பணவரவை அதிகரிக்க வெள்ளிக்கிழமை அன்று செய்ய வேண்டியவை
பொதுவாக வீட்டில் எவ்வளவு பணம் இருந்தாலும் போதும் என்ற மனநிலை வராது. பணம் நிறைய வைத்திருப்பவர்களே இப்படி நினைத்தால் பணம் இல்லாத ஏழ்மையான மக்கள் பணத்தை எப்படி பெருக்குவது என்று தான் யோசிப்பார்கள். அதிலும் பணத்தை சம்பாதிப்பார்கள் அவை அந்த பணம் எங்கே போகிறது என்றே தெரியாது. அப்படி சம்பாதிக்கின்ற பணமானது வீட்டில் தங்கி பணத்தை பெருக்குவதற்கு ஆன்மிகத்தில் ஏதும் வழிகள் இருக்கிறதா என்று தான் யோசிப்பார்கள். அந்த வகையில் அவர்களுக்கு உதவிடும் வகையில் வீட்டில் பணம் தங்குவதற்கு எளிமையான பரிகாரத்தை பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க..
வெள்ளிக்கிழமை செய்ய வேண்டியவை:
வெள்ளிக்கிழமையானது மகாலட்சுமிக்கு உரிய நாளாக கருதப்படுகிறது. அதனால் இந்நன்னாளில் சுபகாரியங்களை தயக்கம் இல்லாமல் செய்வார்கள்.
அதனால் இந்நாளில் நீங்கள் வீட்டை எல்லாம் சுத்தம் செய்து கழுவி விடவேண்டும். அதன் பிறகு வாசற்படியில் மஞ்சள் தூளை சிறிதளவு தண்ணீரில் கலந்து அதனுடன் கற்பூரத்தை சேர்த்து கலந்து கொள்ளவும். இதனால் வீட்டின் நிலைவாசப்படியில் வைக்க வேண்டும். அதன் பிறகு மேல் குங்குமம் வைக்க வேண்டும்.
அதன் பிறகு விளக்கேற்றும் போது தாமரை திரியால் விளக்கேற்ற வேண்டும். இப்படி செய்வதால் குபேரரின் அருள் கிடைக்கும்.
எவ்ளோ கடன் இருந்தாலும் வெல்லம் மட்டும் போதும்.. கடன் தீர்ந்து பணம் பெருகும்..
நீங்கள் சாமி படம் எந்த திசையில் இருக்கிறதோ அந்த திசையில் தான் முகம் பார்க்கும் கண்ணாடியை வைக்க வேண்டும்.
மகாலட்சமிக்கு படத்திற்கு தாமரை இதழினால் பூஜை செய்ய வேண்டும். இப்படி செய்வதால் பணவரவு அதிகரிக்கும்.
வீட்டில் மாலை நேரத்தில் விளக்கேற்றி பூஜை செய்து சாம்பிராணி காட்ட வேண்டும். இது போல் நீங்கள் தொடர்ந்து செய்வதால் வீட்டில் உள்ள கெட்ட சக்திகள் நீங்கி நேர்மறை ஆற்றலை அதிகரிக்க உதவுகிறது.
அடுத்து அரசமரத்தை 11 முறை சுற்றி வர வேண்டும், அரசமரத்தை சுற்றி வந்த பிறகு விநாயகருக்கு விளக்கேற்ற வேண்டும்.
மேல் கூறப்பட்டுள்ளது போல் வெள்ளிக்கிழமைகளில் தொடர்ந்து செய்து வர வேண்டும், இப்படி செய்வதால் வீட்டில் பணவரவை அதிகரிப்பதற்கான வழிகளை கொடுக்கிறது.
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |