content creator ஆக இருக்கின்றேன். நான் Life Style, Business, Banking போன்ற தகவல்களை இந்த தளத்தின் வழியை எழுதி வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now