நிறைய பாம்பு கனவில் வந்தால் என்ன பலன் – Pambu Kanavil Vanthal
பொதுநலம்.காம் வாசகர்களுக்கு வணக்கம்.. பாம்பு ஒருவருடைய கனவில் என்னென்ன விஷயங்கள் நடக்கும் என்பது குறித்த தகவலை பற்றி தான் நாம் இப்பொழுது பார்க்க போகிறோம். மனிதனாய் பிறந்த அனைவருக்கும் கனவு வருவது என்பது மிகவும் சாதரண விஷயம் தான். அந்த கனவு நல்லதாகவும் இருக்கலாம் அதேபோல் கெட்டதாகவும் இருக்கலாம். நம்மில் பலருக்கு பாம்பு கனவில் வந்திருக்கும். பொதுவாக கனவு வந்தாலே அதற்கு என்ன அர்த்தமாக இருக்கும் என்று பயந்து கொண்டிருப்போம். அதுவே பாம்பை கனவை கண்டால் சொல்லவே வேண்டாம். அதற்கான அர்த்தத்தை கனவில் கண்டால் தான் நிம்மதி அடைவோம்.
ஜோதிடத்தில் யாருக்கு ராகு திசை, ராகு தசா புத்தி நடைபெறுகிறதோ அவர்களின் கனவில் மட்டுமே பாம்பு வரும் என கூறப்படுகிறது. அதுமட்டுமல்ல பாம்பு பாலியல் குறியீடாகவும், ஆண்களுடனும் ஒப்பிடப்படுகிறது. சரி இந்த பதிவில் நிறைய பாம்பு கனவில் கண்டால் என்ன பலன் என்பது குறித்த தகவலை இப்பொழுது நாம் பார்க்கலாம் வாங்க.
நிறைய பாம்பு கனவில் வந்தால்:
பொதுவாக பாம்புகளை கனவில் காண்பது ஒரு வகையில் நல்ல விஷயம் தான், கற்பனை திறன் அதிகம் உள்ளவர்களே பாம்புகளை அடிக்கடி கனவில் காண்பார்கள். அந்த வகையில் உங்கள் கனவில் நிறைய பாம்புகள் தங்களை சூழ்ந்திருப்பது போல் கனவு கண்டால் நீங்கள் விரும்பத்தகாதவர்கள் உங்களை சூழ்ந்து இருக்கிறார்கள் என்று அர்த்தம். அதேபோல் எதிர்மறை ஆற்றல்கள் உங்களை சூழ்ந்து உள்ளது என்றும் அர்த்தம் ஆகும். இதன் காரணமாகவும் உங்கள் கனவில் நிறைய பாம்புகள் வரலாம்.
பாம்பு கடிப்பது போல் கனவு கண்டால் தனலாபம் உண்டாகும்.
இரண்டு பாம்பு பின்னிக்கொள்வது போல் அல்லது இரண்டு பாம்புகள் சேர்ந்து ஊர்ந்து செல்வது போல் கனவு கண்டால் திருமணம் வயதில் உள்ளவர்களுக்கு நல்ல இடத்தில் வரன் அமையும். ஏற்கனவர் திருமணமான பந்தத்திற்கு நல்ல கணவன் மனைவியாக இருப்பீர்கள் என்று கூட அர்த்தம். மேலும் நல்ல பண வரவு கிடைக்கும்.
- பாம்பு துரத்துவது போல கனவு கண்டால் பல பிரச்சனைகளில் இருந்து நீங்கள் விடுபட போகிறீர்கள் என்று அர்த்தம்.
- பாம்பு தீண்டுவது போல கனவு கண்டால் வெளிநாடு செல்வதற்கான யோகம் கிடைக்கும்.
- இரட்டை பாம்பை கனவில் கண்டால் ஆபத்துகள் நீங்கி நன்மை உண்டாகும்.
மேலும் பாம்பு பற்றிய கனவு பலன்களை பார்க்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👇
பாம்பு குறுக்கே வந்தால் என்ன பலன்?
வெள்ளிக்கிழமை பாம்பு பார்த்தால்
பாம்பு பற்றிய சுவாரசியமான உண்மைகள்..!
வீட்டிற்குள் பாம்பு வருவது போல் கனவு கண்டால் என்ன பலன் தெரியுமா.?
கனவில் பாம்பு வந்தால் என்ன பலன்?
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |