Pana Kastam Theera in Tamil
இன்றைய ஆன்மிகம் பதிவில் பணக்கஷ்டம் நீங்க என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி தான் பார்க்க போகிறோம். இன்றைய நிலையில் அனைவருக்குமே பணக்கஷ்டம் இருக்கும். பணக்கஷ்டம் இல்லாதவர்கள் என்று யாரும் இருக்க முடியாது. எவ்வளவு தான் கஷ்டப்பட்டு சம்பாதித்தாலும் அந்த பணம் வீட்டில் தங்கவில்லை என்று பலரும் புலம்புகிறார்கள். இன்றைய ஆன்மீகம் பதிவில் வீட்டில் பணம் தங்குவதற்கான வழிகளை பற்றி தான் பார்க்க போகிறோம். எவ்வளவு தான் கஷ்டப்பட்டு சம்பாதித்தாலும் பணம் வீட்டில் தங்கவே இல்லை என்பது அனைவருக்கும் இருக்க கூடிய ஒரு பிரச்சனை தான். வீட்டில் பணம் தங்காததற்கு பல காரணங்கள் இருக்கின்றன. நாம் நம்மை அறியாமல் செய்யும் தவறுகளால் கூட வீட்டில் பணவரவு குறைய தொடங்கும். அதனால் நீங்கள் இந்த பதிவில் உங்கள் வீட்டில் பணம் தங்க என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி தெளிவாக தெரிந்துகொள்ளலாம். வாங்க நண்பர்களே இந்த பதிவை முழுமையாக படித்து பணம் தங்க என்ன பரிகாரம் என்பதை தெரிந்து கொள்வோம்.
வீட்டில் பணம் தங்க என்ன செய்ய வேண்டும்..?
என்னதான் கஷ்டப்பட்டு பணம் சம்பாதித்தாலும் அது கையில் தங்கவில்லை என்று புலம்புபவர்களே இங்கு அதிகமாக இருக்கிறார்கள். உழைத்து வாங்கும் சம்பளம் கடன் கொடுக்கவே சரியாக இருக்கிறது என்று பலரும் புலம்பி வருகிறார்கள்.
சம்பாதிக்கும் பணம் வீட்டில் தங்க வேண்டும், பணவரவு அதிகரிக்க வேண்டும் என்று பலரும் பல பரிகாரங்களை செய்து வருகிறார்கள். பல பரிகாரங்கள் செய்தும் பணவரவு அதிகரிக்கவில்லை என்று சொல்பவர்கள் ஒருமுறை இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள்.
இந்த பரிகாரம் செய்வதால் வீட்டில் இருக்கும் பணக்கஷ்டம் நீங்கி பணவரவு அதிகரிக்கும். செல்வ வளம் உண்டாகும். எவ்வளவு கடன் இருந்தாலும் அது சில நாட்களில் காணாமல் போய்விடும். அதனால் இந்த பரிகாரத்தை ஒரு முறை செய்து பாருங்கள்.
பணக்கஷ்டம் நீங்க பரிகாரம்:
இப்படி வற்றாத அளவிற்கு பணம் நம்மிடம் சேர்வதற்காக நாம் செய்யும் இந்த தாந்திரீக வேலையை ஒரு பரிகாரம் என்று கூட சொல்லலாம். அப்படி இந்த தாந்திரீக கூட நாம் செய்ய வேண்டும் என்றால் நமக்கு வெள்ளி அல்லது கண்ணாடியால் செய்யப்பட்ட ஒரு பாத்திரம் வேண்டும். இரண்டாவது அந்த வெள்ளி பாத்திரம் நிரம்பும் அளவிற்கு தேவையான அளவு அரிசி எடுத்துக் கொள்ளுங்கள். அதனுடன் உங்கள் வீட்டில் இருப்பவர்களின் எண்ணிக்கையை கணக்கு வைத்து அந்த எண்ணிக்கைக்கு ஏற்ற போல் ஒரு ரூபாய் நாணயங்களை எடுத்துக் கொள்ளுங்கள்.
இந்த பரிகாரத்தை செய்ய முதலில் நாம் வைத்திருக்கும் கண்ணாடியால் செய்யப்பட்ட பாத்திரத்தை எடுத்துக் கொள்ளுங்கள். பின்பு அந்த பாத்திரம் முழுவதும் அரிசியால் நிரப்பிக் அந்த வீட்டின் குடும்ப தலைவர் தன் கையில் ஒரு ஒரு ரூபாய் நாணயத்தை வைத்துக் கொண்டு. உங்கள் குலதெய்வம் அல்லது மகாலட்சுமி தயாரை மணதார நினைத்து உங்கள் வீட்டில் பணம் சேர வேண்டும். அப்படி உங்கள் வீட்டில் சேரும் பணம் உங்கள் கையில் நிலையாக தங்க வேண்டும் என மனம் உருகி வேண்டி கொண்டு அந்த ஒரு ரூபாய் நாணயத்தை அரிசிக்குள் புதைத்து விடுங்கள். இப்படியாக வீட்டில் உள்ள அனைவரும் செய்ய வேண்டும்.
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |