உங்கள் வீட்டுக்கு இந்த பெயிண்டை அடிச்சிருங்க..! இல்லையென்றால் பிரச்சனை அதிகம் வரும்..!

Advertisement

வீடு பெயிண்ட் கலர் – Paint the House According to Vastu in Tamil

பெரும்பாலான மக்களின் பெரிய கனவு என்றால் அது வீடு தான். சிலருக்கு அது நினைவாக மாறுகிறது சிலருக்கு கனவாக போகிறது. அதேபோல் வீடு என்றால் வாஸ்துப்படி கட்டுவார்கள். அதேபோல் அந்த வீடு கட்டுவது முதல் அதனை முடிக்கும் வரை வாஸ்துப்படி தான் ஒவ்வொன்றும் செய்வார்கள். குளியல் அறை முதல் பூஜை அறை வரை அப்படி தான் கட்டுவார்கள்.

கட்டி முடித்த பிறகு அந்த வீட்டிற்கு அழகு அதிகப்படுத்த நிறைய கலர் பெயிண்ட் அடிப்பது வழக்கம் ஆகும். ஆனால் அதையும் வாஸ்துப்படி அடித்தால் நன்றாக இருக்கும். ஆகவே அதனை பற்றி பார்க்கலாம் வாங்க..!

Paint the House According to Vastu in Tamil:

நம்மில் சிலருக்கு மஞ்சள் நிற பெயிண்ட் என்றால் மிகவும் பிடிக்கும். அதை கூட உங்கள் வீட்டிற்கு அடிக்க நினைப்பீர்கள். ஆனால் அது மாதிரி அடிப்பதை தவிர்க்கவும். அப்படி என்றால் யார் இந்த பெயிண்டை அடிக்க கூடாது யார் அடிக்கலாம் என்று பார்க்கலாம்.

வாஸ்துப்படி வீட்டின் கிழக்கு சுவரில் இந்த மஞ்சள் நிற பெயிண்டை அடிக்கலாம்.  ஆனால் அடர் மஞ்சள் நிற பெயிண்டை தனியாக அடிக்க கூடாது. அதேபோல் ஒவ்வொரு தெய்வமும் ஒவ்வொரு தெய்வங்களுடன் தொடர்புடையது.

அந்த வகையில் மஞ்சள் நிற பெயிண்ட் குரு பகவானுடைய பெயிண்ட் ஆகும். குரு பகவான் அறிவையும் ஞானத்தையும் வழங்குபவர். ஆகவே அந்த பகவானுடைய முழு பலனையும் பெற வேண்டுமென்றால் நீங்கள் வடகிழக்கு திசை. எனவே அந்த திசையில் உள்ள சுவரில் இந்த பெயிண்டை அடிப்பது நல்லது. அது உங்களுக்கு செழிப்பு, அமைதி போன்றவற்றைத் தரும்.

வாஸ்துப்படி மிதியடி பயன்படுத்துங்கள்  வீட்டில் செல்வம் பெருகும்

எந்த திசையில் மஞ்சள் நிற பெயிண்டை அடிக்க கூடாது:

உங்கள் வீட்டின் தென்கிழக்கு திசையில் அடிக்க கூடாது. அதையும் மீறி இந்த பெயிண்டை அடித்தால் வீட்டில் தேவையில்லாத பிரச்சனைகள் வரக்கூடும்.

அதேபோல் வீட்டின் அக்னி திசையிலும் பயன்படுத்த கூடாது. அப்படி பயன்படுத்தினால் குடும்ப வாழ்க்கையில் கழகம் உருவாகும்.

அதேபோல் தெற்கு திசையில் மஞ்சள் நிற பெயிண்டை அடித்தால் அது உங்கள்  தாயின் உடல் நலனில் குறைகள் ஏற்படும். அதேபோல் பொருளாதார குறைபாடுகள் ஏற்படும்.

அதேபோல் வெறும் மஞ்சள் நிறத்தை பயன்படுத்த கூடாது. அடர் மஞ்சள் நிறத்தை தவிர்க்கவும். முக்கியமாக சிவப்பு நிறத்தை கலந்து தான் பெயிண்ட் அடிக்கவேண்டும்.

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 
Advertisement