வீட்டிற்குள் வளர்ப்பதால் பணக்கஷ்டங்கள் தீரும்
மரம் செடி கொடிகளை வளர்ப்பது வீட்டிற்கு மட்டும் அல்லது சுற்றுசூழலுக்கு நல்லது. மரம் வளர்ப்போம் மழை பெறுவோம் என்பார்கள். மரங்கள் மக்கள் உயிர்வாழ முக்கிய காரணியாக இருப்பதில் சந்தேகமில்லை, ஆனால் சில மரங்கள் அவை இருக்கவேண்டிய இடங்களை பொருத்து அதன் முக்கியத்துவம் மாறுபடுகிறது. நாம் வீட்டில் அழகு செடிகள் தொடங்கி பழங்களை தரக்கூடிய விதவிதமான செடிகளை நாம் வளர்ப்போம். அவற்றால் நமக்கு சுற்றுசூழல் சார்ந்த பிரச்சனைகள் இருக்குமா என்றால், கண்டிப்பாக இருக்காது ஆனால், ஒரு சில மரங்களை வீட்டிற்கு அருகில் வளர்க்க கூடாது என்பது ஐதீகம். சில செடிகளை வீட்டிற்குள்ளும் வளர்க்கலாம் அப்படி வளர்க்க கூடிய செடிகளால் நமக்கு ஏற்பட கூடிய நம்மைகள் என்ன? அவற்றை வாஸ்த்து படி எப்படி வளர்ப்பது என்று இந்த பதிவில் பார்க்கலாம் வாருங்கள்.
வீட்டில் வளர்க்க வேண்டிய செடிகள்:
ஷாமி செடி:
ஷாமி செடி நன்மை பயக்கும் வீட்டிற்குள் வளர்க்கக்கூடிய தாவரமாகும். நாம் அனைவரும் நமது வீடு எப்போதும் பசுமையாகவும் அழைக்கவும் இருக்க எண்ணுவோம். அதற்கு ஏற்ற செடி ஷாமி செடி.
ஷாமி செடி நம் வீட்டிற்கு நேர்மறை ஆற்றலையும் அழகையும் சேர்க்கிறது.
இந்த செடிகள் காற்றை சுத்தப்படுத்துவது மட்டுமல்லாமல், அற்புதமான நன்மைகளையும் தருகின்றன. சில தாவரங்கள் நம் வீட்டிற்கு நல்ல அதிர்ஷ்டத்தையும் செழிப்பையும் ஈர்க்கும். அப்படிப்பட்ட ஒரு செடிதான் ஷாமி செடி. ஷமி செடியை வழிபடுவது மிகவும் புண்ணியமாக கருதப்படுகிறது.
ஸ்பைடர் செடி:
தற்போது மக்கள் பெரும்பாலானோர் தங்கள் வீடு பணியிடத்தில் அழகுக்காக ஸ்பைடர் செடிகளை வளர்ப்பார்கள். உண்மையில் இவை, நம் கண்களுக்கும், மனதிற்கும் ஒருவித நிறைவை தருகின்றனர். அதோடு, அவை வீட்டில் இருக்கும் எதிர்மறை ஆற்றலையும் விரட்டுகிறது.
ஸ்பைடர் செடி காற்றில் உள்ள கார்பன் டை ஆக்சைடை உறிஞ்சி அதிகஅளவில் ஆக்ஸிஜனை வெளியிடுகிறது. இதனால், நமக்கு தூய்மையான ஆக்ஸிஜனுடன் புத்துணர்ச்சி கிடைக்கிறது.
ஸ்பைடர் செடி எதிர்மறையான எண்ணங்களை நீக்குவதுடன் மன அழுத்தத்தை குறைக்கக்கூடியது.
வாஸ்த்து படி ஸ்பைடர் செடி இருக்கவேண்டிய திசை:
வாஸ்து சாஸ்திரத்தின்படி, வடக்கு, வடகிழக்கு அல்லது வடமேற்கு திசையில் ஸ்பைடர் செடி வளர்ப்பது நல்லது. இந்த செடியால் நேர்மறையான ஆற்றல் வெளிப்பட்டு நிதிநிலை மேம்படும் என்பது நம்பிக்கை.
ஜேட் செடி:
ஜேட் செடி, செல்வச் செடி அல்லது பணச் செடி என்று அழைக்கப்படுகிறது.
இந்த செடியை வீட்டின் தென்கிழக்கு முலையில் வைப்பது அதிஷ்டம் ஆகும்.
ஜேட் செடி செல்வத்தை வழங்கும் செடியாக இருக்கும்.
ஜேட் செடி கிழக்கு முலைகளிலும் வைக்கலாம், இதனை காய்ந்துவிடாமல் பாதுகாக்க வேண்டும். காய்ந்தால் உடனே வீட்டில் இருந்து அகற்றிவிட வேண்டும்.
மணி பிளான்ட்:
தென்கிழக்கு என்பது விநாயகருக்கு உரிய திசையாகவும், சுக்கிரனின் ஆதிக்கம் நிறைந்த திசை என்பதாலும் அங்கு மணி பிளான்ட்டை வைப்பது நல்லது.
சிறப்பானது என்றும்? ஆனால், வடக்கு திசையில் மணி பிளான்ட் செடியை வைத்தால் கஷ்டங்களை அளிக்கும் என்று நம்பப்படுகிறது.
இந்த செடியை வாடவிட கூடாது. செடியின் இலைகள் காய ஆரம்பித்தல் உடல்நலகுறைவு ஏற்படும்.
அதைபோல் மணிபிளாண்டை யாருக்கும் பரிசாக வழங்கக்கூடாது.
வீட்டில் இருக்க கூடாத தாவரங்கள் என்ன என்ன தெரியுமா..?
அபராஜித் செடி:
அபராஜித் செடியை வீட்டில் வளர்த்தால் நன்மைகள் அதிகரிக்கும். இந்த செடி வீட்டில் உள்ள எதிர்மறையான எண்ணங்களை விரட்டி வீட்டில் எப்போதும் மகிழ்ச்சியையும் செழிப்பையும் வழங்கும். இந்த செடிகளை வீடுகளில் செவ்வாய் மற்றும் வியாழன் கிழமைகளில் நட வேண்டும்.
இந்த செடியை உங்கள் வீட்டின் நிலைக்கதவில் வலது பக்கத்தில் வைத்தல் செல்வம் அதிகரிக்கும்.
வீட்டில் இருக்க கூடாத பொருட்கள் மீறி வைத்திருந்தால் பணம் கஷ்டம் தான்.
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |