பணவரவை அதிகரிக்க பச்சை கற்பூரம்
இன்றைய காலத்தில் அனைவருக்கும் ஏதோ ஒரு தேவை இருந்து கொண்டே தான் இருக்கிறது. இந்த தேவை அதிகமாகும் போது கடன் வாங்கும் சூழ்நிலை ஏற்படுகிறது. இத்தகைய கடனை அடைப்பதற்கு பணத்தை தேடி ஓடி ஓடி உழைக்கின்றோம். அப்படி நாம் ஓடி ஓடி சம்பாதிக்கும் பணமானது கடனை அடைப்பதற்கே சரியாக இருந்தால் எப்படி பணத்தை சேமித்து வைக்க முடியும். அதனால் தான் இந்த பதிவில் பணம் சேருவதற்கான பரிகாரத்தை பற்றி காண போகிறோம்.
பணக்கஷ்டத்தையும் போக்கி பணவரவை அதிகரிக்க இந்த ஒரு வேர் போதும்
பணவரவு அதிகரிக்க பரிகாரம்:
முதலில் நமது வீடானது சுத்தமாக இருக்க வேண்டும். அப்போது தான் பணம் சேரும். எந்த வீடு சுத்தமாகவும், வாசனையாகவும் இருக்கிறதோ அந்த வீட்டில் தான் மகாலட்சுமி இருப்பார். அதனால் வீட்டை சுத்தமாக வைத்து கொள்ளவும்.
பரிகாரம் செய்வதற்கு 7 கிராம்பு, 7 ஏலக்காய், 7 பச்சை கற்பூரம், 7பிரியாணி இலை தேவைப்படும்.
பிறகு ஒரு மஞ்சள் துணியை எடுத்து வைத்து கொள்ளவும். அதில் மேல் கூறிய பொருட்களை ஒரு மூட்டையாக கட்டி கொள்ளவும்.
2024-ல் ரிஷபத்தில் நுழையும் குருவால் இந்த ராசிக்காரர்களுக்கு இனி அமோகமான வாழ்க்கை தான்
இந்த மூட்டையை பூஜை அறையில் வைத்து மனதார வேண்டி கொள்ளவும். அதாவது என்னுடைய பணம் கஷ்டம் எல்லாம் தீர்ந்து பணம் பெறுக வேண்டும். நான் என்னுடைய வாழ்வில் செல்வ செழிப்புடன் இருக்க வேண்டும் என்று வேண்டி கொள்ளவும்.
பிறகு இதனால் நீங்கள் பணம் வைக்கும் இடத்தில் வைத்து விட வேண்டும். இந்த பரிகாரத்தை எந்த நாட்களில் வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால் இதனை பிரம்ம முகூர்த்தத்தில் தான் செய்ய வேண்டும்.
இந்த மூட்டையில் உள்ள வாசனை பொருட்களின் வாசனை போன பிறகு மறுமுறை இதை செய்ய வேண்டும். இதில் உள்ள பொருட்களை ஆற்றில் தூக்கி போட வேண்டும்.
பர்சில் பணம் இருக்க:
நீங்கள் பணம் வைக்கும் பர்சில் 2 பச்சை கற்பூரத்தை ஒரு பேப்பரில் மடித்து வைத்து விட வேண்டும். இப்படி வைப்பதினால் உங்களுடைய பர்சில் எப்பொழுதும் பணம் குறையாமல் இருக்கும்.
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மீக தகவல்கள் |