Palli Pariharam in Tamil | பல்லி விழுந்தால் பரிகாரம் என்ன
ஆன்மீக அன்பர்கள் அனைவருக்கும் வணக்கம். பொதுவாக நம் உடலில் பல்லி எங்கு விழுந்தால் என்ன பலன் என்பதை நாம் அனைவருமே அறிந்து இருப்போம். அப்படி பலன்களை தெரிந்து கொண்ட பிறகு என்ன பரிகாரம் செய்ய வேண்டும் என்ற குழப்பம் நம் அனைவருக்கும் இருக்கும். ஆகையால், உங்களுக்கு பயனுள்ள வகையில், இப்பதிவில் பல்லி விழுந்தால் என்ன பரிகாரம் செய்ய வேண்டும் என்பதை விவரித்துள்ளோம்.
பல்லி என்பது நவகிரகங்களில் கேதுவை குறிக்கிறது. கேது என்பது ஸ்வரபானு என்கிற அசுரனின் உடலாகும். பல்லி கத்துவது முதல் அது நம் உடலில் எங்கே விழுகிறது வரை ஒவ்வொன்றிற்கும் ஒரு பலன் இருக்கிறது. அதேபோல், பல்லி விழுந்தால் செய்ய வேண்டிய பரிகாரமும் இருக்கிறது. அதனை பற்றி இப்பதிவில் பின்வருமாறு பார்க்கலாம் வாங்க.
பல்லி விழும் பரிகாரம்:
பல்லி விழுந்ததும் குளித்து முடித்து விட்டு வீட்டில் விளக்கேற்றி வழிபடுங்கள். மேலும், அருகில் உள்ள கோவிலுக்கு சென்று தெய்வங்களை வழிபாடு செய்யுங்கள். எந்த கெட்ட செயலும் நடந்து விட கூடாது என்று வேண்டி கொள்ளுங்கள்.
உங்களால் முடிந்தால் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் உள்ள தங்கம் மற்றும் வெள்ளியால் செய்யப்பட்ட பல்லியின் சிலையை தொட்டு வணங்கலாம். இவ்வாறு செய்தால், பல்லியினால் ஏற்பட்ட தோஷம் நீங்கும் என்பது ஐதீகம்.
பல்லி உடலில் எந்த பகுதியில் விழுந்தாலும் உடனே குளித்து விடுங்கள். தலைகுளித்து விட்டு மூன்று முறை தண்ணீரை வைத்து தலையை சுற்றி விடுங்கள். இந்த பரிகாரத்தை பல்லி தலையில் விழுந்தால் செய்யுங்கள் ( பல்லி தலையில் விழுந்தால் பரிகாரம் என்ன). இதுவே உடலின் மற்ற பகுதிகளில் விழுந்தால் கிழே கொடுக்கப்பட்டுள்ள பரிகாரத்தை செய்யுங்கள்.
நம் உடலில் எந்த இடத்தில் பல்லி விழுகிறதோ அந்த இடத்தில் தண்ணீர் வைத்து நன்றாக துடைத்து விடுங்கள். அதன் பிறகு, அந்த இடத்தில சிறிதளவு பால் எடுத்து அந்த இடத்தில் வைத்து துடைத்து விடுங்கள்.
அடுத்ததாக, கை நிறையை கல் உப்பு எடுத்து, அதனை தலையை மூன்று முறை சுற்றி, கால்தடம் படாத இடத்தில் அல்லது சிங்க்கிள் கொட்டி தண்ணீர் ஊற்றி விடுங்கள்.
பல்லி இத்தனை முறை கத்தினால் இதுதான் அர்த்தமாம்..! உங்களுக்கு தெரியுமா.?
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மீக தகவல்கள் |