இந்த 5 பொருட்கள் வீட்டில் இருந்தால் பண கஷ்டம் ஏற்படும்

Advertisement

பணக்கஷ்டம் தீர என்ன செய்ய வேண்டும்

வீட்டில் கணவன், மனைவி இரண்டு பேருமே வேலைக்கு செல்கிறார்கள். ஆனால் வாங்கிய சம்பளம் வீட்டில் தங்க மாட்டிகிறது என்று கவலைப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகம். பண கஷ்டம் சரியாகுவதற்காக ஆன்மிக ரீதியாக பரிகாரம் செய்வார்கள். சிலருக்கு பலன் அளித்திருக்கும், சிலருக்கு பலன் அளித்திருக்காது. இந்த பதிவில் பரிகாரம் ஏதும் செய்யப்போவதில்லை. வீட்டில் உள்ள சில பொருட்களால் பண கஷ்டம் ஏற்படும். அது என்னென்ன பொருட்கள் என்று இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்வோம்.

பணக்கஷ்டம்  ஏற்படாமல் இருக்க வீட்டில் இந்த பொருட்கள் இருக்க கூடாது:

pana kastam neenga enna vali

வீட்டில் உள்ள சில பொருட்களால் நேர்மறை ஆற்றலும் ஏற்படும், எதிர்மறை  ஆற்றலும் ஏற்படும். எதிர்மறை ஆற்றல் நிறைந்த பொருட்கள் இருந்தால் பண கஷ்டம் ஏற்படும். மேலும் பணவரவு அதிகரிக்காமலும் இருக்கும். அவை என்னென்ன பொருட்கள் என்று இந்த பதிவில் தெரிந்து கொண்டு வீட்டிலிருந்து அகற்றி விடவும்.

உடைந்த கண்ணாடி வீட்டில் வைக்கலாமா:

உடைந்த கண்ணாடி வீட்டில் வைக்கலாமா

வீட்டில் உள்ள கண்ணாடி எங்கு வைத்திருந்தாலும் அந்த கண்ணாடியானது உடைந்த நிலையில் இருந்தால் அதை வைத்திருக்க கூடாது. கண்ணாடியில் சிறு கீறல் இருந்தாலும் அதை வைத்திருக்க கூடாது. வீட்டில் உள்ள கண்ணாடி மட்டுமில்லை வண்டி கண்ணாடி, கார் கண்ணாடிகளும் உடைந்த நிலையிலோ அல்லது கீறல் இருந்தாலும் அகற்றி விடவும்.

இதையும் படியுங்கள் ⇒ வீட்டில் இந்த செடிகளை வளர்த்தால் பணவரவும், அதிர்ஷ்டமும் அதிகரிக்குமாம்..!

காலணி:

உடைந்த கண்ணாடி வீட்டில் வைக்கலாமா

வீட்டில் பயன்படுத்தாத காலணிகள் இருந்தால் வைக்க கூடாது. மேலும் கிழிந்த நிலையில் உள்ள காலணி, அல்லது பழைய காலணி போன்றவை வீட்டில் வைத்திருக்க கூடாது. இது போல் வைத்திருந்தால் வீட்டில் பணக்கஷ்டம் ஏற்படும். 

கடிகாரம்:

பணக்கஷ்டம் தீர என்ன செய்ய வேண்டும்

ஓடாத கடிகாரம் இருந்தால் சுவற்றில் இருந்து கழட்டி விடவும். இல்லையென்றால் கடிகாரத்தை சரி செய்து விடவும். நீங்கள் கைகளில் கட்டியிருக்கும் கடிகாரமும் ஓடாமல் இருக்க கூடாது.

நாற்காலி:

பணக்கஷ்டம் தீர என்ன செய்ய வேண்டும்

 

உடைந்து போன நாற்காலி, டேபிள் போன்ற எந்த பொருட்களும் வைத்திருக்க கூடாது. உடைந்த பொருட்களை வைத்திருந்தால் வீட்டில் உள்ளவர்களுக்கு மருத்துவ செலவு ஏற்படும். 

அது போல் கட்டிலுக்கு அடியில் பயன்படுத்திய பொருட்களை வைத்திருக்கலாம். ஆனால் பயன்படுத்தாத பொருட்களை கட்டிலுக்கு அடியில் வைக்க கூடாது.

துடைப்பம்:

பணக்கஷ்டம் தீர என்ன செய்ய வேண்டும்

தேய்ந்து போன துடைப்பத்தை வீட்டில் பயன்படுத்தவும் கூடாது, வைத்திருக்கவும் கூடாது. புதிய துடைப்பம் வாங்கி பயன்படுத்தாமல் இருக்க கூடாது. துடைப்பம் மற்றும் ஒட்டடை குச்சி போன்றவை அடுத்தவர்களுக்கு கடனாக கொடுக்க கூடாது.

மேல் கூறப்பட்டுள்ள 5 பொருட்கள் வீட்டில் இருந்தால் அகற்றி விடவும்.

இதையும் படியுங்கள்பீரோவிற்கு அடியில் இந்த பொருளை வைத்தால் எந்த கஷ்ட நஷ்டமும் இருக்காது, பணவரவு அதிகரித்துக்கொண்டே போகும்..!

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்

 

Advertisement