Palli Vilum Palan in Tamil for Female
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் பல்லி விழும் பலன் பெண்களுக்கு (Palli Vilum Palan in Tamil for Female in Tamil) பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க. பல்லி உடலில் ஒவ்வொரு இடத்தில் விழுந்தாலும் அதற்கு ஒரு பலன் இருக்கிறது. இதில், ஆண்களுக்கு ஒரு விதமான பலன்களும் பெண்களுக்கு ஒரு விதமான பலன்களும் இருக்கும். பெரும்பாலான பெண்கள் பல்லியை பார்த்தாலே பயப்புடுவார்கள்.
ஜோதிடத்தின் படி, பறவை மற்றும் பூச்சியினங்கள் கூறும் சாஸ்திரங்களும் உள்ளது. இவற்றில் ஒன்று தான் கெளலி சாஸ்திரம். பல்லி நம் உடலில் சில இடங்களில் விழுந்தால் அதிர்ஷ்டம் என்றும், சில இடங்களில் விழுந்தால் துரதிர்ஷ்டம் என்றும் கூறப்படுகிறது. சரி இப்போது பெண்களுக்கு பல்லி எந்த இடத்தில் விழுந்தால் என்ன பலன் என்று தெரிந்து கொள்ளலாம் வாங்க.
பல்லி இத்தனை முறை கத்தினால் இதுதான் அர்த்தமாம்..! உங்களுக்கு தெரியுமா.?
பல்லி விழும் பலன் பெண்களுக்கு 2024:
பல்லி விழும் பலன்கள் இடது பக்கம்:
பெண்களுக்கு இடது பக்கத்தில் பல்லி விழுந்தால் அதிர்ஷ்டமான பலன்கள் கிடைக்கும் என்று அர்த்தம் ஆகும்.
பல்லி விழும் பலன்கள் வலது பக்கம்:
அதுவே பெண்களுக்கு வலது பக்கத்தில் பல்லி விழுந்தால் கெட்ட சகுனம் என்று கூறப்படுகிறது.
பல்லி விழும் பலன் பெண்களுக்கு இடது கால்:
பெண்களுக்கு இடது காலில் பல்லி விழுந்தால் அன்றைய நாள் முழுவதும் மகிழ்ச்சி கிடைக்கும் என்பது அர்த்தமாகும்.
பல்லி விழும் பலன் பெண்களுக்கு வலது கால்:
பெண்களுக்கு வலது கால் மீது பல்லி விழுந்தால், செய்யும் முயற்சியில் தோல்வி உண்டாகும் என்பதை உணர்த்துகிறது.
பல்லி விழும் பலன் பெண்களுக்கு தலையில்:
பெண்களுக்கு தலையில் பல்லி விழுந்தால் அவர்களுக்கு ஆரோக்கியத்தில் ஏதேனும் பிரச்சனை வரப்போகிறது என்பதை குறிக்கிறது.
பல்லி விழும் பலன் பெண்களுக்கு வலது கை:
பெண்களுக்கு வலது கையில் பல்லி விழுந்தால் கடன் அல்லது பணம் சம்மந்தமான பிரச்சனையை குறிக்கிறது.
பல்லி விழும் பலன் பெண்களுக்கு இடது கை:
பெண்களுக்கு இடது கையில் பல்லி விழுந்தால் பணவரவு ஏற்படும் என்றும் கூறப்படுகிறது. அதிலும் இடது கை புறங்கையில் விழுந்தால் நல்ல அதிர்ஷ்டம்.
பல்லி விழும் பலன் பெண்களுக்கு மார்பில்:
பெண்களுக்கு மார்பில் பல்லி விழுந்தால் அதிர்ஷ்டம் வரப்போகிறது என்று அர்த்தம் ஆகும். அதாவது, திடீரென்று அதிர்ஷ்டம் ஏற்படும். வலதுபக்க மாரிப்பில் பல்லி விழுந்தால் தன வரவு கிடைக்கும். அதுவே, இடது பக்க மார்பில் பல்லி விழுந்தால் சுகமான வாழ்க்கையை குறிக்கிறது.
வீட்டில் சமயலறையில் பல்லி இருக்கிறதா? விரட்டுவது எப்படி ?
பல்லி விழும் பலன் பெண்களுக்கு வயிற்றில்:
பெண்களுக்கு வயிற்று பகுதியில் பல்லி விழுந்தால் எல்லா வகையிலும் அதிர்ஷ்டம் தான். வலது பக்க வயிற்றில் விழுந்தால் நகை, ஆடைகள் மற்றும் விலையுயர்ந்த ஆடைகள் வாங்கும் யோகம் வரும். இடது பக்க வயிற்றில் விழுந்தால் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
பல்லி விழும் பலன் பெண்களுக்கு வலது தோள்பட்டை:
பெண்களுக்கு தோள்களில் பல்லி விழுந்தால் சுமாரான யோகங்கள் கிடைக்கும். வலது தோள்பட்டையில் விழுந்தால் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். இடது பக்க தோளில் விழுந்தால் சுப யோகம் உண்டாகும்.
பல்லி விழும் பலன் பெண்களுக்கு கழுத்தில்:
பெண்களுக்கு வலது கழுத்தில் பல்லி விழுந்தால் யாருடனாவது சண்டை சச்சரவுகள் ஏற்படும். அதுவே இடது பக்க கழுத்தில் விழுந்தால் செய்யும் காரியத்தில் வெற்றி உண்டாகும்.
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மீக தகவல்கள் |