பல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் தெரியுமா?

Palli Vilum Palan

பல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் தெரியுமா?

பல்லி விழும் பலன் 2019: பல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன்கள் என்பதையும், பல்லி சாஸ்த்திர பலன்களையும் இந்த பதிவில் நாம் படித்தறிவோம் வாங்க…பல்லி என்பது கேதுபகவானை குறிக்கின்றது. பல்லி எல்லார் வீட்டிலும் எளிதாக இருக்க கூடியது. பல்லி கத்துவது முதல், பல்லி உடலில் விழுவது முதல் அனைத்து பலன்களையும் இங்கு நாம் தெரிந்து கொள்ளலாம்..!

newகுபேர விளக்கு ஏற்றும் முறை..!

Palli Vilum Palan – தலை:-

பல்லி விழும் பலன்கள் தலை – முதலில் பல்லி தலையில் விழுந்தால் என்ன என்பதை பற்றி இப்போது நாம் தெரிந்து கொள்வோம். பல்லி தலையில் விழுந்தால் அவர்களுக்கு வரப்போக இருக்கும் கெட்ட நேரத்தை குறிக்கின்றது. அந்த கெட்ட நேரத்தை சமாளிக்க வேண்டும் என்று மறைமுகமாக குறிக்கின்றதாம் பல்லி. இது மட்டும் இன்றி மற்றவர்களிடமிருந்து கடும் எதிர்ப்பு, மன நிம்மதி இன்றி இருப்பார்கள், மேலும் உறவினர்கள் அல்லது நன்கு தெரிந்தவர்களுக்கு மரணம் ஏற்படலாம்.

Palli Vilum Palan – நெற்றி:

பல்லி விழும் பலன்கள் நெற்றி – நெற்றியில் இடது பக்கம் பல்லி விழுந்தால் கீர்த்தி, அதுவே நெற்றியின் வலது பக்கம் பல்லி விழுந்தால் லக்ஷ்மி கடாய்ச்சியம் என்று பல்லி சாஸ்த்திரம் கூறுகிறது.

பல்லி விழும் பலன் – தலை முடியில் பல்லி விழுந்தால்:

பல்லி விழும் பலன்கள் தலை முடி – தலையில் இல்லாமல் தலை முடியின்மீது பல்லி விழுந்தால் ஏதேனும் ஒரு வகையில் நமக்கு நம்மை நிகழும் என்பதன் அர்த்தமாகும்.

Palli Vilum Palan – முகத்தில் பல்லி விழுந்தால்:

பல்லி விழும் பலன்கள் முகம் – முகப்பகுதியில் பல்லி விழுந்தால் உறவினர்கள் வீட்டிற்கு வருவார்கள் என்று அர்த்தமாகும்.

newகுலதெய்வம் தெரியாதவர்கள் அதை தெரிந்து கொள்வது எப்படி?

Palli Vilum Palan – புருவத்தில் பல்லி விழுந்தால்:

பல்லி விழும் பலன்கள் புருவம் – அதேபோல் புருவத்தில் பல்லி விழுந்தால் ராஜபதவியில் இருப்பவர்களிடமிருந்து உதவி கிடைக்கும்.

அதுவே உங்கள் கண்ணம் அல்லது கண்களில் பல்லி விழுந்தால் ஏதோ ஒன்றிற்காக நீங்கள் தண்டிக்கப்படுவீர்கள் என்று அர்த்தமாகும்.

Palli Vilum Palan – இடது கை அல்லது இடது கால்:

பல்லி விழும் பலன்கள் பாதம்:- இடது கை மற்றும் இடது காலில் பல்லி விழுந்தால் அன்றைய நாள் முழுவதும் மகிழ்ச்சி கிடைக்கும் என்று அர்த்தமாகும்.

அதுவே வலது கை அல்லது வலது காலாக இருந்தால் உங்களுக்கு ஏதேனும் உடல் நல கோளாறுகள் ஏற்படும் என்ற அர்த்தமாகும்.

Palli Vilum Palan – பாதத்தில் பல்லி விழுந்தால்:

பல்லி விழும் பலன்கள் பாதம்: –  வரும் காலங்களில் வெளிநாடு பயணங்கள் மேற்கொள்வீர்கள் என்று அர்த்தமாகும்.

தொப்புள் பகுதியில் பல்லி விழுந்தால்:-

தொப்புள் பகுதியில் பல்லி விழுந்தால் விலைமதிப்பு மிக்க பொருட்களான வைர வைடூரியங்கள், இரத்தின கற்கள் கிடைக்க பெருமாம்.

Palli Vilum Palan – தொடையில் பல்லி விழுந்தால்:

தொடையில் பல்லி விழுந்தால் தங்களுடைய பெற்றோர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்துவீர்களாம்.

மார்பு பகுதியில் பல்லி விழுந்தால்:

மார்பு பகுதியில் பல்லி விழுந்தால் என்ன பலன்.? இடது பக்க மார்பில் பல்லி விழுந்தால் சுகம் கிடைக்கும். அதுவே வலது பக்க மார்பில் பல்லி விழுந்தால் இலாபம் கிடைக்கும்.

பல்லி விழும் பலன் – கழுத்து பகுதியில்

கழுத்து பகுதியில் பல்லி விழுந்தால் என்ன பலன் கிடைக்கும். கழுத்தின் இடது பக்கத்தில் பல்லி விழுந்தால் நீங்கள் செய்யும் காரியங்களில் வெற்றி உண்டாகும். அதுவே வலது பக்க கழுத்தில் பல்லி விழுந்தால் மற்றொருவருடன் பகை உண்டாகும்.

newவீட்டில் உள்ள தீய சக்தியை விரட்ட எளிய கல் உப்பு பரிகாரம்..!

 

மேல் கூறப்பட்டுள்ள சம்பவங்களுக்கு என்ன பரிகாரம் என்பதை பற்றி இப்போது நாம் தெரிந்து கொள்வோம்…

பல்லி உங்கள் மீது விழுந்துவிட்டால் உடனே குளித்துவிடுங்கள். குளித்த பின்பு அருகில் உள்ள கோவிலுக்கு சென்று வாருங்கள் அல்லது வீட்டில் உள்ள பூஜை அறையில் விளக்கேற்றுங்கள்.

இல்லையெனில் காஞ்சிபுரத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் தங்கம் மற்றும் வெள்ளியால் செய்யப்பட பல்லியின் சிலை உள்ளது. அதனுடன் சூரியன் மற்றும் சந்திரனின் சித்திரத்தையும் காணலாம், இந்த பல்லியை தொட்டு வணங்கினால் வரும் காலங்களில் ஏற்படும் சோகங்கள் நீங்கும் மேலும் நன்மை நிகழும்.

இது போன்று தகவல்களை தினமும் தெரிந்து கொள்ள நம் பொதுநலம் வெப்சைட்டை பார்வையிடுங்கள்.

 

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் – Aanmeega Thagavalgal