பணம் வரவு அதிகரிக்க மிளகு பரிகாரம்..! Pana Varavu Athikarikka Milagu..!
ஆன்மிக வாசகர்களுக்கு அன்பு வணக்கம்.. இன்று நாம் நமது சமையலறையில் இடம்பெற்றிருக்கும் மிளகை வைத்து ஒரு அற்புதமான பரிகாரத்தை பற்றி தான் பார்க்க போகிறோம். ஆன்மிக ரீதியாகவும், அறிவியல் ரீதியாகவும் மிளகிற்கு ஒரு அற்புத குணம் உள்ளது. மிளகு எப்படி நமது உடலுக்கு நல்ல பலனை ஏற்படுத்தி கொடுப்பது போல் ஆன்மிக ரீதியாக நல்ல பலனை கொடுக்கும். பைரவருக்கு தேய்பிறை அஷ்டாமி அன்று மிளகு தீபம் ஏற்றினால் கடன் பிரச்சனை தீருமோ அதுபோல், இங்கு கூறப்பட்டுள்ள பரிகாரத்தை செய்வதினால் வீட்டில் பணம் வரவு அதிகரிக்கும். சரி வாங்க அது என்ன பரிகாரம் எப்படி செய்ய வேண்டும் என்பது குறித்த விவரங்களை இப்பொழுது பார்க்கலாம்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
அள்ள அள்ள குறையாத பணவரவு உண்டாகும், பண தட்டுப்பாடு என்ற பேச்சுக்கே இடமிருக்காது!!
பரிகாரம் செய்யும் முறை – Pana Varavu Athikarikka Milagu:
இந்த பரிகாரத்தை நீக்கல் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் செய்யலாம், ஆனால் குளித்துவிட்டு தான் செய்ய வேண்டும்.
ஆக குளித்துவிட்டு உங்கள் வீட்டைவிட்டு வெளியே வரவும், அப்படி வரும்போது உங்கள் கையில் ஐந்து மிளகை கையில் எடுத்துக்கொண்டு வரவும்.
அவ்வாறு எடுத்து வரும் மிளகை கிழக்கை நோக்கி ஒரு மிளகை போடவும், மேற்கை நோக்கி ஒரு மிளகை போடவும், வடக்கை நோக்கி ஒரு மிளகை, தெற்கை நோக்கி ஒரு மிளகை போடவும், பின்பு மீதம் ஒரு மிளகு இருக்கும் அதனை வானத்தை நோக்கி தூக்கி எறியவும் அவ்வளவு தான் பரிகாரம்.
இந்த பரிகாரத்தை தொடர்ந்து 41 நாட்கள் செய்துவர வேண்டும். இவ்வாறு செய்வதினால் பண வரவு அதிகரிப்பதை நீங்களே உணர முடியும்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
பணக்கஷ்டத்தையும் போக்கி பணவரவை அதிகரிக்க இந்த ஒரு வேர் போதும்..!
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |