பல் உடைவது போல் கனவு வந்தால் இதுதான் அர்த்தம்..! உங்களுக்கு தெரியுமா.?

Advertisement

பல் கனவு பலன்கள் | Pal Kanavu Palangal in Tamil | Pal Udaivathu Pol Kanavu Kandal

ஆன்மீக வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் பல் ஆடுவது போல் கனவு கண்டால், பல் உடைவது போல் கனவு கண்டால் மற்றும் பல் விழுவது போல் கனவு வந்தால் இதுபோன்ற கனவு வந்தால் Pal Kanavu Palangal in Tamil) என்ன பலன் என்பதை பின்வருமாறு விவரித்துள்ளோம். பொதுவாக, நமக்கு வரும் ஒவ்வொரு கனவுகளும் நமக்கு எதிர்காலத்தில் நடக்கக்கூடிய விஷயங்களை உணர்த்தக்கூடியது. ஒவ்வொரு கனவும் ஒவ்வொரு விதமான பலன்களைஅளிக்கும் .

அப்படி, நமக்கு வரும் கனவுகளுக்கு என்ன அர்த்தம் என்பது நம்மில் பலபேருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. தூக்கத்தில் நமக்கு பல்வேறு விதமான கனவுகள் வரும். அவை ஒவ்வொன்றிற்கும் என்ன அர்த்தம் என்பது நமக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. எனவே, உங்களுக்கு பயனுள்ள வகையில் இப்பதிவில் நம் பொதுநலம் பதிவில் பல்வேறு கனவுகளுக்கான பலன்களை தொகுத்து பின்வருமாறு விவரித்துள்ளோம்.

பல் கனவில் வந்தால்:

பற்கள் கனவில் வந்தால் நமக்கு பிற்காலத்தில் நமக்கு வரக்கூடிய பிரச்சனைகளை முன்கூட்டியே உணர்த்துகிறது. அதுமட்டுமில்லாமல், பல் உடைவது போல் வந்தால் ஒரு அர்த்தமும், பல் விழுவதுபோல் கனவு வந்தால் ஒரு அர்த்தமும் இருக்கிறது. அதனை பற்றி பின்வருமாறு படித்து தெரிந்து கொள்ளலாம்.

அடி வாங்குவது போல் கனவு கண்டால் என்ன பலன்

பல் உடைவது போல் கனவு கண்டால் என்ன பலன் | Pal Udaivathu Pol Kanavu Kandal:

பல் உடைவது போல், நொறுங்குவதுபோல் கனவு வந்தால் (Pal Udaivathu Pol Kanavu Kandal) நீங்கள் ஏதோவொரு பயத்திலும் அச்ச உணர்விலும் இருப்பதை உணர்த்துகிறது. இப்படிப்பட்ட கனவு வந்தால் உங்கள் மனதில் இருக்கும் பயம் தான் காரணம். எவர், ஒருவர் மனதில் ஏதோவொரு விஷயத்தை எண்ணி பயப்படுகிறார்களோ அவர்களுக்கு இதுபோன்ற கனவுகள் அதிகம் வரும். மனதிற்குள் எழும் பயம் இந்த மாதிரியான கனவுகளுக்கு காரணம்.

பல் விழுவது போல் கனவு வந்தால் | Pal Vizhuvathu Pol Kanavu Kandal:

  • பல் விழுவது போல் கனவு வந்தால், நமக்கு வரும் ஆபத்தை முன்கூட்டியே உணர்த்துவதாகும். எதிலும் கவனமாக இருக்க வலியுறுத்துகிறது. இரத்தம் வராமல் பற்கள் விழுந்தால், அது உங்களுக்கு வரும் தோல்வியை உணர்த்துகிறது. பண கஷ்டம் மற்றும் கடன் பிரச்சனைகளில் இருப்பவர்களுக்கு பல் விழுதல் கனவு அதிகமாக வரும்.
  • உங்கள் வீட்டில் உள்ளவர்களின் பற்கள் விழுவதுபோல் கனவு வந்தால், அவர்களுக்கு உடல்நல பிரச்சனைகள் ஏற்பட போகிறது என்றும், உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்கவும் அறிவுறுத்துகிறது.
  • உங்கள் நன்பரின் பற்கள் விழுவது போல் கனவு வந்தால், அவர் உங்களிடம் சண்டையிட்டு பிரியப்போகிறார் என்பதை அறிவுறுத்துகிறது.
  • மன அழுத்தம், உடல் ஆரோக்கிய பிரச்சனை போன்ற காரணங்களாலும் பற்கள் விழுவது போன்று கனவு வரலாம்.

பல் ஆடுவது போல் கனவு கண்டால்:

பல் ஆடுவது போல் கனவு வந்தால், உங்கள் கூட இருபவர்களிடம் கவனமாக இருக்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது. அதாவது, நீங்கள் நெருங்கி பழகும் யாரிடமும் எந்தவிதமான ரகசியத்தையும் சொல்லிவிட கூடாது என்பது உணர்த்துகிறது.

வீட்டிற்குள் பாம்பு வருவது போல் கனவு கண்டால் என்ன பலன் தெரியுமா.?

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மீக தகவல்கள்
Advertisement