பழைய துணிகளை எரிக்கலாமா
நாம் அனைவருமே துணிகளை ஆசையாகவும், பிடித்தும் தான் வாங்குவோம். ஆனால் எவ்வளவு தான் காசு கொடுத்து துணிகளை வாங்கினாலும் அதனை வருடக்கணக்கில் பயன்படுத்த முடியாது. ஏனென்றல் நாளடைவில் துணி பழையதாக மாறி விடும். இல்லையென்றால் துணி கிழிந்து விடும். இதனால் அதனை பயன்படுத்த மாட்டோம். ஆனால் வீட்டில் அதனை பல முறைகளில் பயன்படுத்துவார்கள். அடுப்படியில் புனித்துணியாக பயன்படுத்துவார்கள். சில பேர் கால் மிதியடியாக பயன்படுத்துவார்கள். இன்னும் சில பேர் அதனை எரித்து விடுவார்கள். இந்த பதிவில் புனித்துனியாக பயன்படுத்தலாமா என்று அறிந்து கொள்வோம் வாங்க..
பழைய துணி:
பெரும்பாலானவர்கள் நாம் பயன்படுத்திய பழைய துணிகளை கரித்துணியாக தான் பயன்படுத்துகிறார்கள். ஆனால் இது போல பயன்படுத்துனீர்கள் என்றால் அதனை முதலில் நிறுத்துங்கள். ஏனென்றால் நம்முடைய வீட்டில் இருக்கும் சமையலறையில் பல மங்களகரமான பொருட்கள் மஞ்சள் மற்றும் உப்பு போன்றவை இருக்கிறது. இந்த பொருட்களில் எல்லாம் மகாலட்சுமி வாசம் செய்வாள் என்று ஆன்மிகத்தில் கூறப்படுகிறது. அதனால் நீங்கள் பயன்படுத்திய துணியை கரித்துணியாக பயன்படுத்தினால் வீட்டில் தரித்தியம் பெருகும், அதனால் இதனை தவிர்த்திடுங்கள்.
நீங்கள் ஒரு நாளைக்கு எவ்வளவோ செலவு செய்கிறீர்கள், அதனால் கடைகளில் சின்ன டவல் இருக்கும், அதனை வாங்கி பயன்படுத்துங்கள்.
துணிகள் சரியாக காயாமல் துர்நாற்றம் வீசுகிறதா
பழைய துணிகளை எரிக்கலாமா:
பழைய துணிகளை சேகரித்து வைத்து கொள்ளுங்கள், வருடம் வருடம் வரும் போகிப்பண்டிகை அன்று சேகரித்த பழைய துணிகளை எரித்து விடலாம். ஆனால் அடிக்கடி பழைய துணிகளை எரிக்க கூடாது.
என்ன தான் செய்வது:
வீட்டில் உள்ள பழைய துணிகள் ஆனது கிழியாமல் இருந்தால் அதனை நன்றாக துவைத்து விட்டு கஷ்டப்படுகிறவர்களுக்கு தானமாக கொடுக்கலாம். அதற்காக ரொம்பவும் பழைய துணிகளை தானமாக கொடுக்க கூடாது.
கிழிந்த ஆடைகளை தண்ணீரில் விடுகிறீர்கள் இது தவறான ஒன்றாகும், ஏனென்றால் நீங்கள் தண்ணீரில் விடுவதன் மூலம் தண்ணீரின் அடியில் அதாவது நீர் ஊற்றிலோ அல்லது பூமியிலோ படிந்து விட்டால் அந்த இடத்தில் இருக்கும் நீரோட்டம் குறைந்து போகும். இதன் மூலம் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும்.
தண்ணீரிலும் நீரிலும் மக்கிப் போக முடியாத ஆடைகள் அப்படியே நீர்நிலைகளில் தங்கி விட்டால் இயற்கைக்கு ஆபத்தை விளைவிக்கும். இந்த கஷ்டம் நம்மோடு போகாது. நமக்கு தண்ணீர் கஷ்டம் வருவதோடு சேர்த்து, நமக்கு அடுத்தடுத்து வரக்கூடிய சந்ததியினரும் தண்ணீர் இல்லாமல் வறட்சியில் கஷ்டப்படும் அளவிற்கு பிரச்சனைகள் பெரியதாக வருவதற்கும் வாய்ப்புகள் உண்டு.
வெள்ளை துணிகளில் மஞ்சள் கறை நீங்க இனி கஷ்டப்பட வேண்டாம் இதை ட்ரை செய்தாலே போதும்
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மீக தகவல்கள் |