எப்பேர்ப்பட்ட பணக்கஷ்டமும் தீர்ந்து போகும் செய்வாய்கிழமையில் இதை மட்டும் செய்தால் போதும் ..!

Advertisement

Pana Kastam Neenga Enna Seiya Vendum

இன்றைய காலகட்டத்தில் அனைத்து விஷயங்களுக்கும் பணம் என்பது மிகவும் அதிகமாக தேவைப்படுகின்றது. ஒரு சிலர் கூறுவதை நாம் கேட்டிருப்போம் எங்கள் வீட்டில் அனைவருமே வேலைக்கு செல்கின்றோம். ஆனால் அவ்வளவாக பணத்தை சேமிக்கவே முடிவதில்லை. ஏதாவது ஒரு வகையில் பணம் செலவாகிவிடுகின்றது என்று சொல்வார்கள். இப்படி உங்கள் வீட்டிலேயும் பணவரவு குறைவாகவும் பணத்தேவை அதிகமாகவும் அதாவது பணக்கஷ்டம் அதிகமாகவும் உள்ளது என்றால் இந்த பதிவு உங்களுக்கு தான். ஆம் நண்பர்களே இன்றைய பதிவில் உங்கள் வீட்டில் உள்ள அனைத்து பணக்கஷ்டமும் தீர்ந்து பணவரவு அதிகமாக உதவும் ஒரு பரிகாரத்தை பற்றி தான் விரிவாக காண இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து இதில் கூறியுள்ள பரிகாரத்தை செய்து உங்கள் வீட்டின் பணவரவை அதிகமாக்கி கொள்ளுங்கள்.

அக்டோபர் 28 ஆம் தேதி ஏற்படும் கஜகேசரி யோகத்தால் இந்த ராசிக்காரர்களுக்கு இனி பொன்னான நேரம்தான்

வீட்டில் பணம் தங்க என்ன செய்ய வேண்டும்:

கட்டு கட்டாக பணம் சேர என்ன செய்ய வேண்டும்

பொதுவாக இன்றைய சூழலில் பணம் தான் அனைத்திற்கும் முக்கியமான மூலதனமாக உள்ளது அப்படிப்பட்ட பணத்தை நாம் எவ்வளவு கஷ்ட்டப்பட்டு சம்பாதித்தாலும் நம்மிடம் சரியாக தங்கவில்லையே என்று கவலைபடுபவர்களுக்கு உதவும் ஒரு பரிகாரம் பற்றி விரிவாக இங்கு காணலாம் வாங்க..

தேவையான பொருட்கள்:

  1. எலுமிச்சை பழம் – 1
  2. அகல் விளக்கு – 2
  3. பஞ்சு திரி – 2
  4. நல்லெண்ணெய் – தேவையான அளவு

துலாமில் பெயர்ச்சியாகும் புதன் இனிமேல் இந்த 3 ராசிகளுக்கு நல்ல காலம்தான்

பரிகாரம் செய்யும் முறை:

முதலில் ஒரு எலுமிச்சை பழத்தை எடுத்து அதனை இரண்டாக நறுக்கி அதில் ஒரு பாதியில் மஞ்சள் மற்றொரு பாதியில் குங்குமம் தடவி வைத்து கொள்ளுங்கள்.

பின்னர் அதனை உங்கள் வீட்டின் வாசலின் வலது புறம் மஞ்சள் தடவிய பழத்தையும் இடது புறம் குங்குமம் தடவிய பழத்தையும் வைத்து கொள்ளுங்கள்.

பின்னர் இரண்டு அகல் விளக்கினை எடுத்து அவற்றுக்கு மஞ்சள் குங்குமம் பொட்டு வைத்து பஞ்சு திரி போட்டு நல்லெண்ணெய் ஊற்றி உங்கள் வீட்டின் வாசலின் இரண்டு புறங்களிலும் ஏற்றி கொள்ளுங்கள்.

பின்னர் உங்கள் வீட்டின் பூஜை அறையிலும் விளக்கு ஏற்றி துர்க்கை மற்றும் மகாலக்ஷ்மியை நினைத்து வழிபாடு செய்யுங்கள்.

பரிகாரம் செய்யும் நாள் மற்றும் நேரம்:

இதனை தொடர்ந்து ஒன்பது வாரம் செவ்வாய்க்கிழமை தோறும் இராகு காலத்தில் செய்து வருவதன் மூலம் உங்கள் வீட்டில் உள்ள அனைத்து பணக்கஷ்டமும் தீர்ந்து போவதை நீங்களே காணலாம்.

கடன் தீர்ந்து வீட்டின் பணவரவு அதிகரிக்க 1 ரூபாய் நாணயம் மட்டும் போதும்

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்
Advertisement