ஒரு கைப்பிடி கடுகு போதுங்க உங்களின் கடுமையான பணத்தட்டுப்பாடு குறைய …

Advertisement

கடன் பிரச்சினை தீர்க்கும் பரிகாரம் 

தினமும் ஒவ்வொரு வகையான கஷ்டங்கள் அனைவருக்கும் வந்து கொண்டு தான் இருக்கிறது. அதில் நிதிநிலை சார்ந்த கஷ்டங்கள் அனைவரையும் வாட்டி வதைக்கிறது. அதிகம் கடன் பிரச்சனை உள்ளவர்கள் எப்படி இந்த கடன் பிரச்சனையை சரி செய்வது என்று, ஒவ்வொரு நாளும் யோசித்து சரியாக சாப்பிடாமலும், சரியாக தூங்காமலும் கவலைப்படுபவர்கள் தான் அதிகம். இந்த பிரச்சனை தீர ஏதாவது ஒரு நல்ல வழி பிறக்காத என்று நினைப்பவர்களும் உண்டு. அவர்களுக்கு உதவிடும் வகையில் இன்று கடுமையான பணத்தட்டுப்பாடு குறைய என்ன பரிகாரங்கள் செய்யவேண்டும் என்று இந்த பதிவில் பார்க்கலாம் வாங்க.

பணத்தட்டுப்பாடு குறைய இது போதும்:

அஞ்சறை பெட்டியில் மறைத்து வைக்க வேண்டிய பொருள்

மாதம் தோறும் சம்பளம் வாங்குபவர்கள் அவர்களின் வருமானத்திற்கு ஏற்றவாறு ஒரு பட்ஜெட்டையும் போட்டுத்தான் வாழ்க்கையை நடத்துவார்கள். அனால் அந்த பட்ஜெட்டையும் தாண்டி அவர்களின் செலவுகள் அதிகரிக்கும். இந்த செலவுகள் நம்மை கடன் வாங்க வைக்கும். கடன் நமது நிம்மதியை குறைக்கும். அதனால் உடல் ஆரோக்கியம் குறையும். இப்படி பிரச்சனைகள் அதிகரித்துக்கொண்டே இருக்கும் அதற்கு தீர்வாகத்தான் கடுமையான பண கஷ்டம் வந்தால் என்ன செய்வது. பண வரவை அதிகரிக்க கடுகு பரிகாரம்.

பரிகாரத்திற்கு தேவையான பொருட்கள்:

இந்த பரிகாரத்திற்கு நமக்கு தேவைப்படும் பொருள் கடுகு. இந்த பரிகாரத்தை செவ்வாய் கிழமை செய்வதால் பலன்கள் அதிகம்.

Veetil Panam sera eliya parikaram Tips in Tamil

பரிகாரம் செய்யும் முறை:

செவ்வாய் கிழமை அதிகாலையில் எழுந்து சுத்தமாக குளித்துவிட்டு, பூஜை அறையில் விளக்கு ஏறுங்கள். பிறகு ஒரு முடிபோட்ட சிறு டப்பாவை எடுத்துக்கொள்ளுங்கள் அதில் ஒரு கைப்பிடி அளவு கடுகை போட்டுவிட்டு, ஒரு காகிதத்தில் உங்களுக்கு உள்ள கடன் பிரச்சனைகள் தீரவேண்டும் என்று எழுதுங்கள்.  எழுதிய அந்த காகிதத்தை அந்த கடுகு டப்பாவில் போடுங்கள். மீண்டும் ஒரு கைப்பிடி அளவு கடுகை அந்த காகிதம் மறையும் அளவுக்கு போடுங்கள். இப்போது அந்த டப்பாவை முடி கடவுளிடம் உங்களின் தேவைகளை தீர வேண்டுங்கள். அந்த கடுகு டப்பாவை உங்கள் சமையல் அறையில் எந்த தொந்தரவும் இல்லாத வகையில் வைக்கவும். அதில் உள்ள கடுகை நீங்கள் சமையலுக்கு பயன்படுத்த கூடாது.

இந்த பரிகாரத்தை ஆண், பெண் இருபாலரும் செய்யலாம். செவ்வாயில் வரும் கோரையில் செய்வதால் அதிக பலன்கள் கிடைக்கும்.

இந்த பரிகாரத்தை செய்த மூன்றாவது வாரம் உங்கள் குலதெய்வ கோவிலுக்கு சென்று வந்தால் பண பிரச்சனைகள் காணாமல் போய்விடும்.

தீராத கடனும் காணாமல் போகும். ஆன்மிகம் கூறும் ரகசியம்….

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்

 

Advertisement