வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

பாய் கனவில் வந்தால் என்ன பலன்

Updated On: June 12, 2025 1:09 PM
Follow Us:
pai kanavil vanthal enna palan
---Advertisement---
Advertisement

பாய் கனவில் வந்தால் என்ன பலன் | Korai Pai Kanavil Vanthal Enna Palan 

கனவு என்பது பொதுவாக நமக்கு வரும் மகிழ்ச்சி மற்றும் துன்பத்தை கூறுவதாக இருக்கிறது. அதுமட்டுமில்லமால் நாம் சில விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும் என்பதனையும் குறிக்கிறது. அப்படி நாம் காணும் ஒவ்வொரு கனவும், ஒவ்வொரு அர்த்தம் உடையதாக இருக்கிறது. நம்முடைய பதிவில் பல்வேறு வகையான கனவுகளுக்கு அர்த்தத்தை பதிவிட்டு வருகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவில் பாய் கனவில் வந்தால் என்ன பலன் என்று அறிந்து கொள்வோம்.

பாய் வாங்குவது போல கனவு கண்டால்:

பாய் கடையில் சென்று வாங்குவது போலவோ, பாய் செய்கின்ற இடத்தில் வாங்குவது போல கனவு கண்டாலோ உங்களுக்கு திருமண தடை ஏதும் இருந்தால் அவை நீங்கும் என்பதை தான் இந்த கனவு உணர்த்துகிறது. திருமணத்தில் ஈடுபாடு இல்லாதவர்கள் அதாவது இப்போ வேண்டாம், என்று தள்ளி போடுகிறவர்கள் கூட இந்த நேரத்தில் திருமணம் செய்து கொண்டால் திருமண வாழ்க்கை நன்றாக இருக்கும்.

பழைய பாய் அல்லது கிழிந்த பாயை கனவில் கண்டால் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும் என்பதனை குறிக்கிறது. பழைய உறவுகளை பற்றி நினைக்க வேண்டும் என்பதனை பற்றியும் கூறுகிறது.

பாயை விரிப்பது போல கனவு கண்டால் உங்கள் வீட்டிற்கு விருந்தாளிகள் வரப்போகிறார்கள் என்பதனை குறிக்கிறது. மேலு சுப நிகழ்ச்சிகள் நிகழ போகிறது என்பதை குறிக்கிறது. அதுமட்டுமில்லாமல் நீங்கள் எதாவது திட்டம் வைத்திருந்து அதனை இப்போது செயல்படுத்த போகிறீர்கள் என்றால் அதில் முன்னேற்றம் ஏற்படும் என்பதது அர்த்தமாக இருக்கிறது.

பாயில் தெரியாமல் விழுகிறீர்கள் அல்லது சறுக்கி விடுவது போல கனவு கண்டால் நீங்கள் தவறான முடிவுகள் எடுக்க போகிறீர்கள் என்பதை குறிக்கிறது. மேலும் வேலைகளில் தவறுகள் ஏற்பட போகிறது, கவனமாக செய்ய வேண்டும் என்பதும் மற்றொரு அர்த்தமாக இருக்கிறது. நீங்கள் இந்த கனவை கண்டால் ரொம்ப கவனமாக இருக்க வேண்டும் என்பதை குறிக்கிறது.

பாயில் இரத்தம் அல்லது பூச்சி போன்றவற்றை கனவில் கண்டால் தூக்கமின்மை அல்லது காயங்கள் ஏற்பட போகிறது என்பதனை குறிக்கிறது. அதனால் இந்த நேரத்தில் வாகனத்தில் செல்லும் போது கவனமாக செல்ல வேண்டும்.

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மீக தகவல்கள்
Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now