வீட்டில் பல்லி இருப்பது நல்லதா கெட்டதா | Lizards in House Good or Bad in Tamil
வீட்டின் சுவற்றில் பல்லி இல்லாமல் இருக்காது. அந்த பல்லியை பார்த்தாலே தலை தெறிக்க ஓடும் நபர்கள் பல பேர் இருக்கின்றர்கள். சிலரது வீட்டில் பல்லி அதிகமாக இருக்கும். அது போல இந்த இடத்தில் இந்த பலன்கள் என்று ஆன்மிகத்தில் கூறப்படுகிறது. பல பேருக்கும் பல்லி வீட்டில் இருந்தால் நல்லதா கெட்டதா என்பதை பற்றி ஆன்மிகத்தில் என்ன சொல்கிறது என்று இந்த பதிவின் மூலம் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க..
பல்லி வீட்டில் இருந்தால் நல்லதா கெட்டதா:
வீட்டில் பல்லி இருப்பது நல்ல சகுனம் என்று ஆன்மிகத்தில் கூறப்படுகிறது. அது எப்படி தோன்றினால் நாளல்ல சகுனம் என்று ஒவ்வொன்றாக தெரிந்து கொள்வோம் வாங்க..
வீட்டின் பூஜை அறையில் பல்லி:
வீட்டின் பூஜை அறையில் பல்லி இருந்தால் செல்வம் செழிப்பை வெளிப்படுத்துகிறது. பணவரவு அதிகரிக்கும், மற்றும் லாபத்தை அள்ளி தர போகிறது என்பதை குறிக்கிறது.
வீட்டிற்குள் வரும் போது பல்லியை பார்த்தால்:
வெளியிலிருந்து வீட்டிற்குள் வரும் போது பல்லியை பார்த்தீர்கள் என்றால் ராகு உங்கள் வாழ்க்கையில் நுழைந்து விட்டார் என்று அர்த்தம். இந்த நேரத்தில் நீங்கள் செய்யும் செயல்களிலும் கவனமாக இருக்க வேண்டும்.வீட்டின் தரையில் பல்லியை பார்த்தால்:
வீட்டின் தரையில் பல்லி ஊர்ந்து போவது போல் பார்த்தால் இயற்கையில் பூகம்பம் அல்லது போன்ற நிகழ்வினை குறிக்கிறது.
பல்லிகள் சண்டையிடுவது போல பார்த்தால்:
பல்லிகள் சண்டை இடுவது போல பார்த்தால் வீட்டில் ஏதவாது கஷ்டம் ஏற்படும், இல்லையென்றால் குடும்பத்தில் உள்ளவர்களுடன் சண்டை ஏற்படும்.பல்லி உடம்பில் எந்த இடத்தில் விழுந்தால் அதிர்ஷ்டம் தெரியுமா?
புதிதாக போகும் வீட்டில் பல்லியை பார்த்தால்:
புதிதாக ஒரு வீட்டிற்கு செல்லும் போது பல்லியை பார்த்தால் நம் முன்னோர்களின் வருகையை குறிக்கிறது. நம் முன்னோர்கள் நம்மை ஆசிர்வதிக்க பல்லி ரூபத்தில் வருவதாக நம்பப்படுகிறது.
இறந்த பல்லியை பார்த்தால்:
வீட்டை விட்டு வெளியே செல்லும் போது இறந்த பல்லியை பார்த்தால் அந்த நேரத்தில் நீங்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல கூடாது என்பதை குறிக்கிறது. அதாவது விபத்து நேரிடும் என்பதை முன்னரே தெரிவிக்கிறது.
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |