சித்ரா பெளர்ணமி அன்று இதை மட்டும் செய்யுங்கள் உங்கள் வீட்டில் பணக்கஷ்டமே ஏற்படாது..!

Advertisement

Pana Varavu Athikarikka Pariharam at Home in Tamil

இன்றைய கால கட்டத்தில் பணம் தான் எல்லாம் என்றாகி விட்டது. அதாவது இன்றைய சூழலில் பணம் இன்றி நம்மால் ஒரு சிறிய பொருளை கூட வாங்க முடியாது. இப்படி பணத்தின் தேவை என்பது அனைத்து இடங்களிலும் நிறைந்துள்ளது. அதனால் நாம் அனைவருமே பணம் சம்பாதிக்க விடாமுயற்சி எடுப்போம். ஆனால் ஒரு சில நேரங்களில் விடாமுயற்சியுடன் அதிர்ஷ்டமும் இருந்தால் மட்டுமே நமக்கு தேவையான பணம் கிடைக்கும்.

நீங்கள் சிந்தனை செய்யலாம் விடாமுயற்சி செய்யலாம் ஆனால் அதிர்ஷ்டத்தை எவ்வாறு நமது பக்கம் வரவழைப்பது என்று, உங்கள் சிந்தனைக்கான பதிலாக தான் இன்றைய பதிவு அமையும். அதாவது அதிர்ஷ்டத்தை நமது பக்கம் வரவழைப்பதற்கு சில பூஜை பரிகாரங்கள் செய்ய வேண்டும். அதுவும் சரியான நாள் மற்றும் நேரத்தில்,அதனால் இன்றைய பதிவில் அதிர்ஷ்டத்தை நமது பக்கம் வரவழைப்பதற்கு உதவும் ஒரு பரிகாரத்தை பற்றி விரிவாக காண போகின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன் பெறுங்கள்.

இதையும் தெரிந்து கொள்ளுங்கள் ⇒ சித்ரா பெளர்ணமி அன்று சந்திர கிரகணம் இந்த 5 ராசிக்கு கடும் ஆபத்து

Pournami Day Pariharam in Tamil:

Pournami Day Pariharam in Tamil

உங்கள் வீட்டின் பணவரவு அதிகரிக்க சித்ரா பௌர்ணமி அன்று என்ன பரிகாரம் செய்ய வேண்டும் என்பதை பற்றி விரிவாக காணலாம் வாங்க.

முதலில் நமது பூஜை அறையில் நெய் தீபம் ஒன்றை ஏற்றி கொள்ளுங்கள். பின்னர் 1 ரூபாய் நாணயம் ஒன்றை எடுத்து கொள்ளுங்கள். அதனுடனே வசம்பு துண்டு ஒன்றை எடுத்து கொள்ளுங்கள். 

இரண்டையும் உங்கள் கையில் வைத்து கொண்டு பௌர்ணமி நிலவை கைகூப்பி வணங்குங்கள். அப்படி வணங்கும் போது உங்களது பிரார்த்தனை அனைத்தையும் கூறி வணங்குங்கள்.

இதையும் தெரிந்து கொள்ளுங்கள் ⇒ சித்ரா பௌர்ணமி சிறப்பு

பிறகு நீங்கள் வைத்துள்ள ரூபாய் நாணயம் மற்றும் வசம்பு இரண்டையும் ஒரு மஞ்சள் துணியில் வைத்து நன்கு முடிந்து கொள்ளுங்கள்.

அதனை உங்கள் வீட்டின் பணம் வைக்கும் இடத்தில் வைத்து கொள்ளுங்கள். பொதுவாக வசம்பிற்கு வசிய சக்தி அதிகம் என்பதால் அதனை நாம் பணம் வைக்கும் இடத்தில் வைப்பது மிகவும் நன்மையை அளிக்கும்.

இந்த பரிகாரத்தை நீங்கள் பௌர்ணமி நாளில் மாலை 6 மணி முதல் 7 மணிக்குள் செய்வது நல்ல பலனை அளிக்கும்.

இதையும் தெரிந்து கொள்ளுங்கள் ⇒ சித்ரா பௌர்ணமி வாழ்த்துக்கள்

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்
Advertisement