திடீர் பணவரவிற்கு வெற்றிலையுடன் இந்த ஒரு பொருளை சேர்த்து வையுங்க போதும்..!

Advertisement

Pana Varavu Athikarikka Vetrilai Pariharam in Tamil

பொதுவாக மனிதனாக பிறந்த அனைவருக்கும் ஏதாவது ஒரு எண்ணம் அல்லது ஆசை கண்டிப்பாக இருக்கும். அதாவது ஒரு சிலருக்கு நன்றாக பணம் சம்பாதிக்க வேண்டும். ஒரு சிலருக்கு தானும் தனது குடும்பமும் என்றும் சந்தோசமாக இருக்க வேண்டும் போன்ற பல வகையான எண்ணங்களும் ஆசைகளும் இருக்கும். இவ்வாறு நமது மனதில் உள்ள அனைத்தையும் நிறைவேற்றி கொள்வதற்காக நமக்கு முதலில் தேவைப்படுவது பணம் தான். அவ்வாறு நமக்கு தேவையான பணத்தை சம்பாதிப்பதற்காக நாம் கடினமாக உழைப்போம். ஆனாலும் எந்த பலனும் இருக்காது. அதனால் தான் ஆன்மிகத்தில் சில வழிமுறைகளை செய்தால் நமது வீட்டின் பணவரவு அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. அதனால் தான் இன்றைய பதிவில் நமது வீட்டின் பணவரவை அதிகரிக்க உதவும் ஒரு பரிகாரத்தை பற்றி பார்க்க இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து இதில் கூறியுள்ள பரிகாரத்தை செய்து பயன் பெறுங்கள்.

எப்பேர்ப்பட்ட பணக்கஷ்டமும் தீர்ந்து போகும் செய்வாய்கிழமையில் இதை மட்டும் செய்தால் போதும்

பண வரவு அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்: 

பணம் சேர பரிகாரம்

இன்றைய சூழலில் பணம் தான் அனைத்து என்றாகிவிட்டது. அப்படிப்பட்ட பணம் நம்மிடம் இல்லாமல் இருந்தால் நமது வாழ்க்கை மிகவும் கஷ்டமாக இருக்கும். அதனால் தான் நமது வீட்டின் பணவரவை அதிகரிக்க உதவும் ஒரு எளிமையான பரிகாரத்தை பற்றி விரிவாக இங்கு காணலாம் வாங்க..

தேவையான பொருட்கள்:

  1. வெற்றிலை – 2
  2. ஏலக்காய் – 3
  3. கிராம்பு – 3 
  4. சிவப்பு நிற துணி – 1 

30 ஆண்டுக்குப் பிறகு சனியால் ஏற்படும் கேந்திர திரிகோண ராஜயோகம் இந்த ராசிகளின் காட்டில் பணமழை

பணவரவு அதிகரிக்க பரிகாரம்:

முதலில் நாம் எடுக்க போகும் வெற்றிலையின் நுனிப்பகுதி நன்கு கூர்மையாக இருக்க வேண்டும். அதே போல் நாம் எடுத்துள்ள வெற்றிலையின் காம்பினை பிரித்து எடுத்து விடவே கூடாது.

இப்பொழுது இந்த பரிகாரத்தை எவ்வாறு செய்வது என்பதை பார்க்கலாம். முதலில் நாம் எடுத்து வைத்துள்ள வெற்றிலையை நன்கு சுத்தம் செய்து கொள்ளுங்கள். பிறகு அதனின் பின்புறத்தில் நாம் எடுத்து வைத்துள்ள 3 ஏலக்காய் மற்றும் 3 கிராம்பு ஆகியவற்றை வைத்து நன்கு மடித்து கொள்ளுங்கள்.

இதனை நாம் எடுத்து வைத்துள்ள சிவப்பு நிற துணியில் வைத்து நன்கு மூட்டை போல் கட்டி கொள்ளுங்கள். பின்னர் இதனை உங்கள் வீட்டின் பூஜை அறையில் வைத்து நன்கு பூஜை செய்யுங்கள்.

அதன் பிறகு இதனை உங்களின் கண்பார்வை அதிகமாகப்படும் இடத்தில் வைத்து கொள்ளுங்கள். அப்படி இல்லையென்றால் இதனை உங்களின் பர்ஸ் அல்லது ஹேண்ட் பேக்கில் வைத்து கொள்ளுங்கள்.

பரிகாரம் செய்யும் நாள் மற்றும் நேரம்:

இந்த வெற்றிலை, ஏலக்காய் மற்றும் கிராம்பு ஆகியவற்றை தினமும் மாற்றி கொள்ள வேண்டும். அதே போல் இந்த பரிகாரத்தை தினமும் காலை 6.00 மணி மேல் 7.00 மணிக்குள் செய்து கொள்ளுங்கள்.

கடன் தீர்ந்து வீட்டின் பணவரவு அதிகரிக்க 1 ரூபாய் நாணயம் மட்டும் போதும்

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்
Advertisement