பச்சை கற்பூரத்தை பூஜை அறையில் வைப்பதால் என்னென்ன பலன் கிடைக்கும் தெரியுமா..?

Advertisement

Pachai Karpooram Palangal in Tamil

நம்மில் பலருக்கும் பொதுவாக ஆன்மிக நம்பிக்கை என்பது மிகுந்த அளவில் இருக்கும். அதனால் பலவகையான ஆன்மிக தகவல்களை தேடி தேடி அறிந்து கொள்வோம். அப்படிப்பட்டவர்களுக்கு இன்றைய பதிவு மிக மிக பயனுள்ளதாக அமையும். அதாவது நமது முன்னோர்கள் நமது பூஜை அறையில் என்னென்ன பொருட்கள் எல்லாம் வைக்கலாம் என்னென்ன வைக்க கூடாது என்று பல விதிமுறைகளை வகுத்துள்ளனர். அப்படி நமது முன்னோர்கள் பூஜை அறையில் வைக்கவேண்டிய பொருட்கள் என்று கூறியவற்றில் இந்த பச்சை கற்பூரமும் ஒன்று. அதனால் இன்றைய பதிவில் பச்சை கற்பூரத்தை நமது வீட்டின் பூஜை அறையில் வைப்பதால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதை பற்றி விரிவாக காணலாம் வாங்க. 

கடுகு டப்பாவில் இதை மட்டும் மறைத்து வையுங்க வீட்டில் வைக்க இடமில்லாத அளவிற்கு பணம் சேரும்

பச்சை கற்பூரம் பயன்கள்:

pana varavu athikarikka pariharam in tamil

நமது வீடுகளில் உள்ள பொருட்களை வைத்து தான் நமது வாழ்க்கைக்கான பலன்கள் கிடைக்கின்றது. அதேபோல் பச்சை கற்பூரத்தை நமது வீட்டின் பூஜை அறையில் வைப்பதால் நமக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை இங்கு விரிவாக காணலாம் வாங்க.

வீட்டில் நிம்மதி நிலவ:

வீட்டில் நிம்மதி ஏற்பட

நமக்கு நிம்மதி இல்லாமல் போக காரணமே வீட்டில் இருக்க கூடிய துர்சக்தி. பச்சை கற்பூரத்தின் வாசனையினாலும், அதன் மகிமையினாலும் வீட்டில் இருக்க கூடிய துர்சக்திகள், கெட்டசக்திகள், கண்திருஷ்டி, எதிர்மறை ஆற்றல் அனைத்தும் வீட்டை விட்டு வெளியே போகும்.

அதேபோல் பச்சை கற்பூரமானது அதிக வாசனை நிறைந்தது. இதன் வாசனைக்கு பெரிய சக்தி இருக்கிறது. 2 அல்லது 4 துண்டு பச்சை கற்பூரத்தை பூஜை அறையில் வைத்து வழிபடுங்கள். இதனை பூஜை அறையில் வைப்பதால் வீட்டில் எப்போதும் நிம்மதி இருக்கும்.

வீட்டு பாத்ரூமில் 1 கைப்பிடி கல் உப்பை வைத்தால் வாஸ்துப்படி என்ன பலன் தெரியுமா

பணவரவு அதிகரிக்க:

பணவரவு

பச்சை கற்பூரத்திற்கு பணத்தை ஈர்க்கும் தன்மை அதிகமாக காணப்படுகிறது. பச்சை கற்பூரத்தை ஒரு மஞ்சள் துணியில் முடிச்சாக கட்டி குபேர மூலையில் வைத்து தூபம் காண்பித்து வழிபட்டு வந்தாலே வீட்டில் வீண் செலவுகள் ஏற்படாது பணம் எப்பொழுதும் இருந்துகொண்டே இருக்கும்.

மேலும் இந்த கற்பூரத்தினை பணம் இருக்கும் இடத்தில் வைக்கும்போது, அங்கு வரும் எதிர்மறையான வாசங்களையும், சக்திகளையும் இது தடுத்து நிறுத்தும். அதேபோல் 2 பச்சை கற்பூரத் துண்டை, ஒரு பேப்பரில் வைத்து மடித்து உங்களது பர்சில்வைத்து கொள்வதன் மூலம் உங்களுக்கு பணவரவு அதிக அளவு கிடைக்கும்.

தொழில் மற்றும் வியாபாரம் விருத்தியடைய:

பணம் சேர பச்சை கற்பூரம்

 

தொழில் மற்றும் வியாபாரம் விருத்தியடைய, செல்வம் பெருக பணம் புழங்கும் இடமான கல்லாப்பெட்டி, பணப்பெட்டி மற்றும் பீரோ போன்ற இடங்களில் இந்த பச்சை கற்பூரத்தை ஒரு டப்பாவில் போட்டு வைக்கலாம்.

அதேபோல் வாசனை மிகுந்த இடங்களில் மகாலட்சுமி குடிகொள்வாள். ஆதலால் பணம் புழங்கும் இடங்களில் வாசனை மிக்க பச்சை கற்பூரமானது இருந்தால் செல்வம் செழிக்கும்.

பசுமாட்டிற்கு இந்த ஒரு பொருளை தானமாக கொடுத்தால் தீராத கடனும் தீரும்

நினைத்தது நிறைவேறும்:

பணம்

பொதுவாக வீட்டில் நடைபெறக்கூடிய எல்லா சுப நிகழ்ச்சிகளிலும் பச்சை கற்பூரத்தை இடம் பெற செய்வது நல்ல பலன்களை அளிக்கும்.

இரண்டு அல்லது மூன்று பச்சை கற்பூரத்தை எடுத்து குல தெய்வத்தையும், இஷ்ட தெய்வங்களையும் மனதார வணங்கி நமக்கு வேண்டியவற்றை நினைத்து பிரார்த்தனை செய்து அந்த பச்சை கற்பூரத்தை டப்பாவில் போட்டு வைத்து விடவேண்டும். இப்படி செய்வதால் நம் வாழ்வில் நல்லதொரு மாற்றம் ஏற்படும்.

வீட்டில் உள்ள அனைத்து பணக்கஷ்டமும் நீங்க சர்க்கரையுடன் இந்த ஒரு பொருளை சேர்த்து வையுங்க போதும்

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்
Advertisement