Pana Kastam Theera in Tamil
இன்றைய ஆன்மிகம் பதிவில் பணக்கஷ்டம் நீங்க என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி தான் பார்க்க போகிறோம். இன்றைய நிலையில் அனைவருக்குமே பணக்கஷ்டம் இருக்கும். பணக்கஷ்டம் இல்லாதவர்கள் என்று யாரும் இருக்க முடியாது. எவ்வளவு தான் கஷ்டப்பட்டு சம்பாதித்தாலும் அந்த பணம் வீட்டில் தங்கவில்லை என்று பலரும் புலம்புகிறார்கள். அப்படி புலம்புபவர்கள் இந்த பதிவை படித்து பயன்பெறுங்கள்..!
வீட்டில் பணம் தங்க வேண்டுமா..? அப்போ இந்த தவறுகளை செய்யாதீர்கள்..! |
பணக்கஷ்டம் நீங்க பரிகாரம்:
என்னதான் கஷ்டப்பட்டு பணம் சம்பாதித்தாலும் அது கையில் தங்கவில்லை என்று புலம்புபவர்களே இங்கு அதிகமாக இருக்கிறார்கள். உழைத்து வாங்கும் சம்பளம் கடன் கொடுக்கவே சரியாக இருக்கிறது என்று பலரும் புலம்பி வருகிறார்கள்.
சம்பாதிக்கும் பணம் வீட்டில் தங்க வேண்டும், பணவரவு அதிகரிக்க வேண்டும் என்று பலரும் பல பரிகாரங்களை செய்து வருகிறார்கள். பல பரிகாரங்கள் செய்தும் பணவரவு அதிகரிக்கவில்லை என்று சொல்பவர்கள் ஒருமுறை இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள்.
இந்த பரிகாரம் செய்வதால் வீட்டில் இருக்கும் பணக்கஷ்டம் நீங்கி பணவரவு அதிகரிக்கும். செல்வ வளம் உண்டாகும். எவ்வளவு கடன் இருந்தாலும் அது சில நாட்களில் காணாமல் போய்விடும். அதனால் இந்த பரிகாரத்தை ஒரு முறை செய்து பாருங்கள்.
9 சனிக்கிழமை இந்த பரிகாரத்தை செய்தால் கடன் பிரச்சனை காணாமல் போய்விடும்..! |
பரிகாரம்:
ஒரு கிண்ணத்தில் சிறிதளவு மஞ்சளை தண்ணீர் சேர்த்து குழைத்து வைத்து கொள்ளுங்கள். பின் ஒரு சதுர வடிவிலான வெள்ளை துணியை எடுத்து கொள்ளுங்கள். அந்த துணியை நாம் குழைத்து வைத்துள்ள மஞ்சளில் நனைத்து எடுத்து கொள்ள வேண்டும்.
பின் அந்த துணியில் பச்சை கற்பூரத்தை சிறிய துண்டுகளாக வைத்து கொள்ளுங்கள். பிறகு அதனுடன் 3 கிராம்பு, 3 ஏலக்காய் வைத்து கொள்ள வேண்டும். அடுத்து அந்த துணியை ஒரு மஞ்சள் நிற நூலால் கட்டிக் கொள்ள வேண்டும்.
இப்போது அந்த துணியை நீங்கள் உங்கள் வீட்டில் எங்கெல்லாம் பணம் வைப்பீர்களோ அந்த இடத்தில் எல்லாம் வைக்க வேண்டும். அதாவது, மணிபர்ஸ், கல்லாப்பெட்டி, பீரோ, உண்டியல், நகை பெட்டி மற்றும் அஞ்சறை பெட்டி போன்ற இடங்களில் இந்த துணியை நீங்கள் வைக்கலாம். இதனால் உங்கள் வீட்டில் இருக்கும் பணக்கஷ்டம் நீங்கி பணவரவு அதிகரிக்கும்.
இதனை மட்டும் செய்தால் போதும் வீட்டில் உள்ள கடன் பிரச்சனை தீர்ந்துவிடும்..! |
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |