பச்சை மயில் வாகனனே பாடல் வரிகள்…

Advertisement

பச்சை மயில் வாகனனே

இந்துக்களின் தமிழ் கடவுளான முருகனை மனம் உருகி பக்தியுடன் வணங்கிட நிறைய முருகன் பக்தி பாடல்கள் வரிகள் நிறைய இருக்கின்றன. அவற்றில் அந்த பக்தி பாடல் வரிகளில் ஒன்று தான் சின்ன சின்ன முருகையா என்னும் முருகன் பாடல். முருகனை அனைவருக்கும் பிடிக்கும். அவருக்கு உரிய பலகாரங்கள், சூடம், சாம்பிராணி, பக்தி போன்றவை காண்பித்து அவரை வணங்குவோம். அதோடு மட்டுமில்லமால் மந்திரம், போற்றி போன்றவற்றை கூறி வணங்குவதால் அவருடைய அருள் முழுமையாக கிடைக்கும். அதனால் தான் இந்த பதிவிபச்சை மயில் வாகனனே பாடல் வரிகளை தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

பச்சை மயில் வாகனனே:

பச்சை மயில் வாகனனே – சிவ

பால சுப்ரமணியனே வா

இங்கு இச்சையெல்லாம் உன் மேலே வைத்தேன்

எள்ளளவும் பயமில்லையே

( பச்சை மயில் வாகனனே )

கொச்சை மொழியானாலும் – உன்னை

கொஞ்சி கொஞ்சி பாடிடுவேன்

சர்ச்சை எல்லாம் அழிந்ததப்பா – எங்கும்

சாந்தம் நிறைந்ததப்பா

( பச்சை மயில் வாகனனே )

Pachai Mayil Vaahanane in tamil:

முருகன் பக்தி பாடல்கள்

நெஞ்சமதில் கோயில் அமைத்து – அங்கு

நேர்மையெனும் தீபம் வைத்து

செஞ்சிலம்பு கொஞ்சிடவே – வா முருகா

சேவல் கொடி மயில் வீரா

( பச்சை மயில் வாகனனே )

வெள்ளம் அது பள்ளந்தனிலே – பாயும்

தண்ணி போல் உள்ளந்தனிலே – ‍‍ நீ

மெல்ல மெல்ல புகுந்து விட்டாய் – எந்தன்

கள்ளமெல்லாம் கரைந்ததப்பா

( பச்சை மயில் வாகனனே )

பச்சை மயில் வாகனனே:

பச்சை மயில் வாகனனே

ஆறுபடை வீடுடையவா

எனக்கு ஆறுதலை தரும் தேவா (2)

நீ ஏறுமயில் ஏறி வருவாய் – அப்பா

எங்கும் நிறைந்தவனே

நீ ஏறுமயில் ஏறி வருவாய் – முருகா

எங்கும் நிறைந்தவனே

( பச்சை மயில் வாகனனே )

Pachai Mayil Vaahanane in tamil:

அலைகடல் ஓரத்திலே – என்

அன்பான சண்முகனே – நீ

அலையா மனம் தந்தாய் – உனக்கு

அனந்த கோடி நமஸ்காரம்.

நீ அலையா மனம் தந்தாய்

உனக்கு அனந்த கோடி நமஸ்காரம்.

பச்சை மயில் வாகனனே – சிவ

பால சுப்ரமணியனே வா

இங்கு இச்சையெல்லாம் உன் மேலே வைத்தேன்

எள்ளளவும் பயமில்லையே முருகா

எள்ளளவும் பயமில்லையே

( பச்சை மயில் வாகனனே ) 

சபரிமலை ஐயப்பனின் புகழ்பாடும், ஓடக்கரை மண்ணெடுத்து ஐயப்பா பாடல் வரிகள்

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்
Advertisement