தலைக்கு அடியில் இதை வைத்து படுத்தால் போதும் பணக்கஷ்டம் பறந்து போய்விடும்..!

Advertisement

Pana Kastam Neenga Vali

இன்றைய ஆன்மிகம் பதிவில் எவ்வளவு பணக்கஷ்டம் இருந்தாலும் அதை இல்லாமல் செய்வதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி தான் பார்க்க போகிறோம். பணக்கஷ்டம் அனைவருக்குமே இருக்கக்கூடிய பிரச்சனை தான். அனைவருமே மருத்துவ செலவு, படிப்பு செலவு மற்றும் கல்யாண செலவு என்று ஏதாவதொரு விஷயத்திற்காக கடன் வாங்குகிறார்கள். நாளடைவில் வாங்கிய கடனை அடைக்க முடியாமல் புலம்புகிறார்கள். இந்த பணக்கஷ்டத்தை போக்க வேண்டும் என்பதற்காக பல பரிகாரங்களை செய்து வருகிறார்கள். பரிகாரங்கள் ஏதும் பலனளிக்கவில்லை என்று புலம்புபவர்கள் இந்த பதிவை படித்து பயன்பெறுங்கள்..!

கடன் பிரச்சனை காணாமல் போவதற்கு 5 மிளகு மட்டும் போதும்..!

பணக்கஷ்டம் நீங்க என்ன செய்ய வேண்டும்: 

பணக்கஷ்டம் நீங்க என்ன செய்ய வேண்டும்

பணக்கஷ்டம் இருக்கிறது, கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணம் கையில் தங்கவே இல்லை என்று சொல்லி புலம்புபவர்கள் இதுபோல செய்து வந்தால் உங்கள் வீட்டில் இருக்கும் பணக்கஷ்டம் மற்றும் கடன் தொல்லை நீங்கி பணவரவு அதிகரிக்க தொடங்கும். 

அதற்கு முதலில் நீங்கள் ஒரு சிவப்பு நிற துணியை எடுத்து கொள்ளுங்கள். அந்த துணியில் ஒரு கைப்பிடி அளவு கல் உப்பை வைத்து கொள்ள வேண்டும். பின் அந்த துணியை ஒரு நூலால் கட்டி கொள்ள வேண்டும்.

 பிறகு இந்த மூட்டையை நீங்கள் படிக்கும் முன் உங்கள் தலையணைக்கு கீழே அல்லது தலையணை உறைக்கு உள்ளே வைத்து அதன் மேல் படுக்க வேண்டும். இதுபோல 7 நாட்கள் அந்த உப்பை தலையணைக்கு அடியில் வைத்து படுத்து வர வேண்டும்.  7 நாட்கள் கழித்து இந்த உப்பை எடுத்து உங்கள் பகுதியில் இருக்கும் ஏதாவது ஆறு, குளம், ஏரி போன்ற நீர்நிலைகள் இருந்தால் அதில் தூக்கி போட வேண்டும். அல்லது இந்த உப்பை தண்ணீரில் கரைத்து ஊற்ற வேண்டும்.  

இதுபோல செய்து வந்தால் உங்கள் வீட்டில் இருக்கும் பணக்கஷ்டம், கண்திருஷ்டி, கடன் தொல்லை இவை அனைத்தும் உப்பு கரைவதுபோல கரைந்துவிடும். 

இந்த 3 இடத்தில் வசம்பை வைத்தால் உங்கள் வீட்டில் பணம் கட்டுக்கட்டாக சேரும்..!

 

எலுமிச்சை பழம்..

அடுத்தது எலுமிச்சை பழத்தை எடுத்து கொள்ளுங்கள். எலுமிச்சை பழம் காயாக இருக்க கூடாது. அதை மஞ்சள் அல்லது சிவப்பு நிற துணியில் வைத்து முடிந்து கொள்ளுங்கள். இந்த துணியை தூங்க செல்லும் முன் உங்கள் தலையணைக்கு கீழே வைத்து தூங்க வேண்டும்.

இதுபோல நீங்கள் எலுமிச்சை பழத்தை 3 நாட்கள் தலையணைக்கு அடியில் வைத்து தூங்க வேண்டும். 3 நாட்கள் கழித்து இந்த எலுமிச்சை பழத்தை செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் உங்கள் பகுதிகளில் இருக்கும் அம்மன் கோவிலில் இருக்கும் சூலத்தில் வைக்க வேண்டும். 

இதுபோல செய்து வந்தால் உங்கள் வீட்டில் இருக்கும் கஷ்டங்கள் அனைத்தும் நீங்கி நன்மை உண்டாகும். கடன் தொல்லை நீங்கி பணவரவு அதிகரிக்க தொடங்கும்.

ஏழைகளை பணக்காரர்களாக மாற்றும் வசம்பு பரிகாரம்
உங்கள் வீட்டில் செல்வம் பெறுக வெள்ளிக்கிழமை கல் உப்பு வாங்கினால் போதும்..!

 

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 
Advertisement