பல்லி நம் உடலில் எங்கே விழுந்தால் என்ன பலன்..!

 Palli Vilum Palan In Tamil..!

Palli Vilum Palangal Tamil: நண்பர்களுக்கு வணக்கம்..! இன்று பொதுநலம்.காம் பதிவில் பல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்னென்ன பலன்கள் இருக்கிறது என்பதை பற்றித்தான் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம். பல்லி விழுந்தால் ஒவ்வொரு சகுணத்தை கூறுவார்கள். அந்த பழக்கம் இன்றும் மாறாமல் நிலைப்பெற்று வருகிறது. பல்லியானது நம் வரலாற்று புராணத்தில் முக்கிய இடத்தினை பெற்றுள்ளது. சரி வாங்க நண்பர்களே இப்போது பல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன்கள் இருக்கிறது என்பதை பற்றி விரிவாக படித்து தெரிந்துக்கொள்ளுவோம்..!

newமுக்கிய திருமண பொருத்தம்..! Mukkiya Thirumana Porutham..!

 

பல்லி விழும் பலன்கள் 2020
உறுப்பு இடப்புறம் வலப்புறம் 
தலை கலகம் துன்பம் 
வயிறு தானியம் மகிழ்ச்சி 
கண் சுகம் சிறைபயம் 
பிருஷ்டம் சுகம் செல்வம் 
காது ஆயுள் லாபம் 
கணைக்கால் பிரயாணம் சுகம் 
மணிக்கட்டு பீடை கீர்த்தி 
நகம் செலவு நஷ்டம் 
மார்பு தனலாபம் சுகம் 
நெற்றி லட்சுமிகரம் காரியசித்தி 
முதுகு நஷ்டம் கவலை 
உதடு கஷ்டம் வரவு 
முழங்கால் நஷ்டம் பந்தயம் 
தோல் வெற்றி போகம் 
பாதவிரல் ராசபயம் நோய் 
கைவிரல் சன்மானம் சஞ்சலம் 
கபாலம் கதனம்வரவு 
விலை வாழ்வு தாழ்வு 
மூக்கு வியாதி கவலை 
தொடை துக்கம் சஞ்சலம் 
கழுத்து பகை வெற்றி 
பாதம் நோய் துக்கம் 
கை துக்கம் துன்பம் 
கால் மகிழ்ச்சிநோய் 

 

பல சுவாரசியமான செய்திகளுக்கு எங்கள் YOUTUBE" சேனல SUBSCRIBE" பண்ணுங்க: Pothunalam Youtube

newபல்லி சத்தம் பலன்கள்

பல்லி விழுந்தால் நாம் செய்ய வேண்டிய பரிகாரம்:

பல்லி நம் உடற்பகுதியில் விழுந்தால் முதலில் குளிக்க வேண்டும். குளித்த பிறகு கோவிலுக்கோ அல்லது வீட்டு பூஜை அறையிலோ விளக்கேற்றி வைக்க வேண்டும்.

பல்லி விழுந்த தோஷம் நீங்க கோவிலில் உள்ள தெய்வ சிலைகளுக்கு தங்கத்தால் ஆன ஆபரணங்களை சாற்றி வந்தால் தோஷம் நீங்கிவிடும்.

விளக்கெண்ணெயை கொண்டு விளக்கு ஏற்றினால் பல்லி விழுந்த தோஷம் நீங்கும். காஞ்சிபுரத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் தங்கம் மற்றும் வெள்ளியால் ஆன பல்லி சிலை உள்ளது. இந்த பல்லியின் சிலையை தொட்டு வணங்கினால் எதிர்காலங்களில் பிரச்சனைகள் எதுவும் வராமல் நன்மை மட்டும் நிகழும்.

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்