அள்ள அள்ள குறையாத பணவரவு உண்டாகும், பண தட்டுப்பாடு என்ற பேச்சுக்கே இடமிருக்காது!!

Advertisement

பணம் வரவு அதிகமாக கடுகு

வீட்டில் வெள்ளி மற்றும் செவ்வாய் ஆகிய இரண்டு தினங்களும் வீட்டை சுத்தம் செய்து வழிபாடு செய்து வந்தால் வீட்டில் செல்வ செழிப்பு உண்டாகும். மேலும் வீட்டில் நிம்மதி மற்றும் ஒற்றுமை உண்டாகும் என்று சொல்லப்படுகிறது. இதன் காரணமாகவே பெரும்பாலான வீடுகளில் வெள்ளி, மற்றும் செவ்வாய் ஆகிய இரு தினங்களிலும் வீட்டை சுத்தம் செய்து கடவுளை வழிபடுவார்கள். இந்த வெள்ளி செவ்வாய் ஆகிய இரு தினங்களிலும் நம் சமையலறையில் உள்ள ஒரு டப்பாவில் ஐந்து ரூபாய் நாணயத்தை யாருக்கும் தெரியாமல் ஒளித்து வைத்தோம் என்றால் நமது வீட்டில் அள்ள அள்ள குறையாத பணவரவு உண்டாகும், பண தட்டுப்பாடு என்ற பேச்சுக்கே இடமிருக்காது என்று சொல்லப்படுகிறது, சரி வாங்க அது என்ன பொருள் என்று இப்பொழுது நாம் பார்க்கலாம்.

பணம் வரவு அதிகமாக கடுகு – pana varavu athikarikka kadugu:கடுகு

கடுகு என்பது பெரும்பாலும் சமையலுக்கு அதிகளவு பயன்படுத்தப்படும் ஒரு பொருள் ஆகும். மேலும் பல தாந்திரீகத்திற்கு அதிகளவு பயன்படுத்தப்படும் பொருள் அன்றும் சொல்லலாம்.

ஆக நமது வீட்டில் சமையலறையில் எப்பொழுதும் இருக்கும் கடுகு, டப்பாவில் வெள்ளி மற்றும் செவ்வாய் ஆகிய இரு தினங்களில் ஐந்து ரூபாய் நாணயத்தை யாருக்கும் தெரியாமல் ஒளித்து வைக்க வேண்டும். இவ்வாறு இந்த முறையை ஒரு மாதம் வரை செய்து வர வேண்டும்.

ஐந்து ரூபாய் நாணயத்தை நீங்கள் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் வைக்கம், ஆனால் குளித்துவிட்டு தான் வைக்க வேண்டும். பெண்கள் மாதவிடாய் காலங்களில் மட்டும் இந்த முறையை செய்யாமல் இருப்பது நல்லது.

ஒரு மாதத்திற்கு பிறகு அந்த அனைத்து நாணயங்களையும் எடுத்து யாருக்காவது தானம் செய்யலாம். அதாவது காசாக கொடுப்பதற்கு பதில் எதாவது ஒரு பொருளாக வாங்கி கொடுப்பது மிகவும் சிறப்பு. உதாரணத்திற்கு ஏதாவது உணவு வாங்கி கொடுக்கலாம்.

ஏழை குழந்தைகளுக்கு ஏதாவது நோட்டு புத்தகம் வாங்கி கொடுக்கலாம். இவ்வாறு வாங்கிக்கொடுக்கும் போது நீங்கள் வெள்ளி செவ்வாய் கிழமைகளில் வாங்கி கொடுக்க கூடாது, மற்ற கிழமைகளில் வாங்கி கொடுக்கலாம்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
கடன் தொல்லை நீங்கி செல்வம் சேர இதை மட்டும் மறக்காமல் செய்யுங்கள்..!

குறிப்பு:

கடுகு டப்பாவில் ஐந்து ரூபாய் நாணயத்தை மட்டும் தான் வைக்க வேண்டும், வேறு எந்த நாணயத்தையும் வைக்க கூடாது.

ஏன் என்றால் லட்சுமி குபேரருக்கு பிடித்தமான எண் ஐந்து ஆக ஐந்து ரூபாய் நாணயத்தை கடுகு டப்பாவில், யாருக்கும் தெரியாமல் செவ்வாய் மற்றும் வெள்ளி கிழமைகளில் வைத்து வருவதன் மூலம். உங்கள் நிதி நிலையில் மிக பெரிய மாற்றத்தை காணமுடியும்.

  • கடுகு டப்பாவில் கடுகு நிரம்பி இருக்க வேண்டும். கொஞ்சமாக இருக்க கூடாது.
  • அதேபோல் இந்த கடுகை சமையலுக்கு பயன்படுத்த கூடாது. கால் படாத இடத்தில் கொட்டிவிடலாம்.
  • மூன்று மாதங்களுக்கு ஒரு முறை டப்பாவில் இருக்கும் கடுகை மாற்றிவிட வேண்டும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
வீட்டில் பணவரவு பலமடங்கு அதிகரிக்க சந்தனமும் ஏலக்காயும் போதும்..!

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மீக தகவல்கள்
Advertisement