Pana Varavu Athikarikka Pariharam
இன்றைய காலகட்டத்தில் மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் தனது வாழ்க்கை நடத்துவதற்கு மிக மிக முக்கியமாக தேவைப்படுவது பணம் மற்றும் செல்வங்கள் தான். அதனால் அனைவருமே தங்களுக்கு தேவையான பணத்தை மிகவும் கடின உழைப்பின் மூலம் சம்பாதிக்கிறார்கள். ஆனால் அவையாவும் நமது அன்றாட வாழ்விற்கு செலவாகிவிடுகிறது. அதனால் நமக்கு மிக மிக முக்கியமான நேரத்தில் நமக்கு தேவையான பணம் நம்மிடம் இருப்பதில்லை. எனவே நமக்கு தேவையான பணத்தை நாம் மற்றவர்களிடம் சென்று கடனாக வாங்க வேண்டிய நிலை ஏற்படும்.
மேலும் அதனை திருப்பி செலுத்துவதற்கும் நமக்கு பல பிரச்சனைகள் ஏற்படும். அதனால் இன்றைய பதிவில் உங்களுக்கு உள்ள அனைத்து கடன் பிரச்சனைகளையும் போக்கி பணவரவை அதிகரிக்க உதவும் ஒரு எளிமையான வழிமுறையை பற்றி விரிவாக காண இருக்கின்றோம். எனவே இந்த பதிவை முழுதாக படித்து அது என்ன வழிமுறை என்று அறிந்து கொண்டு அதனை செய்து பயன்பெற்று கொள்ளுங்கள்.
தீராத கடனும் தீர ஆடி மாதத்தின் செவ்வாய் கிழமை தோறும் பூஜை அறையில் இதை மட்டும் செய்யுங்கள் போதும்
Aadi Pooram Pariharam in Tamil:
பொதுவாக மாதங்களிலேயே மிகவும் சிறப்பான மாதம் என்று ஆடி மாதத்தை கூறுவார்கள். ஏனென்றால் கடவுள் வழிபாடுகளுக்கு இந்த மாதம் தான் மிக மிக உகந்ததாக உள்ளது.
அதேபோல் இந்த மாதத்தில் அம்பிகை வழிபாடுகள் பல நடைபெறும். அப்படிப்பட்ட பல சிறப்புகளை தனக்குள் கொண்டுள்ள ஆடி மாதத்தில் வரும் ஆடிப்பூரம் அன்று, நீங்கள் உங்கள் வீட்டின் பூஜை அறையில் இங்கு கூறப்பட்டுள்ள 3 பொருட்களை வாங்கி வைத்தீர்கள் என்றால், உங்கள் வீட்டில் உள்ள அனைத்து பண பிரச்சனைகளும் நீங்கி பணவரவு அதிகரிக்கும்.
சரி வாங்க நண்பர்களே அவை என்னென்ன பொருட்கள் என்பதை பற்றி பார்க்கலாம்.
மஞ்சள் குங்குமம்:
ஆடிப்பூரத்தன்று உங்கள் வீட்டின் பூஜை அறையில் புதிதாக மஞ்சள் குங்குமத்தை வாங்கி வைத்தீர்கள் என்றால் உங்கள் வீட்டில் மங்களம் அதிகரிக்கும். இதனால் செல்வசெழிப்பும் அதிகரிக்கும்.
ஆடிப் பூரத்தில் குழந்தை வரம் கிடைக்க என்ன செய்ய வேண்டும் தெரியுமா
சர்க்கரை:
அடுத்து ஆடிப்பூரத்தன்று உங்கள் வீட்டின் பூஜை அறையில் புதிதாக சுக்கிரபாகவனுக்கு உரிய இனிப்பு சுவையுடைய சர்க்கரையை வாங்கி வைத்தீர்கள் என்றால் உங்கள் வீட்டில் என்றும் சுக்கிர பகவானின் அருள் நிறைந்திருக்கும். அதனால் உங்கள் வீட்டில் பணவரவும் அதிகரிக்கும்.
கல் உப்பு:
இறுதியாக மஹாலக்ஷ்மி தயார் வாசம் செய்யக்கூடிய கல் உப்பினை உங்கள் பூஜை அறையில் ஆடிப்பூரத்தன்று வாங்கி வைத்தீர்கள் வீட்டில் உள்ள அனைத்து பண கஷ்டங்களும் நீங்கி மஹாலக்ஷ்மி தயாரின் முழு அருளையும் பெறுவீர்கள்.
குறிப்பு: மேலே கூறியுள்ள மூன்று பொருட்களையும் அல்லது மூன்றில் ஏதாவது ஒன்றையாவது உங்களால் முடிந்த அளவிற்கு வாங்கி வைத்து கொள்ளுங்கள்.
அதேபோல் இந்த பொருட்களை எல்லாம் வாங்கி வைத்துவிட்டு பால் பாயசம் செய்து நெய்வேத்தியமாக படைத்து பூஜை செய்தால் இன்னும் அதிக பலன் கிடைக்கும்.
வீட்டில் என்றும் செல்வம் செழிக்க ஆடி அமாவாசை அன்று வீட்டின் நிலைவாசலில் இதை மட்டும் வையுங்க
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |