பச்சை மயில் வாகனனே பாடல் வரிகள்..! | Pachai Mayil Vaahanane Lyrics in Tamil

Pachai Mayil Vaahanane Lyrics in Tamil

Lyrics of Pachai Mayil Vaahanane in Tamil

ஆனமீக அன்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.  இப்பதிவில் நாம் முருகனை போற்றி வழிபடக்கூடிய பச்சை மயில் வாகனனே பக்தி பாடலை பார்க்கலாம் வாங்க. நம் கஷ்டங்கள் அனைத்தையும் நீக்கி நாம் கேட்பவற்றை நமக்கு அளிப்பவர் முருகன். எனவே இத்தனை சிறப்புகளை அள்ளிக்கொடுக்கும் முருகனை வழிபடுவதன் மூலம் நம் மனதில் அமைதியும்  மகிழ்ச்சியும் உண்டாகிறது. அதுமட்டுமில்லாமல், நாம் அவரை போற்றி  பாடக்கூடிய பாடல் வரிகளை உச்சரித்து நாம் வழிப்படுவதன் மூலம் இன்னும் அதிகமான பலன்களை பெறலாம். ஆகவே, இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள பச்சை மயில் வாகனனே பாடல் வரிகள் பாடி மகிழலாம் வாங்க.

Pachai Mayil Vaahanane Lyrics in Tamil:

Lyrics of Pachai Mayil Vaahanane in Tamil

பச்சை மயில் வாகனனே – சிவ
பால சுப்ரமணியனே வா
இங்கு இச்சையெல்லாம் உன் மேலே வைத்தேன்
எள்ளளவும் பயமில்லையே(பச்சை)

கொச்சை மொழியானாலும் – உன்னை
கொஞ்சி கொஞ்சி பாடிடுவேன்
சர்ச்சை எல்லாம் அழிந்ததப்பா – எங்கும்
சாந்தம் நிறைந்ததப்பா(பச்சை)

நெஞ்சமதில் கோயில் அமைத்து – அங்கு
நேர்மையெனும் தீபம் வைத்து
செஞ்சிலம்பு கொஞ்சிடவே – வா முருகா
சேவல் கொடி மயில் வீரா(பச்சை)

வெள்ளம் அது பள்ளந்தனிலே – பாயும்
தண்ணி போல் உள்ளந்தனிலே – ‍‍ நீ
மெல்ல மெல்ல புகுந்து விட்டாய் – எந்தன்
கள்ளமெல்லாம் கரைந்ததப்பா(பச்சை)

ஆறுபடை வீடுடையவா
எனக்கு ஆறுதலை தரும் தேவா
2)
நீ ஏறுமயில் ஏறி வருவாய் – அப்பா
எங்கும் நிறைந்தவனே
நீ ஏறுமயில் ஏறி வருவாய் – முருகா
எங்கும் நிறைந்தவனே —- பச்சை

அலைகடல் ஓரத்திலே – என்
அன்பான சண்முகனே – நீ
அலையா மனம் தந்தாய் – உனக்கு
அனந்த கோடி நமஸ்காரம்.
நீ அலையா மனம் தந்தாய்
உனக்கு அனந்த கோடி நமஸ்காரம்.

பச்சை மயில் வாகனனே – சிவ
பால சுப்ரமணியனே வா
இங்கு இச்சையெல்லாம் உன் மேலே வைத்தேன்
எள்ளளவும் பயமில்லையே முருகா
எள்ளளவும் பயமில்லையே(பச்சை)

pachai mayil vaahanane lyrics in tamil pdf

மருதமலை சத்தியமா உன் ஆறுபடையும் சண்முகா பாடல் வரிகள்

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் – Aanmeega Thagavalgal