கடன் பிரச்சனை தீர பச்சை கற்பூரம் மட்டும் போதும்..

Advertisement

கடன் பிரச்சனை தீர பச்சை கற்பூரம்

பொதுவாக அனைவருமே பணத்தை அதிகமாக சம்பாதிக்க வேண்டும் என்று தான் நினைக்கிறார்கள். ஆனால் சம்பாதிக்கின்ற பணம் அன்றைய நாள் செலவுகளை சமாளிக்க மட்டுமே சரியாக இருந்தால் எப்போ தான் ஆசைப்பட்டதை அடைய முடியும் என்ற வருத்தம் இருக்கும். பொதுவாக நம் வீட்டில் இருக்க கூடிய சில பொருட்களுக்கு பணத்தை ஈர்க்க கூடிய சக்தி உள்ளது. அதில் ஒன்று தான் பச்சை கற்பூரம். அதனால் பச்சை கற்பூரத்தை வைத்து எப்படி கடன் பிரச்சனை தீர்ந்து பணத்தை அதிகரிப்பது என்று இந்த பதிவின் வாயிலாக அறிந்து கொள்வோம் வாங்க..

பணத்தை ஈர்ப்பது எப்படி.?

இயற்கையாகவே பச்சை கற்பூரத்திற்கு பணத்தை ஈர்க்க கூடிய சக்தி உள்ளது. அதனால் பச்சை கற்பூரத்தை மஞ்ச துணியில் வைத்து முடிந்து கொள்ளவும். இதனை குபேர மூலையில் வைத்து தினமும் பூஜை செய்யும் போது அதற்கு சேர்த்து பூஜை செய்ய வேண்டும். இது போல செய்வதினால் வீட்டில் பணத்தை ஈர்க்கும்.

பொதுவாக வாசனை உள்ள பொருட்களுக்கு பணத்தை ஈர்க்க கூடிய சக்தி உள்ளது.   அப்படி பார்க்கும் போது பச்சை கற்பூரத்தில் அதிக வாசனை நிறைந்துள்ளது. இதனால் வீட்டில் பணவரவு அதிகரிக்கும்.

பெண்கள் மெட்டி அணிவது எதற்காக அதனை பற்றிய ரகசியம் தெரியுமா

செல்வ நிலை அதிகரிக்க:

செல்வ நிலை அதிகரிக்க

ஒரு தட்டு எடுத்து அதன் மேல் பச்சை கற்பூரத்தை வைத்து கொள்ளவும். அதன் மேல் ஒரு ரூபாய் நாணயத்தை வைத்து அதற்கு சந்தனம், குங்குமம் பூ வைக்க வேண்டும். இதனை வீடு மற்றும் தொழில் செய்யும் இடங்களில் வைத்து பூஜை செய்ய வேண்டும். ஒவ்வொரு நாளும் இதனை மாற்ற வேண்டும்.

பச்சை கற்பூரத்தை தண்ணீரில் கரைத்து விட வேண்டும், நாணயத்தை சேகரித்து கொண்டே வர வேண்டும், சந்தனம், குங்குமத்தை தண்ணீரில் கரைத்து விட வேண்டும். இந்த பரிகாரத்தை தினமும் செய்து வாருங்கள் வீட்டில் பணவரவு அதிகரிப்பதை நீங்களே காண்பீர்கள்.

பர்சில் வைக்க வேண்டியது:

பர்சில் வைக்க வேண்டியது

பர்ஸை எடுத்து கொள்ளவும், அதில் 2 பச்சை கற்பூரத்தை வைத்து கொள்ள வேண்டும். பச்சை கற்பூரம் இருப்பதால் பர்சில் உள்ள பணம் செலவானாலும், மறுபுறம் பணம் வந்து கொண்டே இருக்கும்.

கடன் தொல்லை நீங்கி செல்வம் சேர இதை மட்டும் மறக்காமல் செய்யுங்கள்..!

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 
Advertisement